Published:Updated:

விகடன் டி.வி-யில் சாலமன் பாப்பையா அணியின் கலகல கலந்துரையாடல்! புத்தாண்டு ஸ்பெஷல் #VikatanTVExclusive

விகடன் கலந்துரையாடல்
News
விகடன் கலந்துரையாடல்

`ஊரடங்கு வாழ்க்கை பயமுறுத்துகிறதா? பண்படுத்துகிறதா?' கலகலப்பான கலந்துரையாடல்... யூட்யூப் உலகில் விகடனின் புதிய முயற்சி!

விகடன் டி.வி-யில் சாலமன் பாப்பையா அணியின் கலகல கலந்துரையாடல்! புத்தாண்டு ஸ்பெஷல் #VikatanTVExclusive

`ஊரடங்கு வாழ்க்கை பயமுறுத்துகிறதா? பண்படுத்துகிறதா?' கலகலப்பான கலந்துரையாடல்... யூட்யூப் உலகில் விகடனின் புதிய முயற்சி!

Published:Updated:
விகடன் கலந்துரையாடல்
News
விகடன் கலந்துரையாடல்
விகடன் வாசகர்களே... பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் தலைமையில்...
பட்டிமன்றப் பேச்சாளர்கள்: புலவர் M.ராமலிங்கம், திருமதி.கவிதா ஜவஹர், திரு.S.ராஜா, திருமதி.பாரதி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்கும்...

ஊரடங்கு வாழ்க்கை

பயமுறுத்துகிறதா?

பண்படுத்துகிறதா?

கலகலப்பான கலந்துரையாடல்...

விகடன் கலந்துரையாடல்
விகடன் கலந்துரையாடல்

ஊரடங்கு வாழ்க்கை நம்மை பயமுறுத்துகிறதா? பண்படுத்துகிறதா? - எல்லாருக்கும் இருக்கிற கேள்விகள்தான். இதுக்குள்ள நூற்றுக்கணக்கான உப கேள்விகளும் இருக்கு. ஊரடங்கிப் போயிருக்கிற நாம, வாயடங்கி இருக்க வேண்டியதில்லையே... தமிழர்களையும் பேச்சையும் பிரிக்க முடியுமா என்ன?

பட்டிமன்றப் பேச்சாளர் ராஜாவைத் தொடர்புகொண்டோம்...

விகடன் கலந்துரையாடல்
விகடன் கலந்துரையாடல்

“சார்... ‘ஊரடங்கு வாழ்க்கை பயமுறுத்துகிறதா? பண்படுத்துகிறதா?’ இந்தத் தலைப்புல ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு பண்ணலாமா?”

“இந்தச் சூழல்ல எப்படிச் சாத்தியம்?” என்று ஆச்சர்யமாகக் கேட்டார்.

“ஆன்லைன் வீடியோ கால்ல பேசலாம் சார்!” என்றோம். உடனே உற்சாகமானார். பேராசிரியர் சாலமன் பாப்பையாவிடம் பேசி சம்மதிக்கவைத்து, பின்பு புலவர் எம்.ராமலிங்கம், பாரதி பாஸ்கர், கவிதா ஜவகர் ஆகியோரிடமும் கலந்து பேசி அடுத்த நாளே வீடியோ கான்பரன்ஸில் வெல்கம் செய்தார். “ஊரடங்கா... உலகமேல்லய்யா அடங்கிக் கிடக்கு”னு ஆரம்பிச்சார் சாலமன் பாப்பையா. ஆழமா அழகா அழுத்தமா ஒவ்வொருத்தரும் வாதங்களை முன்வைக்க, கேள்விகளும் பதிலும் சீண்டலும் நக்கலுமா களைகட்டியது காணொலி உரையாடல்!

நாளை முற்பகல் 12 மணிக்கு விகடன் வெப் டிவியில் நிகழ்ச்சி வெளியாகவிருக்கிறது. எடிட்டிங் டேபிளில் சிரித்துக்கொண்டே வேலை நடக்கிறது! அதிலிருந்து சுடச்சுட கொஞ்சம் உங்களுக்கு...

ஊரடங்கு வாழ்க்கை எப்படி இருக்குனு சாலமன் பாப்பையா கேட்டதற்கு, அவரது மனைவி சொன்ன பதில், யதார்த்தமானது அதேசமயம் அக்மார்க் மதுரைக் குசும்பு. ‘கோ கோ கொரோனானு தீப்பந்தம் பிடிச்சிக்கிட்டு ஓடுன சம்பவம்’, 'குட்டி சாமியார் சொன்ன ஜோசியம்’, ‘கொரோனா கோலம் போட்டு பீதிய கிளப்பிறது’னு அன்றாட கொரோனா வைரல் அட்ராசிட்டிஸை கலகலனு முன்வச்சிருக்காங்க கவிதா ஜவகர்.

