Published:Updated:

சூழல்:பிறந்த நாள் பரிசாக மரக்கன்றுகள்...

 பசுமை பணியில்...
பிரீமியம் ஸ்டோரி
பசுமை பணியில்...

அசத்தும் அரசுப் பள்ளி!

சூழல்:பிறந்த நாள் பரிசாக மரக்கன்றுகள்...

அசத்தும் அரசுப் பள்ளி!

Published:Updated:
 பசுமை பணியில்...
பிரீமியம் ஸ்டோரி
பசுமை பணியில்...

ல இடங்களில் மழைநீர்ச் சேகரிப்பு... மரக்கன்றுகள் பரிசளிப்பு உள்ளிட்ட இயற்கைச் சார்ந்த சமூகப் பணிகளைச் சத்தமில்லாமல் செய்துவருகிறது மதுரை ஆனையூர் அரசு உயர்நிலைப் பள்ளி. அப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ஹரிபாபு மற்றும் தலைமை ஆசிரியர் செந்தில்குமார் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்களின் உதவியோடு மாணவர்கள் பசுமைப் பணிகளைச் செய்துவருகின்றனர். ஆனையூர் உயர்நிலைப் பள்ளிக்குள் வலம் வந்தோம்.

பசுமை வணக்கத்துடன் நம்மிடம் பேசிய ஹரிபாபு, “ஆனையூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரும் பசுமை விரும்பிகள். மரக்கன்றுகள் நடுவது, நெகிழிகளை அகற்றுவது, கண்மாய்களைத் தூர்வாருவது எனப் பல செயல்பாடுகளைச் செய்துவருகின்றனர்.

செந்தில்குமார், ஹரிபாபு
செந்தில்குமார், ஹரிபாபு

மரங்களே இல்லாமலிருந்த எங்கள் பள்ளியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்துள்ளோம். ஆனையூர் பகுதியில் பல்வேறு மழை தரும் மரங்களை வளர்த்தெடுத்துள்ளோம். ஒவ்வொரு மாணவரின் வீட்டிலும் மரம் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டுகிறோம். நான் அறிவியல் ஆசிரியர் என்பதால் எனக்கு இயற்கைமீது அதிக ஆர்வம் உண்டு. அதனால், எங்கள் பள்ளியின் தேசியப் பசுமைப் படை ஒருங்கிணைப்பாளராக இருந்து, மாணவர்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறேன். ராகத்தோடு பசுமைப் பாடல்களை மாணவர்கள் மத்தியில் பாடுவதால் மாணவர்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். அதேசமயம் எப்போது சட்டை அணிந்தாலும் பசுமைப் படை பேட்ஜை அணிவேன். அதுதான் எனக்கும் என் பள்ளிக்கும் உள்ள அடையாளமாக நினைக்கிறேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விடுமுறை நாள்களில் கடைக்குச் சென்றாலும் பொதுமக்கள் ‘என்ன இந்த பேட்ஜ்’ என்று என்னிடம் கேட்பார்கள். உடனே கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் இயற்கை சார்ந்த விழிப்புணர்வை அவர்களிடம் புகுத்திவிடுவேன். பள்ளியில் புதன்கிழமையன்று பசுமைப் படை கூட்டம் நடைபெறும்போது நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பசுமைப் படை சீருடை அணிந்து கலந்துகொள்வார்கள்.

அப்போது செயல்முறை விளக்கங்கள் நடத்துவேன். ஆண்டுக்கு 12 முறை ஆனையூர்ப் பகுதியில் பசுமைப் படை கூட்டங்களைக் கண்டிப்பாக நடத்திவிடுவோம். மாணவர்களுக்குச் சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு புத்தகங்களிலிருந்து பாடங்கள் நடத்தியுள்ளேன். இதனால், எங்கள் மாணவர்கள் சுற்றுச்சூழல் தொடர்பான கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, விநாடி வினா என்று எல்லாப் போட்டிகளிலும் வெற்றிகளைக் குவித்துவருகின்றனர்.

ஆண்டுதோறும் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினத்தன்று மாணவர்களுக்குப் பழமரக்கன்றுகள் வழங்குகிறேன். இதைத் தங்களது வீட்டில் வளர்த்து மாணவர்கள் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மகிழ்கின்றனர்.

இயற்கையைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் உலக சுற்றுச்சூழல் தினம், ஓசோன் தினம், உலக ஈரநில தினம், சிட்டுக்குருவி தினம், காடு தினம், தண்ணீர் தினம் என்று எல்லாத் தினங்களையும் கொண்டாடுகிறோம்.

அதுதொடர்பான விஷயங்களை விவாதிப்பது, பிரச்னைகளை எவ்வாறு சரி செய்வது எனச் செயல்முறை விளக்கங்கள் கொடுப்பேன். இதன் விளைவால் கடந்த 2 வருடங்களில் மட்டும் 1,200 மரக்கன்றுகளை மதுரை முழுதும் நட்டு வளர்த்துள்ளோம்.

இவ்வாறான செயல்பாட்டிற்கு எங்கள் பள்ளி 2016-ல் சிறந்த பசுமைப் படை பள்ளி என்ற சுற்றுச்சூழல் விருதையும், 20 ஆயிரம் ரொக்கப் பரிசையும் பெற்றது. இதேபோல் தனியார் நிறுவனங்களிடமும், தொண்டு நிறுவனங்களிடமும் பல்வேறு சுற்றுச்சூழல் விருதுகளை எங்கள் பள்ளி பெற்றுவருகிறது. இந்த விருதுகளை என்னுடைய மாணவர்களுக்கும், எங்கள் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் கிடைத்த வெற்றியாகத்தான் எண்ணுகிறேன்” என்றார் உற்சாகத்துடன்.

தலைமை ஆசிரியர் செந்தில்குமார், “எங்கள் பள்ளி மாணவர்களிடம் மரங்களை வளர்க்க வேண்டும் எனத் தொடர்ந்து விழிப்புணர்வு செய்கிறோம். மழைநீர்ச் சேகரிப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பது பற்றி எங்கள் மாணவர்கள் பெற்றோர்களிடம் கொண்டு செல்கின்றனர்.

எங்கள் பள்ளி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கண்மாய்க் கரைகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பனை விதைகளை விதைத்துள்ளோம். மேலும் விதைப் பந்துகளை நாங்களே தயார் செய்து பல்வேறு இடங்களிலும் விதைக்கிறோம். இதனால், எங்கள் சிறந்த பசுமைப்பள்ளியாக பாராட்டப்படுகிறது” என்றார் பெருமையுடன்.