Published:Updated:

திருப்பூரில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

மியூச்சுவல் ஃபண்ட்... விழிப்புணர்வு நிகழ்ச்சி
மியூச்சுவல் ஃபண்ட்... விழிப்புணர்வு நிகழ்ச்சி

மியூச்சுவல் ஃபண்டில் ஏற்கெனவே முதலீடு செய்துள்ளவர்கள், இனிமேல் முதலீடு செய்யும் எண்ணத்தில் இருப்பவர்களென அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதலீட்டு விழிப்புணர்வைப் பெறலாம்.

சம்பாதிக்கும் பணத்தைச் சேமிக்கும் பழக்கம் நம் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால், அந்தச் சேமிப்பை ஏற்றம் தரக்கூடிய முதலீடாக எப்படி மாற்றுவது என்ற வழிமுறை பலருக்கும் தெரிவதில்லை. சேமிக்கும் பணத்தை முறையாக முதலீடு செய்யாவிட்டால், நாளடைவில் அதன் மதிப்பு குறையத்தொடங்கும். விலைவாசி உயர்வையும் தாண்டி நம்முடைய சேமிப்பின் மதிப்பு உயரவேண்டுமென்றால் அதற்கேற்ற நம்பிக்கையான முதலீட்டுச் சாதனம் மியூச்சுவல் ஃபண்டே. மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும்போது பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்தையும் தாண்டி வருமானத்தை நன்முறையில் பராமரிக்க முடியும்.

திருப்பூரில் மியூச்சுவல் ஃபண்ட்
திருப்பூரில் மியூச்சுவல் ஃபண்ட்
vikatan

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து நல்ல முறையில் வருமானத்தைப் பெருக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, நாணயம் விகடன் இதழும் ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் இணைந்து `மியூச்சுவல் ஃபண்ட்... இன்றைய முதலீடு நாளைய வெகுமதி' என்ற நிகழ்ச்சியைத் திருப்பூரில் நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சியில், முதலீடுகள் குறித்துப் பேசுவதில் நிபுணரான அழகப்பன் ராமநாதன் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் கோவை அலுவலகத் தலைமை மேலாளர் ஆர்.குரு விட்டல் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சி, திருப்பூர் வாலிபாளையம், மகாவீர் காலனியிலுள்ள திருப்பூர் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அரங்கில், வரும் சனிக்கிழமை (07.3.2020) அன்று மாலை 5.30 மணி முதல் 8.30 மணிவரை நடைபெறும். மியூச்சுவல் ஃபண்டில் ஏற்கெனவே முதலீடு செய்துள்ளவர்கள், இனிமேல் முதலீடு செய்யும் எண்ணத்தில் இருப்பவர்களென அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதலீட்டு விழிப்புணர்வைப் பெறலாம்.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்
vikatan

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், முன்பதிவுக்கு 044 - 66808014 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம். வாட்ஸ் அப் மூலமாகப் பதிவுசெய்ய விரும்புபவர்கள், 9790990404 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு