Published:Updated:

WFH, கம்ப்யூட்டர்; உடல் தொந்தரவுகள் தீர ஆலோசனைகள்! - ஆனந்த விகடனின் இலவச ஆன்லைன் வொர்க் ஷாப்

WFH
WFH

சரியான பொசிஷனில் அமர்வதற்கான இருக்கை, லேப்டாப் வைப்பதற்கு ஏற்ற டேபிள் ஆகியவை இல்லாமல் பலரும் முதுகுவலி, கழுத்துவலி என்று அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

லாக்டௌன் நீட்சிகளால் வொர்க் ஃப்ரம் ஹோம் தொடர்ந்துகொண்டிருக்கிற நிலையில், கம்ப்யூட்டரில் வேலைபார்க்கும்போது சரியான பொசிஷனில் அமர்வதற்கான இருக்கை, லேப்டாப் வைப்பதற்கு ஏற்ற டேபிள் ஆகியவை இல்லாமல் பலரும் முதுகுவலி, கழுத்துவலி என்று அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி வீட்டிலிருந்து வேலைபார்க்கும்போதும் சரி, அலுவலகம் சென்று வேலைபார்த்தாலும் சரி, பணிச்சூழல் காரணமாக உடலில் ஏற்படுகிற வலிகளுக்குத் தீர்வளிப்பதற்காக `கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கான பணிச்சூழலியல் டிப்ஸ்’ என்ற இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பை நடத்தவிருக்கிறது ஆனந்த விகடன்.

work from home
work from home
pixabay

பணிச்சூழல் காரணமாக உடலில் ஏற்படுகிற வலிகளுக்குத் தீர்வளிக்கும் ஆலோசகராக டாடா, டி.வி.எஸ் குழுமங்களில், பணியாற்றும் எர்கோனாமிஸ்ட் ஸ்ரீநாத் ராகவன் ஆலோசனைகள் தரவிருக்கிறார். இவர், இயன்முறை சிகிச்சையில் 15 வருட அனுபவம் கொண்டவர்.

பயிற்சி நடைபெறும் நாள்: ஜூலை 04, 2020 (சனிக்கிழமை)

நேரம்: மாலை 5 - 6

இந்த இலவச ஆன்லைன் பயிற்சியில் பங்கேற்க கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்.

இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள கீழுள்ள குறிப்புகளைப் பின்பற்றுங்கள்.

Zoom டவுன்லோடு செய்யுங்கள்: (For Laptop)

வெபினாரில் பங்கேற்பவர்கள் ஸூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம்.

https://zoom.us/download

ஆப்பிள் ஐஓஎஸ் போனுக்கு...

https://apps.apple.com/us/app/zoom-cloud-meetings/id546505307

ஆண்ட்ராய்டு போனுக்கு...

https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN

work from home
work from home
pixabay

இடம் & இன்டர்நெட் கனெக்ஷன்... ரொம்ப முக்கியம்!

வெபினாரில் பங்கேற்கும் முன் அதிகம் தொந்தரவு இல்லாத நல்ல இடமாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். இணையத் தொடர்பு நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் கொள்ளவும். இணைய வேகத்தை டெஸ்ட் செய்ய - https://www.speedtest.net

மைக் & வீடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

ஸுமில் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை ம்யூட் (mute) செய்துகொள்ளவும் ப்ளீஸ். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாக சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

வொர்க் ஷாப்பில் கலந்துகொள்ள, இந்த லிங்கில் பதிவு செய்துகொள்ளுங்கள் - https://store.vikatan.com/events/41-work-from-home-ergonomics-tips/

முக்கியமான விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க!

பங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்ள நோட்-பேட் வைத்துக்கொள்ளுங்கள். அதில் முக்கியமான விஷயங்களையும் சந்தேகங்களையும் குறித்து வையுங்கள்.

ஸுமில் உங்கள் ஐடியை உருவாக்குங்கள்...

நீங்கள் ரிஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி மூலம் வெபினர் அட்மின், உங்கள் வருகையை சரிபார்த்த பின் வகுப்புக்குள் அனுமதிக்கப் படுவீர்கள்.

நேரத்துக்கு வாங்க...

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஸுமில் லாக்-இன் செய்துவிடவும்.

உடை... செமி-ஃபார்மல் ப்ளீஸ்!

வெபினாரில் கலந்துகொள்வதற்கு ஏற்ப, (நீங்களும் வீடியோவில் வர வாய்ப்புண்டு என்பதால்) செமி ஃபார்மல் உடைகளை அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பதிவு நேரம் - ஜூலை 4 காலை 11 மணிக்கு (இந்திய நேரம்) பதிவு நிறைவு பெறுகிறது.

அடுத்த கட்டுரைக்கு