Published:Updated:

தடைகளைத் தாண்டி வளர்கிறது நம் பொருளாதாரம்!

தடைகளைத் தாண்டி வளர்கிறது நம் பொருளாதாரம்!
பிரீமியம் ஸ்டோரி
தடைகளைத் தாண்டி வளர்கிறது நம் பொருளாதாரம்!

ஹலோ வாசகர்களே..!

தடைகளைத் தாண்டி வளர்கிறது நம் பொருளாதாரம்!

ஹலோ வாசகர்களே..!

Published:Updated:
தடைகளைத் தாண்டி வளர்கிறது நம் பொருளாதாரம்!
பிரீமியம் ஸ்டோரி
தடைகளைத் தாண்டி வளர்கிறது நம் பொருளாதாரம்!

ல்வேறு தடைகளைத் தாண்டியும் நம் நாடு வேகமாக முன்னேறி வருகிறது என்பதற்கு ஆதாரமாக பல செய்திகள் கடந்த சில நாள்களில் வெளியாகியுள்ளன. 2017-18-ம் ஆண்டில் நம் நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சி 7.4 சதவிகிதமாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறது ஆசிய வளர்ச்சி வங்கி. இன்றைய நிலையில், உலக அளவில் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா முதலாவது இடத்தில் இருக்கிறது.

அது மட்டுமல்ல, சேவைத் துறைக்கான பி.எம்.ஐ குறியீடு, கடந்த இரு மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதத்தில் பி.எம்.ஐ குறியீடு 50.3 புள்ளிகளாகவே இருந்தது, இப்போது 51.5 புள்ளிகளாக அதிகரித்திருக்கிறது.

தடைகளைத் தாண்டி வளர்கிறது நம் பொருளாதாரம்!

இவையெல்லாம் எதைக் காட்டுகிறது? பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின் ஏற்பட்ட தடங்கல்களிலிருந்து நமது தொழில் துறை மீண்டெழுந்து, வேகமாக வளர்ந்து வருவதையே காட்டுகிறது. பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பரில் உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தபோது, ‘ஐயகோ, இனி நாட்டின் வளர்ச்சி அதலபாதாளத்துக்குச் சென்றுவிடுமே’ என்று கதறியவர்கள் பலர். உலக அளவில் பெயர் பெற்ற பல நிறுவனங்கள்கூட, பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின் நம் நாட்டின்  ஜி.டி.பி 6.5% வரை குறையும் என்றார்கள். ஒரு நிறுவனம், நமது ஜி.டி.பி 4% அளவுக்குக்கூட இறங்கலாம் என்று பயமுறுத்தியது.

தடைகளைத் தாண்டி வளர்கிறது நம் பொருளாதாரம்!


நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு கொஞ்சம் சுணங்கிய தொழில் வளர்ச்சி, பிற்பாடு சுதாரித்துக்கொண்டு வேகமாக முன்னேற ஆரம்பித்திருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம், வளர வேண்டும் என்று நினைக்கும் நம் மக்களின் பாசிட்டிவான அணுகுமுறைதான். இன்றைய நிலையில், கஷ்டப்பட்டு தொழில் செய்தாலும் பரவாயில்லை; நாம் வளர வேண்டும் என்கிற எண்ணம் நம் நாட்டில் பெருவாரியான மக்களிடம் நிறையவே இருக்கிறது. இந்த எண்ணம்தான், குறுகிய காலத்தில் நம் நாட்டின் வளர்ச்சியை முன்னேற்றப் பாதைக்குத் திருப்பி விட்டிருக்கிறது.

கஷ்டமான காலத்திலேயே நம்மால் இந்த அளவுக்கு முன்னேற்றம் காண முடிகிறதெனில், ஜி.எஸ்.டி சட்டம் நடைமுறைக்கு வந்து, ஒரே ஒரு வரி மட்டுமே நடைமுறையில் இருக்கும் காலத்தில், தொழில் துறை வளர்ச்சி இன்னும் அதிவேகத்தில் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் மீது அணுகுண்டு வீசப்பட்டபிறகு, சாம்பலில் இருந்து மீண்டுவரும் ஃபீனிக்ஸ் பறவைபோல, அந்த நாட்டு மக்கள் பாதிப்பிலிருந்து வெளியே வந்து, உலகத்தையே ஆச்சர்யப்படுத்தினார்கள். அது மாதிரியான ஒரு பாசிட்டிவ் சிந்தனைதான் நம் மக்களிடம் இப்போது இருக்கிறது. இந்த பாசிட்டிவ் மனப்பான்மையை ஊக்கப்படுத்துகிற மாதிரியான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுத்தாலே போதும், நம் நாடு மென்மேலும் வளர்ச்சியடையும்.

- ஆசிரியர்