Published:Updated:

கும்பகோணம் மற்றும் திருச்சி முதலீட்டாளர்களே... உங்கள் பணத்தைப் பெருக்க ஓர் அற்புத வாய்ப்பு!

பணத்தைப் பெருக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி
பணத்தைப் பெருக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

மியூச்சுவல் ஃபண்டு மட்டுமே நம்முடைய பணத்தைப் பெருக்குவதற்கும் முதலீட்டைப் பாதுகாப்பதற்கும், நிரந்தர வருமானத்தை ஈட்டுவதற்கும் பேருதவியாக இருக்கிறது.

இன்றைய தேதியில், முதலீட்டுக்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக, மியூச்சுவல் ஃபண்டு மட்டுமே நம்முடைய முதலீட்டைப் பெருக்குவதற்கும் முதலீட்டைப் பாதுகாப்பதற்கும், நிரந்தர வருமானத்தை ஈட்டுவதற்கும் பேருதவியாக இருக்கிறது.

விளம்பரத்தில் வருவதுபோல, ‘மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள், சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது’ என்ற விளம்பரத்தை சிலர் தவறாகப் புரிந்துகொண்டு அதில் முதலீடு செய்யாமல் தவிர்க்கிறார்கள். ஏன் அப்படிக் கூறப்படுகிறது என்றால், பலர் சரியான இலக்கு இல்லாமலும், அதன் செயல்பாடுகளை முழுவதும் தெரிந்துகொள்ளாமலும், சிலர் செய்யும் தவற்றைச் சுட்டிக்காட்டவும், புதிய முதலீட்டாளர்களை எச்சரிக்கை செய்யவும்தான் இந்த வாசகம் பயன்படுத்தப்படுகிறது.

‘மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள், சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது’ என்ற விளம்பரத்தை சிலர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி - கும்பகோணம்
விழிப்புணர்வு நிகழ்ச்சி - கும்பகோணம்
இந்த நிலையில், மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படிச் செயல்படுகிறது, அதில் முதலீடு செய்யும் முன் நாம் என்னவிதமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து, நாணயம் விகடனும் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களும் இணைந்து, பல்வேறு விழிப்புணர்வுக் கூட்டங்களைப் பல இடங்களில் நடத்திவருகின்றன.

அதன் தொடர்சியாக, இந்த முறை கும்பகோணம் நியூ ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள குவாலிட்டி இன் விஹா - செக்கர்ஸ் ஹாலில், ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்டு நிறுவனத்துடன் இணைந்து, ‘ இன்றைய முதலீடு... நாளைய வெகுமதி’ என்னும் பிரமாண்ட முதலீட்டுத் திருவிழாவை நடத்துகிறது, நாணயம் விகடன். பிப்ரவரி 29-ம் தேதி சனிக்கிழமை, மாலை 5.30 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெறும்.

கும்பகோணம் மற்றும் திருச்சி முதலீட்டாளர்களுக்கு, பணத்தைப் பெருக்க ஓர் அற்புத வாய்ப்பு! அனைவரும் வருக... அனுமதி இலவசம்!

அதேபோல, திருச்சி மக்கள் பயன்பெறுவதற்காக, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில், மெக்டொனால்ட்ஸ் சாலையில் உள்ள பிரீஸ் ரெசிடென்சியில், மார்ச் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணிக்கு இந்த முதலீட்டுத் திருவிழாவை நாணயம் விகடனும், ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் இணைந்து நடத்துகின்றன.

திருச்சி
திருச்சி

இந்த முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், முதலீடு குறித்த சிறப்புப் பேச்சாளர் அழகப்பன் ராமநாதன் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைமை மேலாளர் Dr.P.சுரேஷ்பாண்டியன் ஆகியோர், மியூச்சுவல் ஃபண்டு குறித்த பல சந்தேகங்களுக்குப் பதில் அளிக்க இருக்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்டு என்றால் என்ன? அதில் முதலீட்டாளர்கள் எப்படி முதலீடு செய்வது? எந்தத் தேவைக்கு எந்த மாதிரியான ஃபண்டுகளில் முதலீட்டை ஆரம்பிப்பது? எந்த வயதினருக்கு எந்த ஃபண்டு சிறந்தது? தங்கத்தில், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதைவிட, மியூச்சுவல் ஃபண்டு முதலீடு ஏன் சிறந்தது? என்கிற உங்களுடைய பல கேள்விகளுக்கு, இந்த நிகழ்ச்சியில் பதில் கிடைக்கும்.

அனைவரும் வருக... அனுமதி இலவசம்!

தொடர்புக்கு - 9790990404

அடுத்த கட்டுரைக்கு