Published:Updated:

சென்னை பாலவாக்கத்தில் நாணயம் விகடனின் மியூச்சுவல் ஃபண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட் ( vikatan )

மியூச்சுவல் ஃபண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை பாலவாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள கமர் ரெசிடென்சஸ் அரங்கில், வரும் 01.03.2020, ஞாயிறன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

இன்றைய சூழலில், விலைவாசி உயர்வைத் தாண்டிய வருமானத்தைப் பெறுவதற்கு, நம்பிக்கையான முதலீட்டுச்சாதனமாக மியூச்சுவல் ஃபண்டு இருக்கிறது. நமது தேவைக்கேற்ப எத்தகைய மியூச்சுவல் ஃபண்டைத் தேர்வு செய்வது, இலக்கை எவ்வாறு தீர்மானிப்பது, முதலீட்டை எப்படி அதிகரிப்பது உள்ளிட்டவற்றில் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அதற்கான களத்தை அமைத்துக்கொடுக்கிறது நாணயம் விகடன்.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்
vikatan

சென்னை பாலவாக்கத்தில், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட், இன்வெஸ்ட் கரெக்ட்லி மற்றும் நாணயம் விகடன் இணைந்து வழங்கும் 'மியூச்சுவல் ஃபண்டு... கனவு... முதலீடு... முன்னேற்றம்!' முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி. மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டில் கவனிக்கவேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து, ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு மண்டல தலைவர் ஜீவன் கோஷி தரியன் சிறப்புரையாற்றுகிறார்.

மியூச்சுவல் ஃபண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை, பாலவாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள கமர் ரெசிடென்சஸ் அரங்கில், வரும் 01.03.2020 ஞாயிறன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்
vikatan

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், முன்பதிவுக்கு 044 - 66808014 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம். வாட்ஸ் அப் மூலமாகப் பதிவுசெய்ய விரும்புபவர்கள், 9790990404 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்.

அடுத்த கட்டுரைக்கு