Published:Updated:

“பத்திரிகையாளர் என்பதில்தான் பெருமை!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்
விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்

அனுபவம் பகிர்ந்த மாணவப் பத்திரிகையாளர்கள்

பிரீமியம் ஸ்டோரி
தமிழ் ஊடகக் களத்தில், விகடன் குழுமம் நிகழ்த்திய மறுமலர்ச்சியே ‘விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்.’ ஊடகத்துறையில் அனைத்துத் தரப்பினரையும், இந்தத் திட்டத்தின் வாயிலாக பங்கேற்கச் செய்த பெருமை விகடனையே சாரும். இன்று, தமிழ் ஊடக உலகின் விருட்சங்களாக ஆளுமை செலுத்திக் கொண்டிருக்கும் பலருக்கும் விதையாக இருந்தது இந்தத் திட்டம்தான். அந்தவகையில், ஒவ்வோர் ஆண்டும், பல்வேறு துறைகளில் பயிலும் மாணவர்களை இந்தத் திட்டத்தில் சேர்த்து, பயிற்சியளித்து, அவர்களைத் தரமான பத்திரிகையாளர்களாக ஊடக உலகுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறது விகடன். இந்த ஆண்டு கொரோனா காரணமாக சிறு தடை. ஆம், 2020-21-ம் ஆண்டுக்கான மாணவர் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில், கடந்த 2019-2020-ம் ஆண்டு சிறப்பாகப் பணியாற்றிய மாணவப் பத்திரிகையாளர் களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வு, நவம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. கொரோனா காரணமாக சென்னை மாணவர்கள் நேரடியாகவும் மற்றவர்கள் இணையம் வழியாகவும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் கா.பாலமுருகன் வரவேற்புரை நிகழ்த்த, விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் சிறப்புரை வழங்கினார்.

“பத்திரிகையாளர் என்பதில்தான் பெருமை!”

தனது சிறப்புரையில் அவர், களத்துக்குச் சென்று, வித்தியாசமான முயற்சிகள் செய்து எழுதப்பட்ட கட்டுரைகளைக் குறிப்பிட்டு பாராட்டியது மாணவர் களுக்கு மிகுந்த உற்சாகத் தைத் தந்தது. “இந்தத் திட்டத்தின் வாயிலாக, நீங்கள் கற்றுக்கொண்ட பல நல்ல விஷயங்களை உங்கள் சொந்த வாழ்க்கையில் பயன்படுத்தி, உங்களை வளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்’’ என இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கத்தை அவர் எடுத்துச் சொல்ல, மாணவப் பத்திரிகை யாளர்கள் உற்சாகமாக ஆமோதித்தனர்.

கடந்த ஆண்டு சிறப்பாகச் செயல்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு விருதுகளும், பரிசுகளும் வழங்கினார் விகடன் குழும நிர்வாக இயக்குநர். அந்தவகையில் ‘அவுட்ஸ்டாண்டிங்’ பிரிவில் பா.கிருத்திக் பாபு, க..நிதி, பா.கவின், க.ர.பிரசன்ன அரவிந்த், சே.பாலாஜி ஆகியோரும், ‘எக்ஸலன்ஸ்’ பிரிவில் ஆ.வல்லபி, கிகோகுலன், கு.தினகரன், தி.ஷிவானி, செ.க.மௌரீஷ், சி.அரவிந்தன் ஆகியோரும், ‘டிஸ்டிங்ஷன்’ பிரிவில் வெ.கௌசல்யா, ச.கிருத்திகா, அ.அ.நவயுகன், மு.கற்பகவள்ளி, ர.அந்தோணி அஜய் ஆகியோரும் தேர்வாகி யிருந்தனர்.

“பத்திரிகையாளர் என்பதில்தான் பெருமை!”

பரிசு பெற்ற மாணவர்களில் சிலர் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டனர். “கடந்த ஆண்டு தொடக்கவிழாவில் நான் கலந்து கொண்டேன். அதற்கு முந்தைய ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்டு, பரிசு வாங்கியவர்களில் பெண்கள் யாருமே இல்லை. கண்டிப்பாக அதை முறியடிக்க வேண்டும் என்று நினைத்தேன். நான் நிர்ணயித்த இலக்கைவிட அதிகமான கட்டுரைகள் எழுதி அதைச் சாதித்திருக்கிறேன்’’ என்றார் மருத்துவக் கல்லூரி மாணவி கவின்.

அடுத்ததாக “நான் ஐஐடி-யில் மானுடவியல் படிக்கிறேன். ஆனால், நான் ஒரு பத்திரிகையாளர் என்று சொல்லிக்கொள்வதில்தான் எனக்குப் பெருமையாக இருக்கிறது. அந்த வாய்ப்பைத் தந்தது விகடன்தான். அதுமட்டுமல்ல... நம்முடைய கண்ணோட்டத்திலிருந்து மட்டுமே ஒரு விஷயத்தை அணுகுவதைத் தவிர்த்து, சமூகத்திலுள்ள பலவிதமான மனிதர்களின் கண்ணோட்டங்களி லிருந்தும் எப்படி அணுக வேண்டும் என்பதையும் இந்த ஓராண்டில்தான் கற்றுக்கொண்டேன்’’ என்று மாணவி வல்லபி தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“பத்திரிகையாளர் என்பதில்தான் பெருமை!”

தொடர்ந்து, இந்தத் துறையில் ஒவ்வொரு வார்த்தையும் எவ்வளவு முக்கியமானது என்பதை யும், ஒரு வார்த்தையைக் குறைத்து எழுதியதால் ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்தும் மாணவப் பத்திரிகையாளர் பிரசன்ன அரவிந்த் பகிர்ந்துகொண்ட விஷயங்கள், எதிர்கால மாணவப் பத்திரிகையாளர்களுக்குப் பயனுள்ளவையாக இருந்தன. “எந்தவொரு நிகழ்வையும் நடுநிலையுடன் எப்படி அணுக வேண்டும் என்பதை விகடனில்தான் கற்றுக் கொண்டேன்’’ என மாணவப் பத்திரிகையாளர் பாலாஜி நெகிழ்ச்சியோடு தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

“பத்திரிகையாளர் என்பதில்தான் பெருமை!”

கடந்த ஆண்டு மாணவப் பத்திரிகையாளர்கள் எழுதிய, கட்டுரைகளின் எண்ணிக்கைகள், அவற்றின் சிறப்புத் தன்மைகளை மதிப்பிட்டு விருதுக்கு நாம் ஒரு பட்டியலைத் தயார் செய்திருந் தோம். அதேபோல கடந்த 37 வருடங்களாக, மாணவப் பத்திரிகையாளர்களில் யார் சிறப்பாகச் செயல்படுகிறார்கள் எனத் தன்னார்வத்தோடு கட்டுரைகளைப் படித்து, மதிப்பிட்டு அவர்களுக்கு பேனா பரிசளித்துவரும் சத்தியநாராயணனும் ஒரு பட்டியலைத் தயார் செய்து வந்திருந்தார். சொல்லிவைத்தாற்போல, நாம் விருதுகளுக்குத் தேர்வு செய்த மாணவர்களையே அவரும் தேர்வு செய்திருந்தார். வாசகர்களின் பல்ஸைப் பிடித்து அவர்களின் அலைவரிசையில் விகடன் சரியாகப் பயணித்துவருகிறது என்பதற்குச் சான்றாகவும் அந்தப் பட்டியல் இருந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு