Published:Updated:

நிதிப் பற்றாக்குறை இனியாவது குறையட்டும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நிதிப் பற்றாக்குறை இனியாவது குறையட்டும்!
நிதிப் பற்றாக்குறை இனியாவது குறையட்டும்!

ஹலோ வாசகர்களே..!

பிரீமியம் ஸ்டோரி

மது நாட்டின் நிதிப் பற்றாக்குறை கட்டுக்குள் இருந்தாலும், தொடர்ந்து அதிக அளவிலேயே அது இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் பொருளாதார ரீதியில் நாம் பெரும் வளர்ச்சிகண்ட அதேநேரத்தில், நம் நிதிப் பற்றாக்குறையும் குறிப்பிட்டுச் சொல்கிற அளவில் இருந்துகொண்டே இருக்கிறது. ஓரளவுக்கு மேல் குறையாமலேயே இருக்கும் இந்த நிதிப் பற்றாக்குறையை, அடுத்த சில ஆண்டுகளில் குறைப்பதற்கான இலக்கு இப்போது நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தகுந்த மாற்றமாகும். 

நிதிப் பற்றாக்குறை இனியாவது குறையட்டும்!

மாநிலங்களவை உறுப்பினர் என்.கே.சிங் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவானது, எதிர்வரும் ஆண்டுகளில் நம் கடன் சுமை எவ்வளவுக்குக் குறைக்கப்பட வேண்டும் என்பது குறித்து தெளிவான இலக்குகளை நிர்ணயம் செய்துள்ளது. நமது    ஜி.டி.பி-யில் 49.4 சதவிகிதமாக இருக்கும் கடனை, 2023-ம் ஆண்டில் 38.7 சதவிகிதமாகவும், நமது ஜி.டி.பி-யில் 3.5 சதவிகிதமாக இருக்கும் நிதிப் பற்றாக்குறை 2023-ல் 2.5% அளவுக்கும், தற்போது 2.3 சதவிகிதமாக இருக்கும் வருமானப் பற்றாக்குறை 0.8 சதவிகிதமாகவும் இருக்க வேண்டும் என்றும் இலக்குகளை நிர்ணயத்துள்ளன.

ஆறு ஆண்டுகளில் நமது நிதிப் பற்றாக்குறையை 1% அளவுக்குக் குறைக்க முடிவெடுப்பது நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய வகையில் உதவும். அதேபோல, நாட்டின் பல்வேறு திட்டங்களை இன்னும் முழு வீச்சில் நடைமுறைப்படுத்த வேண்டுமெனில், அதற்கு நிறையவே நிதி தேவைப்படும்.  தற்போதிருக்கும் நிதிப் பற்றாக்குறையை சுமார் 1.5% அளவுக்குக் குறைக்க இலக்கு நிர்ணயித்திருப்பதும் நல்ல விஷயமே.

நிபுணர் குழு இந்த இலக்குகளை எல்லாம் நிர்ணயம் செய்தாலும், இந்த இலக்குகளை அடைவதற்கான

நிதிப் பற்றாக்குறை இனியாவது குறையட்டும்!

நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம்தான் எடுக்க வேண்டும். அண்மையில் எடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் கறுப்புப் பணம் புழங்குவது குறையும்; ஜி.எஸ்.டி சட்டம் நடைமுறைக்கு வருவதினால், அரசின் வருமானம் பெருகும். என்றாலும், இந்த நடவடிக்கைகளை மட்டுமே நம்பியிருக்காமல், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், நிதி ஆதாரங்களைப் பெருக்குவதற்குமான பல சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டும். வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் பல்வேறு விஷயங்களைக் களைய வேண்டும். சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

நிதிப் பற்றாக்குறையைப் பொறுத்தவரை, முன்பு திட்டமிட்ட எதிர்கால இலக்கு ஏதுமின்றி இருந்தோம். இப்போது இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். இனி இந்த இலக்கினை அடைவதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பதே நம் ஒரே கோரிக்கை. 

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு