Published:Updated:

தமிழகக் கட்டுமானத்துறையின் எதிர்காலம் எப்படி? - நாணயம் விகடனின் ஆன்லைன் கலந்துரையாடல்

ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட் ( நாணயம் விகடன் )

நாணயம் விகடன் மற்றும் ஜி.பி.ஆர். டி.எம்.டி (GBR TMT) இணைந்து `கட்டுமானத் தொழில்-சவால்களும் வாய்ப்புகளும்!’ என்ற தலைப்பில் (Builders Meet) ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறது.

தமிழக கட்டுமானத்துறை எப்போது மீண்டு வரும், நாம் அனைவரும் எதிர்பார்க்கும் அந்த மாற்றம் நிகழுமா. இப்போது இருக்கும் வாய்ப்புகள் என்ன. எந்தெந்த நடவடிக்கைகள் மூலம் இழந்ததை மீண்டும் பெறலாம்? காலத்துக்கு ஏற்ற மாதிரி பாதுகாப்போடு நம் தொழில் செயல்பாடுகளை மேற்கொள்வது எப்படி? என்பது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் நாணயம் விகடன் மற்றும் ஜி.பி.ஆர். டி.எம்.டி (GBR TMT) இணைந்து `கட்டுமானத் தொழில் - சவால்களும் வாய்ப்புகளும்!’ என்ற தலைப்பில் (Builders Meet) ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறது.

இந்த நிகழ்ச்சி ஜூலை 26, 2020 காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை நடக்கிறது. துறை சார்ந்த நிபுணர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள்.

மு.மோகன், நேஷனல் பிரசிடென்ட், இந்திய கட்டுனர்கள் சங்கம் (BAI), ஜி.கணேஷ், மாநில செயலாளர், தமிழ்நாடு & புதுச்சேரி கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FACEAT&P), எஸ்.ஸ்ரீதரன், சேர்மன் தமிழ்நாடு கிரெடாய் மற்றும் வெங்கடேஷ் ரதி-நிர்வாக இயக்குநர், ஜி.பி.ஆர் மெட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியோர் பேசுகிறார்கள்.

இந்திய கட்டுனர்கள் சங்கத்தின் மு.மோகன்

இந்திய கட்டுனர்கள் சங்கத்தின் (BAI) நேஷனல் பிரசிடென்ட் மு.மோகன். மெட்ரோ ரோடு கன்ஸ்ட்ரக்க்ஷன் (மெட்ராஸ்) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மு.மோகன். ரியல் எஸ்டேட் துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.

FACEAT&P –ன் ஜி.கணேஷ்

அனைத்து தமிழ்நாடு & புதுச்சேரி கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FACEAT&P) மாநில செயலாளர் ஜி.கணேஷ் இவர் கோயம்புத்தூரில் உள்ள ஆர்.ஜி.அசோசியேட்ஸ் (RG ASSOCIATES). நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். கட்டுமானத் துறையில் சுமார் 25 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.

தமிழகக் கட்டுமானத்துறையின் எதிர்காலம் எப்படி? - நாணயம் விகடனின் ஆன்லைன் கலந்துரையாடல்

கிரெடாய் - தமிழ்நாடு எஸ்.ஸ்ரீதரன்

கிரெடாய் - தமிழ்நாடு சேர்மன் எஸ்.ஸ்ரீதரன். இவர் நியூவ்ரி பிராபர்டீஸ் (Newry Properties Pvt Ltd) நிறுவனத்தின் இயக்குநர். ரியல் எஸ்டேட் துறையில் 25 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர்.

ஜி.பி.ஆர் மெட்டல்ஸ் வெங்கடேஷ் ரதி

சென்னையைச் சேர்ந்த முன்னணி டி.எம்.டி கம்பிகள் உற்பத்தி நிறுவனமான ஜிபிஆர் மெட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட்-ன் நிர்வாக இயக்குநர். தமிழகம் முழுவதும் பரந்து விரிந்துள்ள விநியோக அமைப்பை கொண்டுள்ளது. ஜி பி ஆர், கட்டுமானத் துறை சார்ந்த பொருள்கள் வாங்க விரும்பப்படும் நிறுவனமாகத் திகழ்கிறது.

`அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம்’. பதிவு செய்ய: https://bit.ly/38PedJ9
அடுத்த கட்டுரைக்கு