Published:Updated:

``4 வகைக் கழிவுகள்; 4 குப்பைத் தொட்டிகள்!” - திடக் கழிவு மேலாண்மைக்கு யோசனை சொன்ன கருத்தரங்கு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
 `இனியெல்லாம் இயற்கையே’
`இனியெல்லாம் இயற்கையே’ ( ராகேஷ். பெ )

இதை எந்தச் சிக்கலும் இல்லாமல் வெளியேற்றுதல் என்பது அரசாங்கத்துக்கே சவாலான விஷயம்தான். ஆனால், இந்த முயற்சியை வீட்டிலிருந்து தொடங்கினால் எளிதாகச் செய்யலாம்.

சென்னை பெரும்பாக்கத்தில் திடக் கழிவு மேலாண்மை தொடர்பான `இனியெல்லாம் இயற்கையே’ என்னும் கருத்தரங்கு நடைபெற்றது. திடக் கழிவுகளை மறுசுழற்சி செய்வது தொடர்பாகவும் அதன் நன்மைகள் குறித்தும் இந்தக் கருத்தரங்கில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இதை பசுமை விகடன், எக்ஸ்னோரா இன்டர்நேஷ்னல், பெரும்பாக்கம் குடியிருப்போர் நலக் கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து நடத்தினர்.

`இனியெல்லாம் இயற்கையே’ கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள்
`இனியெல்லாம் இயற்கையே’ கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள்
ராகேஷ். பெ

இந்தக் கருத்தரங்கில், மறுசுழற்சிப் பொருள்களில் இருந்து கிடைக்கும் மகத்தான வருமானம், திடக்கழிவு மேலான்மையின் நுட்பங்கள், வீட்டுத் தோட்டத்தில் இயற்கை வழியில் காய்கறி உற்பத்தி செய்தல், தண்ணீர் பஞ்சத்தை தடுக்கும் வழி உள்ளிட்ட பல விஷயங்கள் பேசப்பட்டது.

கருத்தரங்கில் பேசிய நம்ம ஊரு ஃபவுண்டேஷனின் நிறுவனர் `நம்ம ஊரு’ பி. நடராஜன், உலகம் முழுவதும் தினமும் 210 கோடி டன் குப்பைகள் குவிகிறது. இந்தியாவில் 1.5 லட்சம் டன் குப்பைகள் உற்பத்தி ஆகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் தினமும் 6,000 டன் குப்பைகள் உற்பத்தி ஆகிறது. இவற்றைக் கையாள்வது என்பது மிக சவாலானது.

`இனியெல்லாம் இயற்கையே’ கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள்
`இனியெல்லாம் இயற்கையே’ கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள்
ராகேஷ். பெ

இந்தத் திடக் குப்பைகளை 4 விதங்களாகப் பிரிக்கலாம். இ - வேஸ்ட் எனப்படும் எலெக்ட்ரானிக் கழிவுகள், சமையல் அறையிலிருந்து வரும் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகள். இந்த நான்கு கழிவுகளையும் பிரிக்காமல் ஒரே இடத்தில் கொட்டுவதால், நாள்கள் செல்லச் செல்ல இந்த நான்கு குப்பைகளும் இணைந்து ஒரு விதமான ரசாயனம் வெளியேறும். இது அந்த இடத்தில் இருக்கும் நிலத்தடி நீரைப் பயன்படுத்த முடியாதபடி செய்துவிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதை எந்தச் சிக்கலும் இல்லாமல் வெளியேற்றுதல் என்பது அரசாங்கத்துக்கே சவாலான விஷயம்தான். ஆனால், இந்த முயற்சியை வீட்டிலிருந்து தொடங்கினால் எளிதாகச் செய்யலாம். வீட்டில் 4 குப்பைத் தொட்டிகள் வைப்பதன் மூலம் குப்பைகளை நாமே பிரித்துக் கொட்ட முடியும். மக்கும் குப்பையான சமையல் அறை குப்பைகளை மட்டும் தினமும் அகற்ற வேண்டும். மற்றவ குப்பைகள் மெதுவாகதான் சேரும்” என்று குப்பைகளை ஒன்றாக கொட்டுவதன் ஆபத்தையும் அதை எதிர்கொள்ளும் யோசனைகளையும் வழங்கினார்.

`இனியெல்லாம் இயற்கையே’ கருத்தரங்கில் இடம்பெற்ற ஸ்டால்
`இனியெல்லாம் இயற்கையே’ கருத்தரங்கில் இடம்பெற்ற ஸ்டால்
ராகேஷ். பெ

அதன் பின்னர் பேசிய ஹோம் எக்ஸ்னோரா அமைப்பைச் சார்ந்த செந்தூர் பாரி. ``நம்மில் பலர் வேலூரில் இருக்கும் பொற்கோயில் சென்றிருப்போம். அங்கு சென்றால் கோயிலை மட்டுமல்லாது, கோயிலின் திடக்கழிவு மேலாண்மையையும் பார்வையிடுங்கள்” என்றார்.

தென்னையில் ஊடுபயிராகத் தக்காளி… இயற்கைக்கு வழிகாட்டிய பசுமை விகடன்!

இந்தக் கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும், சிறுதானியங்கள் உட்பட பல இயற்கை மற்றும் கழிவுகள் மறுசுழற்சி தொடர்பான ஸ்டால்கள் போடப்பட்டிருந்தன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு