Published:Updated:

`சித்தர்கள் அருளிய பயனுள்ள 10 பயிற்சிகள்!'- சக்திவிகடனின் மூச்சுப் பயிற்சிப் பயிலரங்கம்

மூச்சுப் பயிற்சி
மூச்சுப் பயிற்சி

மூச்சுப்பயிற்சி செய்து காற்றை அடக்கியாளும் வலிமை பெற்றவர்களை யமனும் வாட்ட இயலாது. மூச்சுதான் நம் ஆயுளைத் தீர்மானிக்கும் சக்தி. காற்றிலுள்ள பிராணனைப் பிரித்து உடலுக்கு சக்தியூட்டும் பல பயிற்சிகளை நம் முன்னோர்கள் நமக்குக் கலைவடிவமாய் அருளியுள்ளார்கள்.

இன்று உலகம் புதிய வாழ்வியலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. கடந்த 100 ஆண்டுகளில் உருவான சந்தைப் பொருளாதாரம் சார்ந்த வாழ்வியலிலிருந்து விலகியிருக்க வேண்டிய கட்டாயத்துக்குக் கொரோனா நம்மைத் தள்ளியுள்ளது. செல்வத்தைவிட உடல் ஆரோக்கியமே முக்கியம் என்னும் பாடத்தைக் காலம் தினந்தோறும் நடத்திவருகிறது. ஆரோக்கியம் சார்ந்து நம் மரபில் இருக்கும் யோகா முதலிய பயிற்சிகள் மீண்டும் நம் வாழ்வியலில் முக்கியத்துவம் பெறுகின்றன. நம் சித்தர்களும் யோகிகளும் எளிமையான பயிற்சிகளின் மூலம் உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தந்திரங்களை அருளியிருக்கிறார்கள். அவற்றில் மிகவும் முக்கியமானது மூச்சுப்பயிற்சி.

யோகா குரு அரி
யோகா குரு அரி

காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்

கூற்றை யுதைக்குங் குறியது வாமே' என்கிறார் திருமூலர்.

காற்றில்தான் சூட்சும சக்தி உள்ளது. காற்றைத் தம் முள் அடக்கியாளும் வலிமை பெற்றவர்களை யமனும் வாட்ட இயலாது என்பது இதன் பொருள். மூச்சுதான் நம் ஆயுளை தீர்மானிக்கும் சக்தி. காற்றிலுள்ள பிராணனைப் (உயிர் சக்தியை) பிரித்து உடலுக்கு சக்தியூட்டும் பல பயிற்சிகளை நம் முன்னோர்கள் நமக்குக் கலைவடிவமாய் அருளியுள்ளார்கள். அப்படி அவர்கள் அருளியவற்றுள் 10 மூச்சுப் பயிற்சிகளில் பிரதானமானவை.

10 மூச்சு பயிற்சிகளின் வகைகளும் பயன்களும்...

சுவாசப் பாதையைச் சுத்தம் செய்யும் ‘கபாலபாதி

நாடிகளைச் சுத்தமாகி உடலின் ஆதாரச் சக்கரங்கள் நன்கு இயக்கும் ‘நாடி சுத்தி’

உடல் எடையைப் பராமரிக்கும் ‘இரண்டாம் நாடி சுத்தி’

நரம்பு மண்டலங்கள் வலுவாக்கும் ‘மூன்றாம் நாடி சுத்தி’

ஆஸ்துமா, சளி பிரச்னைகளைக் குறைக்க உதவும் ‘பஸ்திரிகா’

உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் ‘உஜ்ஜயி’

சிறுநீர், பாலியல் உறுப்புகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும் ‘ஆசிபா’

ஒற்றை தலைவலி, அல்சர், மன அழுத்தம், மூலம் போன்றவற்றுக்கு மருந்தாகும் ‘சீத்தளி’

உடல் வெப்பத்தைத் தணிக்கும் ‘சீத்காரி’

பற்கள், எலும்புகளை உறுதியாகும் ‘சதந்த’

என 10 விதமான மூச்சுப் பயிற்சிகள் உள்ளன. இவற்றைக் கற்றுக்கொள்வதன் மூலம் உடல் இயந்திரத்தை நோயின்றிப் பராமரிக்கலாம் என்கின்றன சித்தர்களின் நூல்கள்.

இந்தப் பத்துவிதமான மூச்சுப் பயிற்சிகளையும் பயிலும் விதமாக சக்தி விகடன் ` தேகம் தெய்விகம் - ஆயுள் வளர்க்கும் 10 வகை மூச்சப் பயிற்சி' என்ற ஆன்லைன் பயிலரங்கிகை ஏற்பாடு செய்துள்ளது. உலக சித்தக் கலைகள் ஆய்வு மையத்தைச் சேர்ந்த அரி கற்றுத்தர இருக்கிறார்.

இந்தப் பயிலரங்கில் கலந்துகொள்ள விரும்பும் வாசகர்கள் இங்கே க்ளிக் செய்யவும்.

ஆரோக்கியமான வாழ்வே ஆனந்தமான வாழ்வு.

அடுத்த கட்டுரைக்கு