Published:Updated:

`கயிறு வாரியம் வழங்கும் தொழில் வாய்ப்புகள்' - பசுமை விகடன் நடத்தும் ஆன்லைன் பயிற்சி

கயிறு வாரிய பயிற்சி
கயிறு வாரிய பயிற்சி ( விகடன் )

தேசிய கயிறு வாரியம் விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்து தரும் நோக்கில் 1952-ம் ஆண்டு கேரள மாநிலம் கொச்சியில் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகிறது.

இந்திய தென்னை நார் தொழிற்சாலைகளிலிருந்து 7.5 மில்லியன் டன் அளவிலான நார்க்கழிவுகள் ஆண்டுதோறும் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 5 லட்சம் டன் நார்க்கழிவுகள் கிடைக்கிறது. இதில் உள்ள மூலப்பொருள்களால், இது விவசாயத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தென்னை நார் கட்டி
தென்னை நார் கட்டி
விகடன்

தென்னை நார்களைப் பயன்படுத்தி கயிறு தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம், கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்குக் குறிப்பாகப் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கிறது. கயிறு தொழிலில் கேரளா மாநிலத்துக்கு அடுத்தபடியாகத் தமிழகம் உள்ளது. ஆனாலும், பழுப்பு நிற நார் உற்பத்தியில் நாட்டிலேயே  தமிழகம்தான் முதன் இடத்தில் உள்ளது. இதற்காக மத்திய அரசின் கயிறு வாரியம் (COIR BOARD) தென்னை நார் (கயிறு) தொழிலின் மேம்பாட்டிற்கு, பல்வேறு மானியங்களையும், பல பயனுள்ள திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. தென்னை நாரிலிருந்து மதிப்புக் கூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் தொழில் தொடங்க வழிகாட்டுவதோடு பயிற்சி பெற்றவர்களுக்குத் தொழில் தொடங்க மானியமும் பெற்றுத் தருகிறது.

விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்து தரும் நோக்கில் 1952-ம் ஆண்டு கேரள மாநிலம் கொச்சியில் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகிறது கயிறு வாரியம். இந்தக் கயிறு வாரியத்தின் செயல்பாடுகளைப் பற்றி அறிந்துகொள்ள, பசுமை விகடன் சார்பில் வரும் ஜுன் 11-ம் தேதி 'கயிறு வாரியம் வழங்கும் தொழில் வாய்ப்புகள்' என்ற தலைப்பில் இணையதள நேரலைப் பயிற்சி நடைபெற இருக்கிறது. இப்பயிற்சியில் கயிறு வாரியம் வழங்கும் மானியங்கள், திட்டங்கள், கயிறு வாரியத்தின் செயல்பாடுகள், தென்னை நார் கழிவுகளைப் பயன்படுத்தும் யுக்திகள் ஆகியவை இடம்பெற இருக்கின்றன. இப்பயிற்சியில் கயிறு வாரியத்தின் செயலாளர் குமாரராஜா மற்றும் அதன் உறுப்பினர் கெளதம் மற்றும் ஏசியன் ஆர்கானிக்ஸ் மேலாண்மை இயக்குநர் சித்ரா துரைராஜ் ஆகியோர் பயிற்சி அளிக்க இருக்கிறார்கள்.

இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள முன்பதிவு செய்து கொள்ளவும். முன்பதிவுக்கு, https://forms.gle/7iRgdqpBXbNc6c868 என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளவும். நிகழ்வில் கலந்துகொள்ள உங்கள் ஸ்மார்ட்போனில் Zoom செயலியைத் தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும். முன்பதிவு செய்தவர்களுக்கு மீட்டிங் ஆரம்பிக்கும்போது, Zoom செயலியின் லிங்க் அனுப்பி வைக்கப்படும்.

நேரம் - மாலை 6 முதல் 7 மணிவரை.

அடுத்த கட்டுரைக்கு