Published:Updated:

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அருமையான வாய்ப்பு!

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அருமையான வாய்ப்பு!
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அருமையான வாய்ப்பு!

ஹலோ வாசகர்களே..!

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அருமையான வாய்ப்பு!

ஹலோ வாசகர்களே..!

Published:Updated:
பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அருமையான வாய்ப்பு!
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அருமையான வாய்ப்பு!

டந்த ஆறு தினங்களில் தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 586 புள்ளிகளையும், பாம்பே பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 1809 புள்ளிகளையும் இழந்திருக்கிறது. சந்தையின் இந்தச் சரிவை ஒரு கோணத்தில் பார்த்தால், ‘குறுகிய காலத்தில் இத்தனை பெரிய இறக்கமா?’ என்று வியக்கத் தோன்றும். ‘இனிவரும் நாள்களில் இப்படிப்பட்ட இறக்கம் மீண்டும் மீண்டும் வருமோ?’ என்கிற சந்தேகமும் வரும்.

இந்த வியப்பும் சந்தேகமும், பங்குச் சந்தையில் புதிதாக முதலீடு செய்யத் தொடங்கியிருக்கும் முதலீட்டாளர்களுக்கு வருவது இயற்கையான விஷயமே. ஆனால், இந்தப் புதிய முதலீட்டாளர்கள் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். சந்தை தற்போது இறக்கம் கண்டிருப்பதற்கு முக்கியமான காரணம், நம் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்னை அல்ல. அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பிரச்னைதான். 

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அருமையான வாய்ப்பு!


அமெரிக்காவில் பணவீக்கம் வேகமாக உயர்ந்து வருகிறது; வட்டி விகிதம் உயர்த்தப்படும் நிலையும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது; நிதிப் பற்றாக்குறையும் பயமுறுத்தி வருகிறது; லாப விற்பனை உயராமல், பங்கு விலை மட்டும் உயர்வது; வாராக் கடன் பிரச்னையால் வங்கிகள் சந்திக்கும் சிக்கல் என அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்னைகள் அந்த நாட்டுப் பங்குச் சந்தையின் முக்கியமான குறியீடான டவ் ஜோன்ஸை 2163 புள்ளிகளை இழக்கச் செய்திருக்கின்றன.

அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் இந்தப் பிரச்னைகள் உடனடியாகச் சரியாகிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. அந்த நாட்டுச் சந்தைகள் அடுத்த சில வாரங்களிலேயே ஏற்றம் காணத் தொடங்கிவிடும் என்று சொல்வதற்கில்லை. அதற்கு சில மாதங்கள் ஆகலாம். ஆனால், அமெரிக்க டவ் ஜோன்ஸ் இறங்கிய அளவுக்குக்கூட இந்தியச் சந்தை இறக்கம் காணவில்லை; நிஃப்டியானது டவ் ஜோன்ஸ் இறக்கத்தோடு ஒப்பிடும்போது நான்கில் ஒரு பங்கு மட்டுமே இறக்கம் கண்டிருக்கிறது.

இதிலிருந்து நமக்குத் தெளிவாகத் தெரியும் உண்மை என்னவெனில், நம் சந்தை அமெரிக்க சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கேற்ப செயல்படும் என்றாலும், முழுக்க முழுக்க அதன் பிரதிபிம்பமாகவே இருக்கும் என்று சொல்ல முடியாது. அமெரிக்க சந்தையில் பெரிய பிரச்னை ஏற்படவில்லை என்றாலே போதும், நம் சந்தை மேல்நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிடும். தவிர, நமது பொருளாதாரம் நன்கு முன்னேற்றம் காண்பதற்கான எதிர்காலத்தைக் கொண்டிருக்கிறது. தற்போதைய நிலையில், உலக அளவில் நம் நாடு காணும்  வளர்ச்சியை வேறு எந்த நாடும் (சீனா தவிர) காண்பதற்கு வாய்ப்பில்லை.

இந்த நிலையில், சந்தையில் இப்போது ஏற்பட்டிருக்கும் சரிவை நல்லதொரு வாய்ப்பாகக் கருதி, புதிதாக முதலீடு செய்வதே சரியாக இருக்கும். நாணயம் விகடன் வாசகர்கள் சந்தையின் இந்த இறக்கங்களைத் தவறவிடாமல், லாபம் ஈட்டும் உத்தியாக மாற்றி அமைத்துக்கொள்வதே சிறந்த முடிவாக இருக்கும்.

- ஆசிரியர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism