Published:Updated:

தொடங்கியது புதுப் பயணம்!

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019-20

தொடங்கியது புதுப் பயணம்!

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019-20

Published:Updated:
விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்

ரங்கம் முழுவதும் உற்சாகம் நிரம்பி யிருந்தது. ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள், பல சுற்றுத் தேர்வுகள் தாண்டி, தாங்கள் தேர்வாகியிருக்கும் பெருமிதம் அந்த 57 பேர் முகங்களிலும் தெரிந்தது. இது ‘விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் 2019 - 20’ பயிற்சி அரங்கான சென்னை, தி.நகர் மீனாட்சி கல்யாண மண்டபத்தில்தான்!

 ஃபைனலி பாரத், விக்னேஷ் காந்த், ஆர்.ஜே.ஆனந்தி, ராஜ்மோகன்
ஃபைனலி பாரத், விக்னேஷ் காந்த், ஆர்.ஜே.ஆனந்தி, ராஜ்மோகன்

முதல் நாள் நிகழ்ச்சியில், ஆனந்த விகடன் ஆசிரியரும் விகடன் குழும நிர்வாக இயக்குநருமான பா.சீனிவாசன் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான வரவேற்பு அளித்ததோடு, மாணவப் பத்திரிகையாளர் திட்டம் தொடங்கப்பட்ட நோக்கத்தையும் அதன் மூலம் உருவானவர்களைப் பற்றிய அறிமுகத்தையும் தந்தார். மேலும், இனி வரும் ஓராண்டில் அந்த மாணவர்கள் எவ்வாறு விகடனுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதை வழிகாட்டும் விதமாகப் பேசினார். அடுத்து, ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியின் ஷபீர் அகமது, ஒரு செய்தியைத் தரும்போது அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்களை மாணவர்களுக்கு வலியுறுத்தினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாணவப் பத்திரிகையாளர்களின் முதல் பேட்டிக்கான வி.ஐ.பி-க்கள் யார் யார்... பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி!

 சீமானுடன்...
சீமானுடன்...

மாணவர்களுக்கு ‘சுக்குத் தண்ணீர்’ (அப்படித்தான் சொல்ல வேண்டும் என்றார்) தந்து உபசரித்தார் சீமான். அவரிடம், பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் பற்றிய கேள்வியை மாணவர்கள் முன் வைத்தனர். ``குற்றம் இழைத்தவர்களுக்குத் தண்டனை அளிப்பதுடன், குற்றங்கள் நடைபெறுவதற் கான சமூக காரணங்களை யும் கண்டறிந்து களைவது முக்கியம். உதாரணமாக, போதையில் மூழ்கியே பலரும் குற்றச்செயல்களைச் செய்கின்றனர். எனவே, மதுவுக்கு எதிராகவும் நாம் போராட வேண்டியிருக்கிறது’’ என, சிந்திக்கும் கோணத்தை விரிவுபடுத்த வேண்டியதை விளக்கினார் சீமான்.

தொடங்கியது புதுப் பயணம்!

விஜய் ஆண்டனியுடனான சந்திப்பில், `` ‘பிச்சைக்காரன்’ படத்தில் அம்மா பற்றிய பாடல் பிடிக்கும். நிஜத்தில் உங்கள் அம்மா பற்றி சொல்லுங்கள்’’ என நம் நிருபர் படை கேட்க, ``சின்ன வயதிலேயே கணவனை இழந்தாலும், எங்களுக்காக வேறு கல்யாணம் செய்துக்கல அம்மா. `அப்படி ஆகணும், இப்படி ஆகணும்’னு சொல்லி வற்புறுத்தாம அன்பை மட்டும் கொடுத்து வளர்த்தாங்க. எங்க வீட்டுக்கும் அவங்க வேலைபார்த்த இடத்துக்கும் ரொம்ப தூரம். ஆனா, தன்னோட கஷ்டங்களெல்லாம் எங்களுக்குத் தெரியாம பார்த்துக்கிட்டாங்க’’ என நெகிழ்ந்தார் விஜய் ஆண்டனி. மாணவப் பத்திரிகையாளர் கவின், ‘நறுமுகையே நறுமுகையே’ பாடலைப் பாடிக்காட்டி விஜய் ஆண்டனியின் பாராட்டைப் பெற்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சந்தோஷ் நாராயணன், தன் இசைப்பயண முன்னோடிகள், இசையமைத்த பாடல்கள், உடன் பணியாற்றிய இயக்குநர்கள் பற்றி பகிர்ந்து கொண்டதுடன், ``வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையைப் பார்க்கும்போது ஒரு தூய்மை இருக்கும். இப்போது உங்கள் வாழ்வில் இருப்பதைப்போல இருங்கள்’’ என்று வாழ்த்தினார்.

 விகடன் குழும இயக்குநர் பா.சீனிவாசன்
விகடன் குழும இயக்குநர் பா.சீனிவாசன்

``அரசியல்வாதியான பிறகு என் முதல் பேட்டி விகடனில்தான் வந்தது’’ எனப் புன்னகையோடு வரவேற்றார் தமிழிசை செளந்தரராஜன் (அவரிடம் மாணவர்கள் கேட்ட சுவாரஸ்யமான கேள்விகள், பெட்டிச் செய்தியில்).

 விஜய் ஆண்டனியுடன்...
விஜய் ஆண்டனியுடன்...

பயிற்சியின் இரண்டாம் நாள், யூடியூப் பிரபலங்கள் ராஜ்மோகன், விக்னேஷ் காந்த், ஆர்.ஜே.ஆனந்தி, ஃபைனலி பாரத் ஆகியோர், மாணவர்களின் கிண்டலான கேள்விகளுக்கு அதே பாணியில் பதிலைத் திருப்பித் தர, அரங்கில் சிரிப்பலை வழிந்தோடியது. பெண்கள் மீதான வன்முறைகள் குறித்த கேள்விக்கு நிதானமாக, சரியான தன் கருத்தைப் பதிவுசெய்தார் ஆனந்தி.

 சந்தோஷ் நாராயணனுடன்...
சந்தோஷ் நாராயணனுடன்...

``நான் விகடனின் முன்னாள் மாணவப் பத்திரிகையாளர்’’ என்று தோழமையோடு தன் உரையைத் தொடங்கினார் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். ஒரு பத்திரிகையாளர் ஏன் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்பது தொடங்கி, என்ன விதமான புத்தகங்களை அவசியம் படிக்க வேண்டும் என்பதற்கான பட்டியலையும் தந்தார்.

அடுத்து, சிறப்பு விருந்தினராக நடிகர் தனுஷ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி. அவருக்குச் சிறப்பான வரவேற்பைக் கொடுத்த மாணவர்கள் சினிமா, பர்சனல் பக்கங்கள், அரசியல் என எல்லாவற்றையும் பற்றிக் கேள்விகளைத் தொடுத்தனர். அவரும் சிரித்துக்கொண்டே பதில் அளித்தார்.

பாட்டும் ஆட்டமுமாகக் களம் இறங்கினர் புதுகை பூபாளம் குழுவினர். அரசியல் பகடி என்பது என்ன என்பதை விழுந்து விழுந்து சிரிக்கவைத்துக் கற்றுக்கொடுத்தனர்.

 பரிசு அளிக்கும் விகடன் வாசகர் பா.சத்தியநாராயணன்
பரிசு அளிக்கும் விகடன் வாசகர் பா.சத்தியநாராயணன்

மூன்றாம் நாளில், சென்ற ஆண்டு மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டவர்கள் கெளரவிக்கப்பட்டனர். தலைசிறந்த மாணவப் பத்திரிகையாளர்களாக (Outstanding) மு.ஹரீஷ், சே.ஹரிபாபு, இ.மோகன், ஆ.வள்ளி செளத்திரி, பெ.ராகேஷ், மு.முத்துக்குமரன், ர.கண்ணன், சு.வெ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டன. அத்துடன் மிகச் சிறந்த, முதல் வகுப்பு மாணவப் பத்திரிகையாளர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப் பட்டன. விகடனோடு தொடர்ந்து பயணிக்கும் வாசகர் பா.சத்தியநாராயணன் தான் தேர்ந்தெடுத்த சிறந்த மாணவர்களுக்கு பேனா வழங்கி சிறப்பித்தார். ‘விலை மதிக்க முடியாத பரிசு இது’ என மாணவர்கள் நெகிழ்ந்தனர்.

 ஷபீர் அகமது,  எஸ்.ராமகிருஷ்ணன்
ஷபீர் அகமது, எஸ்.ராமகிருஷ்ணன்

சீனியர் மாணவப் பத்திரிகை யாளர்கள் தங்களின் ஒரு வருடக் கள அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள, ‘நாங்களும் சிறப்பான பங்களிப்பை அளிப்போம்’ என்ற உறுதியோடும் உற்சாகத்தோடும் விடைபெற்றது புதிய மாணவப் பத்திரிகையாளர் படை.

