Published:Updated:

வளர்ச்சியை அதிகப்படுத்தும் ஜி.எஸ்.டி-யே வருக!

வளர்ச்சியை அதிகப்படுத்தும் ஜி.எஸ்.டி-யே வருக!
பிரீமியம் ஸ்டோரி
வளர்ச்சியை அதிகப்படுத்தும் ஜி.எஸ்.டி-யே வருக!

வளர்ச்சியை அதிகப்படுத்தும் ஜி.எஸ்.டி-யே வருக!

வளர்ச்சியை அதிகப்படுத்தும் ஜி.எஸ்.டி-யே வருக!

வளர்ச்சியை அதிகப்படுத்தும் ஜி.எஸ்.டி-யே வருக!

Published:Updated:
வளர்ச்சியை அதிகப்படுத்தும் ஜி.எஸ்.டி-யே வருக!
பிரீமியம் ஸ்டோரி
வளர்ச்சியை அதிகப்படுத்தும் ஜி.எஸ்.டி-யே வருக!

ஹலோ வாசகர்களே..!

ரக்கு மற்றும் சேவை வரி (GST) நடைமுறைக்கு வந்தேவிட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்தபின்பு வரித் துறையில் இத்தனை புரட்சிகரமானதொரு மாற்றத்தை எந்த அரசாங்கமும் கொண்டுவந்ததில்லை. அந்த வகையில், குறித்த காலத்தில் இந்தப் புதிய வரிவிதிப்பு முறையினைக் கொண்டுவர முனைப்போடு செயல்பட்ட பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியையும் நிச்சயம் பாராட்டலாம்.

வளர்ச்சியை அதிகப்படுத்தும் ஜி.எஸ்.டி-யே வருக!

ஆனாலும், அரசின் வேலை இத்துடன் முடிந்துவிடவில்லை. இந்த வரி விதிப்பினைச் சரியாகச் செயல்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டிய கட்டாயம் மத்திய அரசாங்கத்துக்கு உண்டு. குறிப்பாக, ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்தபின், பொருள்களின் விலை உயரும் என்கிற அச்சம் மக்களிடம் இருக்கிறது. அப்படி நடக்கும் பட்சத்தில், அதைத் தட்டிக்கேட்கிற தெளிவை மக்களிடம் உருவாக்குவது அரசின் கடமை. இந்த வரியைச் சாக்காக வைத்து வணிக நிறுவனங்களும் கொள்ளை லாபம் சம்பாதிக்க முயற்சிப்பதைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் துணிந்து எடுக்க வேண்டும்.

இந்த வரியைக் கட்டாமல் தப்பிப்பது எப்படி என்கிற கோணத்தில்தான் சில வணிக நிறுவனங்கள் இன்னும்கூட யோசித்து வருகின்றன. இந்தச் சிந்தனை தவறானது. மூலப்பொருள்களை வாங்கியதில் தொடங்கி, அதை இன்னொரு பொருளாக மாற்றி விற்பது வரை ஒரு வணிகர் கட்டிய வரியை அரசிடமிருந்து திரும்பப்பெற வேண்டுமானால், இந்த வரியைப் பிசிறு தவறாமல் பின்பற்றுவது அவசியம். இந்த வரியைக் கட்டாமல் தவிர்க்க நினைத்தால், தங்களுக்கு வந்துசேர வேண்டிய வரியும் கிடைக்காமலே போகும் என்பதை வணிகர்கள் மறக்கக் கூடாது.

இப்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள வரி விகிதங்கள் மாறவே மாறாது என்று சொல்ல முடியாது. எதிர்காலத்தில் இவை நிச்சயமாகக் குறையும் அல்லது கூடும். இதை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொண்டால், இந்த வரியை எதிர்மறையாகப் பார்க்க வேண்டிய அவசியமிருக்காது.  

எந்தவொரு விஷயமும் புதிதாக அறிமுகமாகும்போது குழப்பங்களும் சந்தேகங்களும் எழவே செய்யும். ஆனால், காலம் செல்லச்செல்லக் குழப்பங்கள் விலகி, தெளிவு பிறக்கும். ஜி.எஸ்.டி-யும் இதற்கு விதிவிலக்கல்ல.

பல்வேறு வரிகள் நடைமுறையில் இருந்தபோது, பலரும் உரிய வரியைக் கட்டாமல் எளிதில் தப்பிக்க முடிந்தது. இனி அப்படி நடக்க வாய்ப்பில்லை என்பதால், அரசின் வருமானம் பெருகி, பொருளாதாரம் வளர்ந்து, மக்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கும். அப்படிப்பட்ட வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும் இந்த ஜி.எஸ்.டி-யை வருக வருக என்று வரவேற்று, அதை மனதாரப் பின்பற்றுவோம்!         

- ஆசிரியர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism