பொதுத் துறை வங்கிகளை இணைப்பதற்கான அனுமதியைக் கொள்கை அளவில் அளித்திருக்கிறது மத்திய அமைச்சரவை. வங்கிகளை இணைக்கும் முடிவை எதிர்த்து வங்கி ஊழியர் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்து, சில நாள்களுக்கு முன்பு ஒருநாள் வேலைநிறுத்தம் மேற்கொண்டன.

இந்த நிலையில், வங்கிகளின் செயல்பாடற்ற கடன், (Non Performing Asset) ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. கடந்த இரு ஆண்டுகளில், அதாவது 2015 ஏப்ரல் முதல் 2017 மார்ச் வரையிலான காலத்தில், செயல்பாடற்ற கடன் ரூ.3.22 லட்சம் கோடியிலிருந்து ரூ.7.7 லட்சம் கோடியாக உயர்ந்தது. இந்த நிதியாண்டின் முதலாம் காலாண்டில் வங்கிகளின் செயல்பாடற்ற கடன் ரூ.8.3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்தக் கடன் இப்படியே பல்கிப் பெருகினால், 2019-ல் இது ரூ.10 லட்சம் கோடியை எட்டிவிடும். இது நமது ஜி.டி.பி-யில் சுமார் 8%. நமது பொருளாதார வளர்ச்சியே 6% என்கிறபோது, செயல்பாடற்ற கடன் 8 சதவிகிதமாக இருந்தால், கஷ்டப்பட்டு உழைத்து என்ன பயன்?
செயல்பாடற்ற கடன் என்னும் கேன்சர் நோய் புரையோடுவதைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனில், மூன்று விஷயங்களைக் கட்டாயம் செய்ய வேண்டும். ஒன்று, வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்க வேண்டும். வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்க ரூ.10 ஆயிரம் கோடி தரப்படும். வேண்டுமானால் கூடுதல் தொகைகூட மத்திய அரசு தரலாம். ஆனால், இந்த நடவடிக்கையால் செயல்பாடற்ற கடன் பிரச்னை ஓரளவுக்கு மட்டுமே குறையும்.

இரண்டாவதாக, வங்கிகளுக்கு இடையிலான இணைப்பு. செயல்பாடற்ற கடனை அதிக அளவு கொண்டுள்ள சிறிய வங்கியானது, குறைந்த அளவு செயல்பாடற்ற கடனை கொண்டுள்ள பெரிய வங்கியுடன் இணையும்போது, அந்தக் கடனை இன்னும் திறமையாக நிர்வகிக்க முடியும். ‘‘வங்கிகள் ‘கன்சாலிடேட்’ ஆக வேண்டுமெனில், சில வங்கிகள் ‘இறந்துபோவது’ தவிர, வேறு வழியில்லை’’ என்று சொல்லியிருக்கிறார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சுப்பாராவ். விரும்புகிறோமோ இல்லையோ, இனிவரும் காலத்தில் வங்கிகள் இணைப்பு என்பது தவிர்க்க முடியாத நிகழ்வாகவே இருக்கும்.

மூன்றாவதாக, அரசியல் தலையீட்டை அனுமதிக்காமல், சரியான நபர்களுக்கு மட்டுமே கடன் தருவது வங்கி அதிகாரிகளின் கடமை; வாங்கிய கடனைக் கட்டாயம் திரும்பத் தருவது கடன் வாங்கியவர்களின் கடமை. இந்த எண்ணத்தை இரு தரப்பினரிடமும் ஆழமாக விதைத்து விட்டால், ஏமாற்றும் நோக்கம் கொண்டவர்களை எளிதில் தடுத்து நிறுத்திவிடலாம். இதன் மூலம் செயல்பாடற்ற கடன் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணலாம். எல்லோரும் மனது வைத்தால், எந்தப் பிரச்னைக்குத்தான் தீர்வு கிடைக்காது?

- ஆசிரியர்