காத்திருக்கிறோம் நண்பர்களே!

கேள்வி... மாணவர்கள்;

பதில்... தமிழிசை செளந்தரராஜன்!

ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்த அரசியல் துறை ஒரே மாதிரியான வாய்ப்புகளைத் தருமா?

அரசியல் என்பது சவாலான துறை. அது பெண்களுக்கு ஏற்றதா என்றால் கேள்விக்குறிதான். ஆனால், பெண்கள் அதிகளவு அரசியலுக்கு வர வேண்டும் என்பது என் விருப்பம். எனக்கு எப்பவுமே சமையலைவிடவும் மேடைப் பேச்சுதான் பிடிக்கும். அப்பா அரசியல்வாதி என்பதால் அவரின் உதவியாளர்போலவே இருப்பேன். மருத்துவக் கல்லூரியில் படிக்கையில் மாணவர் தலைவராக இருந்திருக்கிறேன்.

தொடங்கியது புதுப் பயணம்!

பெண்ணின் இயல்பே மிருதுவானது. அரசியலிலோ கடினமாக இருக்க வேண்டும். இந்திராகாந்தி, மாயாவதி, மம்தா பானர்ஜி, ஜெயலலிதா... இவர்கள் எல்லாம் ஏன் உறுதியான தன்மையில் அல்லது முரட்டுத்தன்மையில் இருக்கிறார்கள் எனப் பலரும் நினைக்கிறார்கள். சூழலின் தேவை அப்படியிருக்கிறது. அவர்கள் காயப்பட்டு காயப்பட்டு அப்படி ஆகியிருக்கிறார்கள். நான்கூட இன்னும் பத்தாண்டுகளில் அப்படி உறுதியானவராக மாறிவிடலாம்.

உங்களைக் கேலி செய்து பதிவிடப்படும் மீம்ஸ்களைப் பார்க்கிறீர்களா?

அரசியல் ரீதியான விமர்சனம் என்றால் பரவாயில்லை. என் உருவத்தை வைத்து மீம்ஸ் போடுகிறார்கள். ‘தமிழிசை உயரம் குறைவு... ஸ்டூலில் நின்று பேசுகிறார்’ என்று எழுதுகிறார்கள். ஒருமுறை அண்ணா மேடையில் பேசப்போகும்போது உயரத்துக்காக ஒருவர் ஸ்டூலை எடுத்து வந்து போடுவார். அதில் ஏறி அவர் பேசும்போது, ‘நான் தொண்டனால் உயர்ந்தவன்’ என்று சொல்வார். `உண்மைதான்.. இன்று தொண்டன் வைத்த ஸ்டூலில் ஏறிதான் உயர்ந்தேன்’ என்பார். அப்படியான அரசியல் வரலாறு கொண்ட மாநிலத்தில், உருவத்தை வைத்துக் கிண்டல் செய்பவர்கள் தங்கள் வக்கிரத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

நீங்கள் மருத்துவக் கல்லூரியில் படித்தபோது ராகிங் செய்யப்பட்டிருக்கிறீர்களா?”

பலமுறை மாட்டியிருக்கிறேன். அப்பா காங்கிரஸ் என்பதால், கறுப்பு கலரில் சேலை, சிவப்பு கலரில் சட்டை போட்டு வர வேண்டும் என அந்தக் கும்பல் சொல்லும். ஆனால், பச்சைப் பாவாடை, சிவப்புச் சட்டை, வெள்ளைத் தாவணி என காங்கிரஸ் கலரில் கல்லூரிக்குச் செல்வேன். இப்படி அவர்கள் எது சொன்னாலும் கேட்க மாட்டேன். அவர்கள் மறித்தால், ‘நான் ஒருத்தர் சொன்னா மட்டும்தான் கேட்பேன்’ என்பேன். ‘யார் அவர்?’ எனக் கேட்டால் பதில் சொல்ல மாட்டேன். இப்படியே ரொம்ப நாள் ஆனது. அவர்கள் நண்பர்களான பிறகு, ‘யார் அவர்?’ என்றார்கள். நான் சிரித்துக்கொண்டே, ‘அது நான்தான்... நானாக நினைத்தால் அப்படி வருவேன்’ என்றேன். எல்லோரும் சிரித்துவிட்டார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism