12 ஆண்டுகளை முடித்து, 13-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிற சமயத்தில், தொடர்ந்து ஆதரவளித்துவரும் வாசகர்களுக்கு நாணயம் விகடனின் கோடான கோடி நன்றி. கடந்த காலத்தைப்போல, கடந்த ஆண்டிலும் வாசகர்களுக்கு நட்புடன் பழகும் நண்பனைப்போல நாணயம் விகடன் வழி காட்டியது. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி நடைமுறைகளினால் மக்களும், வியாபாரிகளும் கஷ்டப்பட்டபோது, அவர்களுக்கு எளிய தீர்வுகளைச் சொல்லி, முன்னேற்றத்தைத் தடைபடாமல் பார்த்துக்கொண்டது.

சாதாரண மக்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் பணத்தை எதில் பத்திரமாக முதலீடு செய்வது எனச் சொன்னதுடன், வங்கி எஃப்டி வட்டி குறைந்து வருகிற இந்தச் சமயத்தில் அதிக லாபத்துக்கான வழிகளையும் சொன்னது. தங்கத்தையும், ரியல் எஸ்டேட்டையும் மட்டுமே முதலீடு என்று நினைத்துவந்த நம் மக்களை, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை என அவரவர் ரிஸ்க் எடுக்கும் தன்மைக்கேற்ப பலவகையான முதலீடுகளை அறிமுகப்படுத்தி, அவர்களின் சொத்தினைப் பெருக்க உதவியது.

இத்தனை நாளாக செய்துவந்த இந்த வேலைகளைக் கொஞ்சம்கூடக் குறைத்துக்கொள்ளாமல், புதிய பல வேலைகளை இந்த ஆண்டு முதல் செய்யக் களமிறங்கியிருக்கிறது நாணயம் விகடன். அதில் ஒன்றுதான், சென்னையில் நடக்கவிருக்கும் எக்ஸ்போ அண்டு கான்க்ளேவ். இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர்களும், பொருளாதார வல்லுநர்களும் கலந்துகொண்டு பேசவிருப்பது, முதலீட்டாளர்களுக்கு அமையவிருக்கும் அறிவுபூர்வமான விருந்து. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாசகர்கள் பயன் பெற வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்.

இந்தியப் பொருளாதாரம் சீராக முன்னேறத் தொடங்கியிருக்கும் இந்தச் சமயத்தில், நம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தேவை, நிதி சார்ந்த கல்வி எனப்படும் ஃபைனான்ஷியல் எஜுகேஷன். இதன்மூலமே எதிர்காலத்தில் இன்னும் உறுதியான பொருளாதார அடித்தளம் கொண்ட சமூகத்தை நம்மால் உருவாக்க முடியும்.

எல்லாத் தரப்பினருக்கும் நிதி சார்ந்த ஆலோசனை அளிப்பதில் என்றென்றும் கண்ணியம் தவறாமல் செயல்படுவோம் என இந்தச் சமயத்தில் உறுதி தருகிறது நாணயம் விகடன்.

- ஆசிரியர்