Published:Updated:

தேனியில் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து தொடங்கிய`ஆணி பிடுங்கும் திருவிழா!’

அமைப்புகள் பாரபட்சம் பார்க்காமல், அனைவரும் ஒன்றிணைந்து களப்பணியாற்றுவதாலே அனைத்தும் சாத்தியமாகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்வதை தடுப்பதற்காகவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேனியில், தன்னார்வலர்கள் குழு ஆணி பிடுங்கும் திருவிழாவை இன்று ஆரம்பித்தது.

தன்னார்வலர்கள்
தன்னார்வலர்கள்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய ஆணி பிடுங்கும் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்,``அமைப்பு ரீதியாக இதை நாங்கள் முன்னெடுக்கவில்லை. தேனியில் பல்வேறு அமைப்புகள், சுற்றுச்சூழல் சார்ந்த விசயங்களில் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

அவர்களை ஒன்றிணைத்துதான் இதை ஆரம்பித்திருக்கிறோம். மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்வதை தடுக்கும் நோக்கோடும் மரங்களில் ஆணி அடிக்கக்கூடாது என மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், இதுவரை மரங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகளைப் பிடுங்கிக் கொண்டிருக்கிறோம்.

செந்தில்
செந்தில்

மரங்கள் இல்லையென்றால் மனிதர்கள் இல்லை. அப்படி இருக்கையில், விளம்பர நோக்கோடு மரங்களில் ஆணி அடிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. சில மரங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணி, மரத்திற்குள் நன்கு பதிந்துள்ளது. அதை எடுத்த பின்னர், மஞ்சள், வேப்ப எண்ணைய் கலந்து ஆணி எடுத்த இடத்தில் வைத்துவிடுகிறோம். இதனால், ஆணி பதிந்த இடம் விரைவில் சரியாகிவிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மண்புழு மன்னாரு : மரம் வளர்ப்புக் கலையும் 10 நாள் மழைப் பொழிவும்!

பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வர்களை ஒன்றிணைத்து இப்பணியினை மேற்கொண்டிருக்கிறோம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அமைப்பினர், அவர்களின் பகுதிகளில் உள்ள மரங்களில் ஆணிகளைப் பிடுங்க இருக்கிறார்கள். விரைவில் மாவட்டம் முழுவதும் மரங்களில் விளம்பரங்களே இல்லாத நிலையினை உருவாக்குவோம்.

ஆணிகள் பிடுங்கப்பட்ட மரம்
ஆணிகள் பிடுங்கப்பட்ட மரம்

அதுவே எங்கள் இலக்கு. முன்னதாக, பனைநடவு 2019 என்ற இயக்கத்தின் மூலமாக மாவட்டம் முழுவதும் 18 நீர்நிலைகளில் 40 ஆயிரம் பனை விதைகளை நட்டோம். தற்போது ஆணி பிடுங்கும் திருவிழா. அடுத்ததாக, நீர் நிலை ஒன்றிற்கு ’ஒரு அத்தி, ஒரு அரசு’ என்ற விகிதத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் அத்தி மரமும், அரச மரமும் நட இருக்கிறோம். அமைப்புகள் பாரபட்சம் பார்க்காமல், அனைவரும் ஒன்றிணைந்து களப்பணியாற்றுவதாலே அனைத்தும் சாத்தியமாகிறது” என்றார்.

தேனியில் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து தொடங்கிய `ஆணி பிடுங்கும் திருவிழா!’ | #Theni #TreeADs #Awareness http://bit.ly/2XloQ0B

Posted by Vikatan EMagazine on Saturday, November 16, 2019
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு