Published:Updated:

வணிகர்களைப் பெருமைப்படுத்தும் நாணயம் விகடன் டிரேட் சாம்பியன் அவார்ட்ஸ்... நீங்களும் விண்ணப்பிக்கலாம்... பரிந்துரைக்கலாம்!

Trade Champion Awards
Trade Champion Awards

நாணயம் விகடன் மற்றும் மார்க்கெட் ஆஃப் இந்தியா இணைந்து வழங்கும் `டிரேட் சாம்பியன் அவார்ட்ஸ்'.

திறமையாளர்களை அங்கீகரித்து பெருமைப்படுத்துவதில் விகடன் எப்போதுமே முன்னணியில் நிற்கிறது. பிசினஸ் உலகில் வெற்றிக்கொடி நாட்டும் ஜாம்பவான்களுக்கு ‘பிசினஸ் ஸ்டார் அவார்டு’ என்ற விருதுகளை கடந்த மூன்று ஆண்டுகளாக நாணயம் விகடன் வெற்றிகரமாக வழங்கி வருவதை அறிவீர்கள்.

இந்தப் பயணத்தில் அடுத்த மைல்கல், நாணயம் விகடன் மற்றும் மார்க்கெட் ஆஃப் இந்தியா இணைந்து வழங்கும் `டிரேட் சாம்பியன் அவார்ட்ஸ்’. வர்த்தகத் துறையில் ஜாம்பவான்களாக இருக்கும் டிரேடர்களுக்கு, கீழ்க்கண்ட ஒன்பது பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.

விருது அளிக்கப்பட உள்ள ஒன்பது கேட்டகிரிகள்...

லைஃப் டைம் அச்சீவர்ஸ் அவார்டு

டிரேடிங் தொழிலை பாரம்பரியமாக செய்துவரும் வணிகருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது.

எமெர்ஜிங் டிரேடர் அவார்டு

மிகச் சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து வேலை செய்யத் தொடங்கி, இன்று மிகப் பெரிய டிரேடராக மாறியிருக்கும் ஒருவரின் வெற்றிப் பயணத்துக்கு அளிக்கப்படும் விருது.

பிசினஸ் ஃபேமிலி அவார்டு

டிரேடிங் தொழிலை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாரம்பரியமாக ஒற்றுமையுடன் செய்துவரும் வணிகக் குடும்பத்துக்கான விருது.

அக்ரி புராடெக்ட் அவார்டு

விவசாய விளைபொருளை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதன்மூலம் வெற்றி கண்ட டிரேடருக்கு அளிக்கப்படும் விருது.

கஸ்டமர்ஸ் கிங் அவார்டு

வாடிக்கையாளர்களின் ஏகோபித்த அபிமானத்தைப் பெற்றவருக்கு அளிக்கப்படும் விருது.

ஹோல்சேலர் அவார்டு

மொத்த வியாபாரத்தை வெற்றிகரமாக செய்யும் டிரேடருக்கு வழங்கப்படும் விருது.

நேட்டிவ் பிராண்டு அவார்டு

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பிராண்ட், அந்த மக்களின் மனதில் மறக்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கும். அப்படிப்பட்ட பிராண்டு அளிக்கப்படும் விருது.

யங் அச்சீவர்ஸ் அவார்டு

டிரேடிங் துறையில் இளம் சாதனையாளருக்கு அளிக்கப்படும் விருது.

எக்ஸ்போர்ட்டர் அவார்டு

சிறந்த ஏற்றுமதியாளருக்கு அளிக்கப்படும் விருது.

Trade Champion Awards 2020
Trade Champion Awards 2020

ஹார்டுவேர், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கேமரா, கட்டுமானத் துறை பொருள்கள், பேக்கேஜ்டு ஃபுட்ஸ், ஸ்பேர்ட் பார்ட்ஸ் விற்கும் நிறுவனங்கள், ஃபர்னிச்சர், வாட்சஸ், காஸ்மெட்டிக்ஸ், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், ஜவுளி, விளையாட்டுப் பொருள்களுக்கான கடைகள், செல்போன் விற்பனை நிறுவனங்கள், மருந்துப் பொருள்களை விற்கும் கடைகள் என அனைத்து துறை சார்ந்த வர்த்தகர்களும் இந்த விருதுகளைப் பெற நாமினேஷனை அனுப்பலாம். உங்களுக்கு நன்கு தெரிந்த, விருதுக்குத் தகுதியான நிறுவனங்களின் பெயர்களையும் பரிந்துரைக்கலாம். வணிக அமைப்புகளும், நன்கு செயல்படும் வர்த்தக நிறுவனங்களைப் பரிந்துரை செய்யலாம். சென்னை மாவட்டம் நீங்கலாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்ட டிரேடர்களும் இந்த விருதுகளைப் பெறுவதற்கான பரிந்துரையில் இடம்பெறலாம்.

இந்த விருதுத் தேர்வுக்காக கோவை, புதுச்சேரி, திருச்சி, மதுரை, வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கரூர், திருநெல்வேலி என பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த பத்து நகரங்களுக்கு அருகில் இருக்கும் மாவட்டங்கள், மேற்சொன்ன மண்டலங்களுடன் சேர்க்கப்படும். விருது வழங்கும் நிகழ்ச்சி, மண்டலவாரியாக இந்த பத்து நகரங்களில் நடத்தப்படும். இதைப் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விருதுக்கு விண்ணப்பிக்கும் போது உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் 98409 69757 என்கிற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

நாமினேஷனை அனுப்ப, இந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யுங்கள்...

அடுத்த கட்டுரைக்கு