Published:Updated:

மல்லையா இனியும் தப்பிக்க முடியாது!

மல்லையா இனியும் தப்பிக்க முடியாது!
பிரீமியம் ஸ்டோரி
மல்லையா இனியும் தப்பிக்க முடியாது!

ஹலோ வாசகர்களே..!

மல்லையா இனியும் தப்பிக்க முடியாது!

ஹலோ வாசகர்களே..!

Published:Updated:
மல்லையா இனியும் தப்பிக்க முடியாது!
பிரீமியம் ஸ்டோரி
மல்லையா இனியும் தப்பிக்க முடியாது!
மல்லையா இனியும் தப்பிக்க முடியாது!

கைதான சில மணி நேரத்திலேயே பெயில் வாங்கி, சட்ட நடவடிக்கையின் கிடுக்கிப்பிடியிலிருந்து தற்காலிகமாகத் தப்பித்திருக்கிறார் விஜய் மல்லையா. என்றாலும், அவரை இந்தியாவுக்குக் கொண்டுவரும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையைப் பார்க்கும்போது, இனியும் அவர் தப்ப முடியாது என்பது தெளிவாகிறது.

விமான கம்பெனியை நடத்த பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, லண்டனுக்குத் தப்பிச் சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் விஜய் மல்லையா. வங்கிகளிடமிருந்து வாங்கிய கடன் தொகையைத் திரும்பக் கட்டாமல் இருக்கும் நிலையில், கிட்டத்தட்ட 40 மில்லியன் அமெரிக்க டாலரை அவரது வாரிசுகளுக்குப் பரிசாகத் தந்திருப்பதை அமலாக்கத் துறை கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறது.

மல்லையா இனியும் தப்பிக்க முடியாது!

லண்டனில் இருக்கும் அவரை, நம் நாட்டுக்கு அழைத்துவருவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இதற்கு மத்திய அரசாங்கம் பல ஆண்டு காலம் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டியிருக்கும். ஆனால், இந்தத் தொடர் முயற்சியைச் செய்வதன் மூலம் இனிவரும் காலத்தில், தொழில் கடன் வாங்கிவிட்டு, அதைத் திரும்பத் தராமல் ஏமாற்றிவிடலாம் என்ற எண்ணம் யார் மனதிலும் எழாதபடிக்கு மத்திய அரசு செய்ய முடியும்.

தொழில் தொடங்குவதாகச் சொல்லிவிட்டு, வங்கிகளிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயைக் கடனாக வாங்குவதும், பிற்பாடு தொழில் சரியாக நடக்கவில்லை என்கிற காரணத்தைக் காட்டி, அந்தக் கடனைத் திரும்பத் தராமல் விட்டுவிடுவதும் கடந்த பத்தாண்டு ஆண்டுகளில் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாக மாறிவிட்டன. இதனால் வங்கிகளின் வாராக் கடன் அளவு மிகப் பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது. வாராக் கடன் பிரச்னையினால், மொத்தமுள்ள பொதுத் துறை வங்கிகளில் சரிபாதியானவை ‘சரியான திருத்த நடவடிக்கை’க்கு (Prompt corrective action) உள்ளாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக, தர ஆய்வு நிறுவனமான ஃபிட்ச் எச்சரித்திருக்கிறது.

ஒரு தொழில் நல்ல முறையில் நடந்தாலும், மோசமாகச் செயல்பட்டாலும், அதற்கான பொறுப்பை அந்தத் தொழில் தொடங்கியவர்தான் ஏற்க வேண்டும். ஒரு தொழில் நன்றாக நடக்கும்போது கிடைக்கும் லாபமானது அவருக்கு மட்டுமே சொந்தம் என்கிறபோது, நஷ்டத்தையும் அவரே பொறுப்பேற்க வேண்டும். தொழிலில் நஷ்டம் வந்துவிட்டது என்பதால், வாங்கிய கடன் பணத்தைத் திரும்பக் கட்டாமல் இருக்க அனுமதிக்கவே கூடாது.

மக்களிடம் இருந்து வாங்கிய டெபாசிட் பணத்தைத்தான் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடனாகத் தருகின்றன. தொழில் நிறுவனங்கள், வாங்கிய கடனைத் திரும்பத் தரவில்லை என்பதற்காக, மக்களிடமிருந்து வாங்கிய டெபாசிட் பணத்தை வங்கிகள் திரும்பத் தராமல் இருக்க முடியாது. இந்த உண்மையை எல்லாத் தொழிலதிபர்களுக்கும் உணரச் செய்தாலே போதும், இனி வாராக் கடன் என்பதை உருவாகாமலே தடுக்க முடியும்.

- ஆசிரியர்