Published:Updated:

`தெரிந்த செடிகள்; தெரியாத பயன்கள்!’ - பசுமை விகடன் வழங்கும் ஆன்லைன் பயிற்சி

நம் பாரம்பர்ய மூலிகைகளைக் கொண்டே பல நோய்களைக் குணமாக்கலாம் என்கிறது சித்த மருத்துவம். ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய மூலிகைகள், அவற்றின் மூலம் செய்யப்படும் கை மருந்துகள், பயன்கள் குறித்து விரிவாக விளக்குகிறது இப்பயிற்சி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும், வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த மூலிகைகளைக் கொண்டே கை வைத்தியம் செய்தே குணப்படுத்தி வந்தார்கள். ஆனால், பொருளாதாரம், பணத்தேவை, வேலைவாய்ப்பு எனக் கிராமங்களிலிருந்து பெரும்பாலானோர் குடும்பத்துடன் நகரப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்துவிட்டனர்.

மைக்கேல் செயராசு - சித்த மருத்துவர்
மைக்கேல் செயராசு - சித்த மருத்துவர்

தும்மல், தலைவலி என்றால்கூட இன்று உடனே மருத்துவமனைக்குச் சென்றுவிடுகிறார்கள். உடனே, அதற்கேற்ற சில மூலிகைகளைப் பறித்து கசாயம் போட்டுக் கொடுக்க பாட்டியும் இல்லை. கசாயம் குடிக்க மறுக்கும் பேரன், பேத்திகளை ஓடிச்சென்று பிடிக்கும் தாத்தாக்களும் தற்போது வீடுகளில் இல்லை.

அருமையான வருமானம் தரும் ஆடு வளர்ப்பு! - பசுமை விகடன் வழங்கும் ஆன்லைன் பயிற்சி

சித்த மருத்துவம் என்பது `மக்கள் மையப்படுத்தப்பட்ட மருத்துவம்’ என்கிறார்கள். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு மூலிகைகளைக் கொண்டே தங்களுக்குத் தாங்களே மருத்துவம் பார்த்து வந்தனர் நம் முன்னோர்கள். நோயின் தீவிரம் அதிகமான பிறகுதான் மருத்துவரை அணுகியுள்ளனர். இன்று மருத்துமனையிலும் மருந்தகங்களிலும்தான் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

மூலிகைகள்
மூலிகைகள்

அன்று வயல்வெளிகள், மரம், செடிகள், கொடிகள் என எங்கெங்கும் காணப்பட்ட மூலிகைகளைக்கூட, நம்மில் பலரால் அடையாளம் காணப்படாத நிலையாகவே உள்ளது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக வீட்டுத்தோட்டம், மாடித்தோட்ட வளர்ப்பில் தற்போது மூலிகைச் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒவ்வொரு வீட்டிலும் துளசி, தூதுவேளை, சோற்றுக்கற்றாழை, மஞ்சள் கரிசாலை, பொன்னாங்கண்ணி, நேத்திரப்பூண்டு, நிலவேம்பு, பூலாங்கிழங்கு, ஓமவள்ளி, ஆடாதொடை, நொச்சி, பூனைமீசை, தழுதாழை, அறுகம்புல் உள்ளிட்ட 20 வகையான மூலிகைகள் அவசியம் இருக்க வேண்டியவை என, `பசுமைவிகடன்’ இதழில் `நல் மருந்து’ தொடரை எழுதிவரும் நெல்லை மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவருமான மைக்கேல் செயராசு கூறுகிறார்.

நல்மருந்து
நல்மருந்து

சித்த மருத்துவத்தில் 30 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த இவர், மூலிகைளின் பயன்கள், அவற்றின் மூலம் கை மருந்து தயாரிக்கும் முறை, பயன்படுத்தும் விதம், வீடுகளில் இருக்க வேண்டிய கடைச் சரக்குகள் உள்ளிட்டவை குறித்து, வரும் 23.08.2020 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெறும் நேரலை (ஆன்லைன்) கட்டணப் பயிற்சியில் விளக்கமாகக் கூற இருக்கிறார். பசுமை விகடன் நடத்தும் இந்த ஆன்லைன் பயிற்சியில் கலந்துகொள்ள பயிற்சிக் கட்டணம்: ரூ.250. கட்டணம் செலுத்த...

https://store.vikatan.com/events/83-herbal-plants-and-benefits/

இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு