Published:Updated:

`இளநரை, பொடுகு, முடி உதிர்வு; கேசப் பிரச்னைகளுக்கான தீர்வுகள்!' - அவள் விகடனின் இலவச வெபினார்

கேசப் பிரச்னைகளுக்கான தீர்வுகள்!'
கேசப் பிரச்னைகளுக்கான தீர்வுகள்!'

உங்களுக்கு ஏற்பட்டுள்ள முடி உதிர்வு கேசப் பிரச்னைகளுக்கான தீர்வுகள் குறித்துச் சிந்திக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது அவள் விகடன்.

கொரோனா காலத்துக்கு முன்போ, பின்போ... எப்போதும் நமக்கு ஏற்படும் 'முடி' பிரச்னைகள் மட்டும் முடிவே இல்லாத பிரச்னைகளாகவே நீண்டுகொண்டிருக்கின்றன! அதிலும் குறிப்பாக, இந்த லாக்டௌனில்... அலுவலக வேலையால் டென்ஷன், கொரோனா தொற்று குறித்த அச்சம், வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் உருவாகும் மனஅழுத்தம், முறையற்ற உணவு முறை, முறையற்ற தூக்கம் என எத்தனையோ காரணங்களால் உங்களின் முடி உதிர்வு இந்த லாக்டௌன் நேரத்தில் அதிகரித்திருக்கலாம்.

'இளநரை, பொடுகு, முடி உதிர்வு... கேசப் பிரச்னைகளுக்கான தீர்வுகள்!'
'இளநரை, பொடுகு, முடி உதிர்வு... கேசப் பிரச்னைகளுக்கான தீர்வுகள்!'

காரணங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அவற்றைப் பற்றி கவலை வேண்டாம். நாம் சிந்திக்க வேண்டியது பிரச்னைக்கான தீர்வை பற்றித்தானே தவிர பிரச்னைகளை பற்றி மட்டும் அல்ல! அந்த வகையில், உங்களுக்கு ஏற்பட்டுள்ள கேசப் பிரச்னைகளுக்கான தீர்வுகள் குறித்துச் சிந்திக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது அவள் விகடன்.

வரும் ஜூலை 21 அன்று அவள் விகடன் சார்பில் இலவச வெபினார் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கேசப் பராமரிப்பு ஆலோசகர் தலத் சலிம் கலந்துகொண்டு இளநரை, பொடுகு, முடி உதிர்வு, பெண்களுக்கு ஏற்படும் வழுக்கை போன்ற கேசப் பிரச்னைகளுக்கான தீர்வுகள் குறித்துப் பேச உள்ளார்.

இவர் கடந்த 20 ஆண்டுகளாக கேசம் மற்றும் சரும பராமரிப்பு ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். லண்டனில் யுனானி மருத்துவம் பயின்றவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் 'செஹட்'(Sehat) என்ற பெயரில் கிளினிக் ஒன்றை நிறுவி, கேசம் மற்றும் சரும பராமரிப்பு குறித்த ஆலோசனைகளையும், மருத்துவச் சிகிச்சைகளையும் வழங்கி வருகிறார்.

கேசப் பராமரிப்பு ஆலோசகர் தலத் சலிம்
கேசப் பராமரிப்பு ஆலோசகர் தலத் சலிம்

விருப்பமுள்ள வாசகர்கள் இந்த இலவச வெபினாரில் கலந்துகொண்டு உங்களுக்குள்ள கேசப் பிரச்னைகளுக்கு தீர்வுகாணலாம்.

நிகழ்ச்சி நடைபெறும் நாள்: ஜூலை 21 (செவ்வாய்க்கிழமை)

நேரம்: மாலை 6.00 - 7.00 (ஒரு மணிநேரம்)

இந்த இலவச வெபினாரில் கலந்துகொள்ள, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் பதிவு செய்து கொள்ளலாம்.

https://store.vikatan.com/events/65-session-on-haircare/

அடுத்த கட்டுரைக்கு