விகடன் கலந்துரையாடல்
விகடன் கலந்துரையாடல்

“என்னா திமிரு... ஆணவம் நமக்கு...” என உணர்ச்சிவசத்தோடு, மனிதன் இயற்கை மீது கொண்ட ஏளனத்தை பாரதி பாஸ்கர் விமர்சனமாவே பதிவுசெஞ்சிருக்காங்க. அதுல நிறையவே உண்மை இருக்கு! சாலமன் பாப்பையா அழுத சம்பவத்தை பாரதி பாஸ்கர் விவரித்தபோது அவருக்கும் குரல் தழுதழுத்தது. அது எந்த விஷயம்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் நீங்களும் இப்படிச் சொல்வீங்க... “அந்த விஷயத்துக்காக நாமகூடதான் கண்கலங்கினோம்!”

“பீட்ரூட்டுக்கும் கேடு... அல்வாவுக்கும் கேடு...” ஊரடங்கு காலத்தில் பெருகியிருக்கும் ஆண்கள் சமையலை அதிரடியாய் கலாய்த்த ராஜா, கொரோனாவில் இறந்த ஒரு தாயைப் பற்றி குறிப்பிட்டபோது உணர்ச்சிவசப்பட்டார். “ஓட்டுக்கு இவ்வளவு பணம்... உயிர்வாழ இவ்வளவுதானா? கவிதா ஜவகர் கேட்ட நறுக் கேள்வி... நாம் ஒவ்வொருவரும் கேட்க நினைத்த கேள்வி. வாழ்க்கையில் எதையெல்லாம் இதுநாள் வரை மிஸ் பண்ணிருக்கோம்’னு உண்மையில் நெகிழ வச்சுட்டார் புலவர்.ராமலிங்கம். “எதுக்கும் பயப்படாத நான், இப்போ வீட்ல இதுக்கெல்லாம் பயப்பட வேண்டியது இருக்கு!” இப்படி சாலமன் பாப்பையா எதுக்கு சொன்னார்னு தெரிஞ்சா வாய்விட்டுச் சிரிப்பீங்க.

விகடன் கலந்துரையாடல்
விகடன் கலந்துரையாடல்

“வொர்க் ஃபிரம் ஹோம்ல என்ன நடக்குது தெரியுமா?”, மனிதர்கள் இந்த ஒரு மாசத்துல எவ்ளோ மாறியிருக்காங்க தெரியுமா? உங்க தெருவ கூட்டிப் பெருக்குறவங்களோட பேர் உங்களுக்குத் தெரியுமா?

மக்கள் எவ்வளவு கஷ்டப்படுறாங்க... எவ்வளவு சந்தோஷப்படுறாங்க தெரியுமா? இப்போ என்ன நடக்குது... இனிமே என்ன நடக்கப் போகுது? வாழ்க்கை இவ்வளவு அழகானதா? வாழ்க்கை இவ்வளவு அச்சமூட்டக்கூடியதா?" இப்படிப் பல நூறு கேள்விகள்... பல நூறு பதில்கள்!

இயற்கை, மனிதன், அரசாங்கம், பொருளாதாரம், நாட்டுப்பற்று, வரலாறு, மூடநம்பிக்கை, பசி, வலி, மனிதநேயம், பிரிவு, கண்ணீர், மகிழ்ச்சினு பல விஷயங்கள் முன்வைக்கப்பட்டு நடந்த இந்த கலகலப்பான கருத்துள்ள கலந்துரையாடலில் ‘ஊரடங்கு வாழ்க்கை பயமுறுத்துகிறதா? பண்படுத்துகிறதா? என்ற கேள்விக்கு சாலமன் பாப்பையா சொன்ன முத்தாய்ப்பான பதிலைத் தெரிஞ்சுக்க... அவசியம் நீங்க இந்தக் காணொலியைப் பார்க்கணும்!

விகடன் வாசகர்களே...யூட்யூப் உலகில் ஒரு புதிய முயற்சி! பட்டிமன்றப் பேச்சாளர், பேராசிரியர்சாலமன் பாப்பையா அவர்களின்...

Posted by VikatanTv on Sunday, April 12, 2020
மிஸ்பண்ணிடாதீங்க!

நாளை... அதாவது ஏப்ரல் 14, முற்பகல் 12 மணிக்கு உங்கள் vikatan web TVயில் பார்க்கலாம்...

இப்போதே இந்த லிங்க்கை க்ளிக் செய்து vikatan web TV ஐ சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்!

கொரோனாவிலிருந்து விலகியிருப்போம்... இணையத்தில் இணைந்திருப்போம்!