Published:Updated:

`20,000 விதைப் பந்துகள்; ஆட்டோவில் 600 கி.மீ!' - ராமநாதபுரம் இளைஞரின் விழிப்புணர்வுப் பயணம்

விழிப்புணர்வு பயணம் தொடங்கிய ஆட்டோ ஓட்டுநர்.
News
விழிப்புணர்வு பயணம் தொடங்கிய ஆட்டோ ஓட்டுநர். ( உ.பாண்டி )

அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக ஏற்படும் பாதிப்புகளை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விளக்கும் வகையில் ராமேஸ்வரத்திலிருந்து சென்னை வரை ஆட்டோ பிரசாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

மரங்களின் அழிவினால் மாசடைந்து வரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரம் வளர்ப்பதின் அவசியத்தை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டும் இளைஞர் ஒருவர் ராமேஸ்வரம்-சென்னை இடையே விழிப்புணர்வு பிரசாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். இப்பயணத்தின் போது வழியெங்கிலும் உள்ள பள்ளிகள் மற்றும் பொதுமக்களிடம் 20,000 விதைப் பந்துகளையும் வழங்கத் திட்டமிட்டுள்ளார்.

விழிப்புணர்வுப் பயணம் தொடங்கிய  ஆட்டோ ஓட்டுநர்.
விழிப்புணர்வுப் பயணம் தொடங்கிய ஆட்டோ ஓட்டுநர்.

ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாகுல்ஹமீது. எம்.பி.ஏ பட்டதாரியான இவர் கடந்த 4 ஆண்டுகளாக ராமநாதபுரம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டே சமூகப் பணிகளில் ஈடுபடுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் தனது நண்பர்கள் மற்றும் தனது ஆட்டோவில் வழக்கமாகப் பயணிக்கும் பயணிகளின் பிறந்த நாள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளின் போது மரக் கன்றுகளைப் பரிசாக வழங்கி மரம் வளர்த்தலை ஊக்குவித்து வருகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்நிலையில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக ஏற்படும் பாதிப்புகளை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விளக்கும் வகையில் ராமேஸ்வரத்திலிருந்து சென்னை வரை ஆட்டோவில் விழிப்புணர்வு பிரசாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். ராமேஸ்வரம் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்தின் முன்பிருந்து இந்த விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கியது. கலாமின் பேரன் சேக் சலீம் இந்தப் பிரசாரப் பயணத்தைத் தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து அப்துல்கலாம் பயின்ற துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்ட சாகுல்ஹமீது பள்ளி மாணவர்களுக்கு தான் தயாரித்த விதைப்பந்துகளையும் வழங்கினார்.

விழிப்புணர்வு பயணம் தொடங்கிய  ஆட்டோ ஓட்டுநர்.
விழிப்புணர்வு பயணம் தொடங்கிய ஆட்டோ ஓட்டுநர்.
உ.பாண்டி

இந்த விழிப்புணர்வு பிரசாரம் குறித்து சாகுல்ஹமீது கூறுகையில், ``எம்.பி.ஏ படித்து விட்டு வெளிநாட்டு வேலை பார்த்து வந்தேன். சிறு வயது முதலே சமூகப் பணிகளில் ஆர்வமாக ஈடுபட்டு வந்துள்ளேன். இதனால் 4 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு சொந்த ஊர் திரும்பினேன். படிப்பிற்கு ஏற்ற வேலையினைத் தேடிக்கொண்டே பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டி வந்தேன். ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஈடுபாடு ஏற்பட்டதால் அதயே முழு நேரத் தொழிலாகச் செய்து வருகிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆட்டோவில் சராசரியாக தினம் 800 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். இதில் ஒரு பகுதியைச் சமூகப் பணிகளுக்காக ஒதுக்கி வைத்துவிடுவேன். இதன் மூலம் சேரும் தொகையைக் கொண்டு மரம் வளர்த்தலின் அவசியம் குறித்து பள்ளிகளுக்குச் சென்று துண்டுப் பிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அப்பள்ளிகளுக்கு மரக் கன்றுகளையும் வழங்கி வருவேன். இது தவிர எனது நண்பர்கள், எனது ஆட்டோவில் பயணிக்கும் வாடிக்கையாளர்கள் பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட நாகளில் மரக் கன்றுகளைப் பரிசளித்து வருகிறேன்.

மாணவர்களிடையே துண்டுப் பிரசுரம் வழங்குதல்.
மாணவர்களிடையே துண்டுப் பிரசுரம் வழங்குதல்.
உ.பாண்டி

இதன் ஒரு பகுதியாக ராமேஸ்வரம் முதல் சென்னை வரை எனது ஆட்டோவில் பயணித்து மரம் வளர்த்தலின் தேவை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன். இதன் படி மரம் வளர்த்தலின் அவசியம் குறித்து வலியுறுத்திய டாக்டர் அப்துல்கலாமின் நினைவிடம் தொடங்கி ராமநாதபுரம், பரமக்குடி, சிவகங்கை, திருச்சி வழியாக வரும் 12-ம் தேதி சென்னைக்குச் செல்கிறேன். செல்லும் வழியில் உள்ள பள்ளிகளிலும் பொதுமக்களிடமும் மரம் வளர்த்தலை ஊக்குவிக்கும் வகையில் 20 ஆயிரம் விதைப் பந்துகளை வழங்க உள்ளேன். இதற்கென வேம்பு, புங்கை, வாவரசி, சொர்க்கம் ஆகிய மரங்களின் விதைகள் கொண்ட பந்துகளை எனது நண்பர்கள் உதவியுடன் உருவாக்கியுள்ளேன். பிரசாரத்தின் இறுதி நாளில், மாநிலம் முழுவதும் குறுங்காடுகள் அமைக்க உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரைச் சந்தித்து நன்றி தெரிவிக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன்'' என்றார்.