Published:Updated:

சிட்டுக்குருவிகள் மனிதர்களுக்கு அருகில் வாழ்பவை; அதற்கான சூழலை உருவாக்குவது எப்படித் தெரியுமா?

கூடுகள் வழங்கும் நிகழ்ச்சியில்

வீடுகளில் உள்ள தாழ்வாரங்கள், முகடுகளில் கூடு கட்டும். ஆனால், அடுக்குமாடி குடியிருப்புகளில் இதுபோன்ற அமைப்புகள் இல்லாததால்தான் செயற்கையான கூடுகளை வைக்க வேண்டியது இன்று அவசியமாகிறது.

சிட்டுக்குருவிகள் மனிதர்களுக்கு அருகில் வாழ்பவை; அதற்கான சூழலை உருவாக்குவது எப்படித் தெரியுமா?

வீடுகளில் உள்ள தாழ்வாரங்கள், முகடுகளில் கூடு கட்டும். ஆனால், அடுக்குமாடி குடியிருப்புகளில் இதுபோன்ற அமைப்புகள் இல்லாததால்தான் செயற்கையான கூடுகளை வைக்க வேண்டியது இன்று அவசியமாகிறது.

Published:Updated:
கூடுகள் வழங்கும் நிகழ்ச்சியில்

கடந்த ஏப்ரல் 23-ம் தேதி சென்னை ராயபுரத்தில் உள்ள தனலட்சுமி மேல்நிலைப் பள்ளியில் கூடுகள் அமைப்பு, பசுமை விகடன், தனலட்சுமி மேல்நிலைப்பள்ளி இணைந்து `கூடுகள் வழங்கும் விழா, சிட்டுக்குருவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி’யை நடத்தியது. இந்நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என 350 பேர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கலந்துகொண்டோர்
நிகழ்வில் கலந்துகொண்டோர்

நிகழ்வில் பேசிய தனலட்சுமி மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்புவாணன், ``இன்றைய காலகட்டத்தில் பெரு நகரங்களில் உள்ள பறவைகள் குறித்து மாணவர்கள் தெரிந்துகொள்வது அவசியம். பறவைகளைப் புரிந்துகொள்வது சுற்றுச்சூழலைப் புரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும். சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம். அதைச் சிட்டுக்குருவிகளிலிருந்து தொடங்குகிறோம். இந்த நிகழ்வு மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், மாணவர்களுக்குள் விழிப்புணர்வை ஏற்படுத்தும்” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தலைமையாசிரியர் அன்புவாணன், இளமாறன்
தலைமையாசிரியர் அன்புவாணன், இளமாறன்

சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட பறவை ஆர்வலர் பேராசிரியர் முருகவேள், ``சென்னையில் எந்தெந்த இடங்களில் இன்னும் சிட்டுக்குருவிகள் இருக்கின்றன என்று நாங்கள் ஒரு கணக்கெடுப்பு நடத்தினோம். அதில் வடசென்னை பகுதிகளில் அதிகமாக சிட்டுக்குருவிகள் இருப்பது தெரியவந்தது. காரணம் என்னவென்றால் பழைய மாடலில் இங்கு வீடுகள் உள்ளன. அதனால், சிட்டுக்குருவிகள் வருகை புரிகின்றன. சென்னையின் மற்ற பகுதிகளில் கட்டப்படும் நவீன குடியிருப்புகளில் சிட்டுக்குருவிகள் வந்து கூடு கட்டுவதற்கான அமைப்புகள் இல்லை. செல்போன் டவர்களால் சிட்டுக் குருவிகள் அழிகின்றன என்று திரைப்படமே வந்துள்ளது. இதற்கு அறிவியல் ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேரளாவில் இணையத்துக்குப் பயன்படுத்தும் மின் காந்த அலைகளால் தேன் சேகரிக்கச் செல்லும் தேனீக்கள் திரும்பவும் கூட்டுக்கு வருவதை மறந்திருக்கின்றன என்ற தகவல் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் மின்காந்த அலைகளால் ஏதோவொரு பாதிப்பு இருக்கிறது என்பதை அறியமுடிகிறது.

கூடுகளைப் பெறும் மாணவிகள்
கூடுகளைப் பெறும் மாணவிகள்

சென்னையில் சில வருடங்களுக்கு முன்பு வீட்டுத்தோட்டங்களில் காணப்பட்ட தவிட்டுக் குருவி, தேன் சிட்டு, தையல் குருவி போன்ற பறவைகள் இன்று சென்னையில் அரிதாகிவிட்டன. இதற்குக் காரணம் வீடுகளில் தோட்டங்களும் வளர்ந்த மரங்களும் இல்லை என்பதே. அதேபோன்று பறவைகள் கூடு கட்டும் மரங்களை யெல்லாம் வெட்டி வீழ்த்தி வருகிறோம். இன்று சென்னையில் அதிகம் காக்காவையும் புறாவையும்தான் பார்க்க முடிகிறது. மற்ற பறவைகளைப் பார்ப்பது அரிதாக இருக்கிறது.

கூடுகள் பெற்ற மாணவர்கள்
கூடுகள் பெற்ற மாணவர்கள்

சிட்டுக்குருவிகளுக்கான உணவாகத் தானியங்கள் இருந்தன. தானியங்களை முன்பெல்லாம் சணல் சாக்கில் எடுத்துப் போகும்போது அவை சிந்தும். இப்போது பிளாஸ்டிக் பைகளில் நன்றாக பேக் செய்யப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதால் அதுபோன்று விஷயம் இல்லாமலே போய்விட்டது. சின்ன புழு பூச்சிகள் சிட்டுக்குருவிகளுக்கு நல்ல உணவு. ஆனால், நகர்ப்புற வாகன புகையிலிருந்து வெளிவரும் வேதிப் பொருளால் புழு பூச்சிகள் அழிந்துவிட்டன என்று சொல்கின்றன ஆய்வுகள்.

நிகழ்வில்
நிகழ்வில்

மேலும் சிட்டுக்குருவிகள் தங்குவதற்கு அடர்ந்த புதர்ச் செடிகள் அவசியம். ஆனால், நகர்ப்புறங்களில் புதர்ச் செடிகள் இல்லை. நகரங்களில் சிட்டுக்குருவிகள் அழிய தொடங்கியிருப்பது ஆபத்தின் குறியீடு. எனவே, நகர்ப்புறங்களில் அயல்நாட்டு மரங்களைத் தவிர்த்து நம் நாட்டு மரங்கள், பழம் தரும் மரங்கள், செடிகளை வளர்ப்பது பறவைகளைப் பெருக்க உதவும். நன்கு பெரிதாக வளர்ந்த மரங்களை நாம் பாதுகாக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காரணம் நன்கு வளர்ந்த பெரிய மரங்களின் பொந்துகளில் கிளி, மைனா, ஆந்தை போன்ற பறவைகள் வசிக்கும். எனவே, அத்தகைய மரங்களைப் பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் இருக்கும் மரங்களை வெட்டாமல் பாதுகாக்க வேண்டும். சென்னையில் பறவைகளை அதிகரிக்க வேண்டுமென்றால் அவை வாழ்வதற்கும் உண்பதற்கும் தேவையான சூழலை உருவாக்க வேண்டியது அவசியம்.

பேராசிரியர் முருகவேள்,
பேராசிரியர் முருகவேள்,

மற்ற பறவைகளிலிருந்து சிட்டுக்குருவிகள் விதிவிலக்கானவை. அவை மனிதனை அண்டியே வாழ்ந்துவந்தவை. குறிப்பாக, வீடுகளில் உள்ள தாழ்வாரங்கள், முகடுகளில் கூடு கட்டும். ஆனால், அடுக்குமாடி குடியிருப்புகளில் இதுபோன்ற அமைப்புகள் இல்லாததால்தான் செயற்கையான கூடுகளை வைக்க வேண்டியது இன்று அவசியமாகிறது” என்றார்.

பேராசிரியர் முருகவேள், கூடுகள் கணேசன்
பேராசிரியர் முருகவேள், கூடுகள் கணேசன்

கூடுகள் அமைப்பின் நிறுவனர் `கூடுகள்' கணேசன் பேசியபோது, ``சிறு வயதில் நாம் தினமும் காலையில் எழுந்ததும் பறவைகளின் கீச்சுகளைக் கேட்டிருப்போம். அந்த சத்தம் நமக்குள் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், இயற்கைக்கு எதிரான நம்முடைய செயல்பாடுகளால் இன்று, பறவையினங்கள் அழிவை நோக்கிச் செல்கின்றன. அதில் சிட்டுக்குருவிகள் முன்னணியில் இருக்கின்றன. இதை உணர்ந்துதான் இந்த அமைப்பைத் தொடங்கினோம். உதவிப் பேராசிரியர் பணியைச் செய்துகொண்டே வார விடுமுறை நாள்களில் நண்பர்களோடு சிட்டுக்குருவிகள் குறித்து விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தி வருகிறோம்.

மாணவர்களுக்கு கூடுகளை இலவசமாக வழங்குவது, கருத்துரை வழங்குவது எனச் செயல்பட்டு வருகிறோம். இதுவரை 10,000 கூடுகளை வழங்கி இருக்கிறோம். இந்தக் கூடுகள் எல்லாம் மாணவர்களைக் கொண்டே உருவாக்கப்பட்டவை. மாணவர்களிடத்தில் சிட்டுக்குருவி குறித்த ஆர்வத்தை உருவாக்கவே இதைச் செய்கிறோம். இதை வீட்டின் சுற்றுப்புறத்தில் வெயில், மழை படாத இடங்களில் ஆணியடித்து மாட்டிவிட்டால் போதும். சிட்டுக்குருவிகள் அங்கே வருகை புரியும். இந்தக் கூடுகளை விலைக்கு வாங்கிதான் வைக்க வேண்டுமென்ற அவசியமில்லை. பிளைவுட், காட்டன் பாக்ஸில்கூட எளிமையாக செய்துகொள்ளலாம்” என்றார். இறுதியாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் பொது மேலாளர் இளமாறான் பேசினார்.

டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி மாணவ மாணவிகள்.
டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி மாணவ மாணவிகள்.

நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு இலவசமாக மரப்பெட்டியால் ஆன கூடுகள் வழங்கப்பட்டன. நிகழ்வின் ஒருபகுதியாகக் கூடு தயாரிப்பதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டது. இதில் ஜி.கே ஜெயின், வள்ளல் எஸ்.ஐ அழகர்சாமி செட்டியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். இதோடு அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியின் தாவரவியல் துறை தலைவர் ராஜாராம் மற்றும் அத்துறையில் பயிலும் மாணவ, மாணவிகளும் ஆர்வமோடு இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். சிட்டுக்குருவிகள் குறித்த புகைப்படக்கண்காட்சியும் நடைபெற்றது. அனைவரும் மகிழ்ச்சியாக கூடுகளைப் பெற்றுக் கொண்டு கலைந்து சென்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism