Election bannerElection banner
Published:Updated:

ஆண்கள் கோலோச்சும் அரசியல்... பெண்களுக்கான இடம் என்னாச்சு? - பேசலாம் வாருங்கள் பெண்களே!

பெண் தலைவர்கள்
பெண் தலைவர்கள்

அரசியல் பற்றிய விழிப்புணர்வு பெண்கள் மத்தியில் அதிகரித்துவரும் இந்தக் காலகட்டத்தில், அரசியலுக்குப் பெண்கள் வருவதில் இருக்கக்கூடிய தடைகள், சவால்கள் குறித்து அவள் விகடன் மற்றும் ஜூனியர் விகடன் வழங்கும் நிகழ்ச்சியில் பெண் ஆளுமைகள் விவாதிக்கவிருக்கிறார்கள்.

ஆண்களின் ஆதிக்கம் அதிகமிருக்கும் அரசியலில் ஏராளமான சாதனைகளைச் செய்திருக்கும் பெண் ஆளுமைகள் பலர் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்கள், இன்றும் இருக்கிறார்கள். நான்கு முறை தமிழகத்தின் முதல்வராக இருந்திருக்கிறார் ஜெயலலிதா.

விஜயதரணி
விஜயதரணி

பா.ஜ.க-வின் மாநிலத் தலைவராக இருந்திருக்கிறார் தமிழிசை சௌந்தரராஜன். அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்ட் என எல்லாக் கட்சிகளிலும் பெண் ஆளுமைகள் பலர் இருக்கிறார்கள். https://bit.ly/3kqNDfe

ஆனாலும், அரசியல் கட்சிகளில் பெண்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன... பெண்களுக்கு அரசியலில் வழங்கப்பட்டிருக்கும் பிரதிநிதித்துவம் எவ்வளவு போன்ற கேள்விகளுக்கு பதில் தேடும் நிலைதான் இன்றைக்கு இருக்கிறது.

சுப்புலட்சுமி ஜெகதீசன்
சுப்புலட்சுமி ஜெகதீசன்

பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு குறித்துப் பலகாலமாகப் பேசப்பட்டுவருகிறது. இன்னும் அது கானல்நீராகவே இருக்கிறது. https://bit.ly/3kqNDfe

பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா அறிமுகப்படுத்தப்படும் நிலையிலேயே அதைப் பறித்துக் கிழித்தெரியும் ஆண் தலைவர்களின் அட்டகாசங்களை இந்திய நாடாளுமன்றம் பலமுறை பார்த்திருக்கிறது. இன்றைக்கு அந்த மசோதா நிறைவேற்றப்படாமல் நாடாளுமன்றத்தில் கிடப்பில் இருக்கிறது.

பாலபாரதி
பாலபாரதி

அரசியலுக்குள் நுழைந்து, பல சவால்களை எதிர்கொண்டு, கட்சிகளின் முக்கியப் பொறுப்புகளுக்கு ஓரிரு பெண்கள் வருகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் பெண்கள் சிலர் வருகிறார்கள். அத்தகைய உயரங்களை அடைந்த பெண்களாலும் ஓரளவுக்கு மேல் செயல்பட முடியவில்லை. அவர்களுக்குப் பல தடைகள் இருக்கின்றன. https://bit.ly/3kqNDfe

இந்தநிலை குறித்து பேசுவதற்காக அரசியல் கட்சிகளில் நீண்ட அனுபவம் பெற்ற பெண் ஆளுமைகளை அழைத்திருக்கிறோம். இந்த நிகழ்ச்சியை, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அவள் விகடன் மற்றும் ஜூனியர் விகடன் நடத்துகின்றன.

மகேஸ்வரி
மகேஸ்வரி

தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ மகேஸ்வரி, பா.ஜ.க-வின் தேசிய மகளிரணிச் செயலாளர் வானதி சீனிவாசன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசவிருக்கிறார்கள். https://bit.ly/3kqNDfe

இந்த ஆன்லைன் (ZOOM) நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்கலாம்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

‘பெண்கள் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? - அரசியல் அலசல்’ என்ற தலைப்பிலான இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அரசியல் தலைவர்களிடம், பார்வையாளர்களாகப் பங்கேற்பவர்கள் தங்கள் கேள்விகளையும் கருத்துகளையும் முன்வைக்கலாம். மார்ச் 6-ம் தேதி மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

முன்பதிவு செய்து அனைவரும் பங்கேற்கலாம். நிகழ்வில் பங்கேற்க https://bit.ly/3kqNDfe இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு