Published:Updated:

அன்பு வணக்கம்...!

ஆசிரியர் பக்கம்
பிரீமியம் ஸ்டோரி
ஆசிரியர் பக்கம்

ஆசிரியர் பக்கம்

அன்பு வணக்கம்...!

ஆசிரியர் பக்கம்

Published:Updated:
ஆசிரியர் பக்கம்
பிரீமியம் ஸ்டோரி
ஆசிரியர் பக்கம்

இந்த இதழ் உங்கள் கைகளில் தவழும் நேரம் மோட்டார் விகடனும் ஆயா அகாடமியும் இணைந்து பள்ளி மாணவர்களுக்காக நடத்திய நேரடி கார் டிசைன் பயிலரங்கம் நடந்து முடிந்திருக்கும். ஆனால், இந்த இதழை அச்சுக்கு அனுப்பும் நேரம், இந்தப் பயிலரங்கம் துவங்கப்படவில்லை என்பதால், அது பற்றிய விவரங்களை உங்களோடு அடுத்த இதழில் பகிர்ந்து கொள்கிறோம். ஆனாலும், இந்தப் பயிலரங்கத்துக்கு மாணவர்களும் பெற்றோர்களும் காட்டிய ஆர்வம் எங்களை பிரமிக்க வைத்தது.

சென்னையில் உள்ள மோட்டார் விகடன் அலுவலகம் அமைந்திருக்கும் ஆனந்த விகடன் வளாகத்தில்தான் இந்தப் பயிலரங்கம் என்றாலும்.... தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெங்களூரு போன்ற தொலைதூர ஊர்களில் இருந்தெல்லாம் இதற்கு மாணவர்கள் பதிவு செய்திருந்தார்கள். இந்தப் பயிலரங்கத்துக்கு நாங்கள் எதிர்பார்த்தது ஒன்பதாம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளைத்தான் என்றாலும், மூன்றாம் வகுப்புப் பயிலும் மாணவர்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பதிவு செய்தார்கள்.

அப்படிப் பதிவு செய்தவர்களின் பெற்றோர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு... `ஆவலைத் தூண்டும் பொறியியல் படிப்பும், ரசனைமிக்க கற்பனைத்திறனும் சரிவிகிதத்தில் சங்கமிக்கும் இடம்தான் கார் டிசைன் என்பது. 8 வயதுச் சிறுவனோ சிறுமியோ, இவற்றைச் சரியாக உள்வாங்கிக் கொண்டு பயனடைய முடியுமா என்று தெரியவில்லை. அதனால், சற்று வளர்ந்த பிறகு உங்கள் மகன்/மகளை இந்தப் பயிலரங்கத்துக்கு அனுப்பலாமே!’ என்று சொன்னோம். இதைக் கேட்டு, எங்கே தங்கள் மகன்/மகளுக்குப் பயிலரங்கத்தில் அனுமதி மறுக்கப்பட்டு விடுமோ என்று கலவரமடைந்த பெற்றோர், `இதுவரை தங்களின் மகன்/மகள் எத்தனை கார்களை வரைந்திருக்கிறார். கார்/பைக் பற்றிய என்னென்ன விவரங்களை எல்லாம் தேடித் தேடிச் சேகரித்து வைத்திருக்கிறார்’ என்று பட்டியலிட்டதைப் பார்த்து நாம் வாயடைத்துப் போனோம்.

அன்பு வணக்கம்...!


அது மட்டுமல்ல; `இந்தப் பயிலரங்கத்தை நடத்தும் அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் டிசைன் துறைத் தலைவரான சத்தியசீலனை எங்களுக்கு நன்கு தெரியும். மோட்டார் விகடன் நடத்திய இணையவழிப் பயிலரங்கங்களில் அவரை நாங்கள் பார்த்திருக்கிறோம். கார் டிசைனை ஒரு சுவாரஸ்யமான கதையைப்போல எளிய மொழிநடையில் சொல்லக்கூடிய பேராற்றல் பெற்றவர் அவர். இணைய வழியாக நடைபெற்ற பயிலரங்கமே அத்தனை சுவாரஸ்யமாகவும் உயிர்ப்போடும் இருந்தது என்றால், நேரடிப் பயிலரங்கம் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது உறுதி. ஆகையால் சிறுவர்களுக்கு/சிறுமிகளுக்குப் புரியாது என்று சொல்லி எங்கள் மகன்/மகளுக்கு அனுமதி மறுத்து விடாதீர்கள்’ என்று பெற்றோர்கள் வைத்த கோரிக்கையை நம்மால் மறுக்க முடியவில்லை.

மூன்றாம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்புவரை உள்ள மாணவர்கள் ஒரு சேரக் கலந்து கொண்ட இந்தப் பயிலரங்கத்தைப் பற்றி, அடுத்த இதழில் உங்களுடன் பகிர்ந்துகொள்ள மேலும் ஏராளமான செய்திகள் நிச்சயம் இருக்கும்.

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism