Published:Updated:

விவசாயத்திலும் லட்சங்களில் வருமானம்... வழிகாட்டும் பசுமை விகடன் ஆன்லைன் பயிற்சி வகுப்பு!

பசுமை விகடன் ஆன்லைன் பயிற்சி வகுப்பு
பசுமை விகடன் ஆன்லைன் பயிற்சி வகுப்பு

பசுமை விகடன் நடத்தும் 'விவசாயத்திலும் லட்சங்களில் வருமானம் பெறலாம்!' ஆன்லைன் கட்டணப் பயிற்சி.

'விவசாயம் என்பது ஒரு நொடிந்துபோன விஷயம். அதிலெல்லாம் சம்பாதிக்க முடியாது' என்று இருக்கிற நிலத்தைச் சும்மா போட்டு வைத்திருப்பவர்கள் நிறைய பேர். ஆனால் ஒன்றுக்கும் உதவாது என்று கைவிட்ட நிலத்தை வாங்கி அதை சீர்த்திருத்தி இன்று லட்சங்களில் வருமானம் எடுத்து வருகிறார் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி ஜி.நாகரத்தின நாயுடு. ஆர்வமும், திறமையும் இருந்தால், எந்த மண்ணிலும் எந்த வகையான பயிர்களையும் விளைவிக்க முடியும் என்பதற்கு இவருடைய பல்லுயிர் தாவரப் பண்ணையே உதாரணம். இதுகுறித்து அவர் சொல்வதைக் கேட்போம்.

விவசாயம்
விவசாயம்

"என் பண்ணையோட வருமானம் வருஷத்துக்கு 25 லட்சத்துக்கும் அதிகம். இப்போ, நெல், பப்பாளி, காய்கறிகள், அழகு மலர்கள், மா, கீரை, முருங்கை, புளி, தென்னை, பால் மூலமா வருமானம் பார்த்துட்டு வர்றேன். பண்ணையிலேயே வேலைக்கு ரெண்டு குடும்பங்கள் இருக்கு. உழவு, வேலையாட்கள், விதைனு வருஷத்துக்கு 5 லட்ச ரூபாய் செலவு ஆகும். மீதி லாபமா நிக்குது. இந்த வருமானத்த வெச்சுதான் ஹைதராபாத் சிட்டில ஒரு பெரிய வீட்டைக் கட்டியிருக்கேன். எனக்கான சந்தை என்னோட வீடும் பண்ணையும்தான். அங்கே வந்து மக்கள் நேரடியாக வாங்கிக்கிறாங்க. அது போக மிச்சமாகிறதைத்தான் நான், இயற்கை அங்காடிகளுக்குக் கொடுக்கிறேன்.

இந்த நிலத்தை வாங்கும்போது இது சரளை மண் வகையைச் சேர்ந்தது. அதனால பெரியளவுல வெள்ளாமை எடுக்க முடியாதுனு பலபேர் சொன்னாங்க. முதல்ல ஒரு ஏக்கர் நிலத்தை உழுது, கற்களைப் பெருக்கி, சமன் செஞ்சு பயிர் வெச்சேன். அதுல வந்த வருமானத்த வெச்சே, அடுத்து ஒவ்வொரு ஏக்கரா தயார் பண்ணினேன். இப்படியே 12 ஏக்கரையும் தயார் செய்துட்டேன். இன்று ஏக்கருக்கு 70 மூட்டை நெல் மகசூல் கொடுக்கும் பூமியாக மாறியிருக்கு.
என்கிறார் ஜி.நாகரத்தின நாயுடு பெருமையோடு
பசுமை விகடன் ஆன்லைன் பயிற்சி வகுப்பு
பசுமை விகடன் ஆன்லைன் பயிற்சி வகுப்பு

பயிற்சியாளர் ஜி.நாகரத்தின நாயுடு

கடந்த 26 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தின் மூலம், தெலங்கானா மாநிலத்தில் நேர்மையான முறையில் சம்பளம் வாங்கும் ஓர் அரசு உயரதிகாரியை விட, அதிகமாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். ஆந்திரா முதல்வர் முதல் அமெரிக்க அதிபர் வரை அவரது விவசாய முறைகளைக் கேட்டு வியந்து பாராட்டியுள்ளனர். 350க்கும் மேற்பட்ட மத்திய, மாநில, தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். பல பணக்காரர்கள் இவருடைய தோட்டத்தை பார்க்க தினந்தோறும் வருகிறார்கள். பல பள்ளி, கல்லூரி மாணவர்கள் இவருடைய பண்ணையைச் சுற்றிப் பார்த்து இயற்கை விவசாயத்தைக் கற்று வருகிறார்கள்.

இவருடைய பேச்சைக் கேட்க ஜூன் 27-ம் தேதி, மாலை 7 - 8.30 மணியளவில், பசுமை விகடன் நடத்தும் 'விவசாயத்திலும் லட்சங்களில் வருமானம் பெறலாம்!' என்ற ஆன்லைன் கட்டணப் பயிற்சியில் இணையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அனுமதி கட்டணம் ரூ.200 | ஜூன் 26-ம் தேதி மாலை முன்பதிவு நிறைவு பெறும்.
நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?

இந்தப் பயிற்சி வகுப்பில் விவசாயிகள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், வேளாண் தொழில் தொடங்கவேண்டும் என்கிற ஆர்வம் கொண்டவர்கள், தற்சார்பு விவசாய வாழ்க்கை வாழ விரும்புபவர்கள், வேளாண் தொழில் முனைவோர்கள், காய்கறிச் சாகுபடி விவசாயிகள், நெல் சாகுபடி விவசாயிகள், பழமரங்கள் சாகுபடி விவசாயிகள், தற்போது இருக்கும் வேலையை விட்டுவிட்டு புதிதாக விவசாயத்தைத் தேர்ந்தெடுப்பவர்கள், விவசாய ஆர்வலர்கள் என விவசாயம் சார்ந்து செயல்படும் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்.

இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் கட்டணம் செலுத்த... இங்கே க்ளிக் செய்யவும்.

அன்பார்ந்த வாசகர்களே!

பசுமை விகடன் வழங்கும் விகடன் நடத்தும் ‘விவசாயத்தில் ஆண்டுக்கு 25 லட்சம் சம்பாதிக்க வழிகாட்டும் ஆன்லைன் பயிற்சி வகுப்பு!’ என்ற ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!

Webinar
Webinar

* Zoom டவுன்லோடு செய்யுங்கள்: (For Laptop)

வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

https://zoom.us/download

* ஆண்ட்ராய்டு போனுக்கு...

https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN

* ஆப்பிள் ஐஓஎஸ் போனுக்கு...

https://apps.apple.com/us/app/zoom-cloud-meetings/id546505307

Webinar
Webinar

* ஜூம்-ல் உங்கள் ஐடியை உருவாக்குங்கள்...

நீங்கள் ரிஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி மூலம் வெபினார் அட்மின், உங்கள் வருகையைச் சரி பார்த்தபின் வகுப்புக்குள் அனுமதிக்கப்படுவீர்கள்.

* ‘இடம் & இன்டர்நெட் கனெக்ஷன்’ - ரொம்ப முக்கியம்!

வெபினாரில் பங்கேற்கும் முன் அதிகம் தொந்தரவு இல்லாத நல்ல இடமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இணையத் தொடர்பு நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் கொள்ளவும். இணைய வேகத்தை டெஸ்ட் செய்ய - https://www.speedtest.net

* நேரத்துக்கு வாங்க...

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிட வேண்டும்.

* மைக் & வீடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவைத் தயவுகூர்ந்து மியூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாக சிறப்புப் பேச்சாளரின் கருத்தைக் கேட்க முடியும்.

Webinar
Webinar

* உடை: செமி-ஃபார்மல் ப்ளீஸ்!

செமினாரில் கலந்துகொள்வதற்கு ஏற்ப, (நீங்களும் வீடியோவில் வர வாய்ப்புண்டு என்பதால்) செமி ஃபார்மல் உடைகளையே அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

* முக்கியமான விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க!

பங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுத்துக் கொள்ள நோட்-பேட் வைத்துக் கொள்ளுங்கள். அதில் முக்கியமான விஷயங்களையும் சந்தேகங்களையும் குறித்து வையுங்கள்.

* No Refund

ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வரத் தவறினால், செலுத்திய கட்டணம் திருப்பித் தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மிக முக்கியக் குறிப்பு: ஜூன் 26, மாலை 6 மணிக்கு (இந்திய நேரம்) பதிவு நிறைவு பெறுகிறது.

இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் கட்டணம் செலுத்த... இங்கே க்ளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு