Published:Updated:

செந்தில் கணேஷ், ராஜலக்ஷ்மி பாடலில் அதிர்ந்த சிகாகோ! - நிறைவுற்ற முப்பெரும் விழா #MyVikatan

கலை நிகழ்ச்சிகளுக்கு சளைக்காமல், தமிழ் கூறாய்வு நிகழ்ச்சி அரங்கங்களும் தமிழ் அன்பர்களால் நிறைந்திருந்தன.

10ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
10ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ( சிகாகோ )

10-ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழா மற்றும் வட அமெரிக்கப் பேரவையின் 32 -ம் ஆண்டு விழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள், ஜூலை 7-ம் தேதி இணை அமர்வுகளாக நடைபெற்றன. உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் முதன்மை குறிக்கோளாகிய தமிழியல் ஆய்வுகள் முழு நாள் நிகழ்ச்சியாக காலை முதல் மாலை வரை நடைபெற்றது.

10ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
10ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த தமிழ் அறிஞர் பெருமக்கள், தங்களது சிறப்பான ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். கலைநிகழ்ச்சிகளுக்கு சளைக்காமல் தமிழ் கூறாய்வு நிகழ்ச்சி அரங்கங்களும் தமிழ் அன்பர்களால் நிறைந்திருந்தன. பண்டைய தமிழ் நாகரிகம், தொல்லியல் கண்டுபிடிப்புகள், செம்மையான தமிழ் இலக்கியங்கள், தொல்காப்பியம், திருக்குறள் ஆகிய தலைப்புகளின் கீழ் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அனைத்துக் கட்டுரைகளும் சிறந்த முறையில் அறிஞர் பெருமக்களால் விளக்கப்பட்டன.

சமீப காலத்தில், தமிழ் நாகரிக அகழ்வாய்வின் தேவையும் முக்கியத்துவமும் மக்கள் கருத்தைக் கவர்ந்ததுபோலவே தொல்லியல்துறை சார்ந்த கட்டுரைகளும் பார்வையாளர்களின் கவனத்தைக் கூடுதலாக ஈர்த்தன. முழு நாள் இணை அமர்வாக உலகத் தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நடந்தது. பன்னாட்டு தமிழ்த் தொழிலதிபர்கள், தங்கள் அனுபவங்களை ரசிக்கும் விதமாக எடுத்துரைத்தனர். வளர்ந்து வரும் தொழிலதிபர்களும் தொழில் முனைவோர்களும் உற்சாகத்தோடு தங்கள் கேள்விகளைக் கேட்டு பதில் பெற்றும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டும் பயன் அடைந்தனர். கூடுதல் இணை அமர்வு நிகழ்ச்சிகளாக கான்சாசு நகர தமிழ் சங்கம் நடத்திய சிலம்பம் மற்றும் நாட்டிய நடனம், வாஷிங்டன் DC தமிழ் சங்கத்தினரின் நடனம் மற்றும் கிளீவ்லண்ட், ஓஹியோ தமிழ் சங்கத்தினரின் நாடகமும் அரங்கேறின.

10ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
10ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

வளர்ந்துவரும் தொழிலதிபர்களும் தொழில் முனைவோர்களும் உற்சாகத்தோடு கேள்விகள் கேட்டு பதில் பெற்றும், கருத்துக்களை பரிமாறிக்கொண்டும் பயன் அடைந்தனர். கூடுதல் இணை அமர்வு நிகழ்ச்சிகளாக, கான்சாசு நகர தமிழ்ச் சங்கம் நடத்திய சிலம்பம் மற்றும் நாட்டிய நடனம், வாஷிங்டன் DC தமிழ் சங்கத்தினரின் நடனம் மற்றும் கிளீவ்லண்ட், ஓஹியோ தமிழ் சங்கத்தினரின் நாடகமும் அரங்கேறின.

பாரதி பாஸ்கர், 'இளைஞர்களுக்கு பாரதி' என்ற தலைப்பில் மகாகவி பாரதியாரின் ஊக்கமூட்டும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். சாலமன் பாப்பையா அவர்கள், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற தலைப்பில் புறநானூற்று சிறப்புரை ஆற்றி விழாவுக்கு மெருகூட்டினார். தமிழ்த் தேனீ இறுதிச்சுற்று நடைபெற்றது.

செந்தில் கணேஷ், ராஜலக்ஷ்மி பாடலில் அதிர்ந்த சிகாகோ! - நிறைவுற்ற முப்பெரும் விழா   #MyVikatan

ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா, நார்வே, இலங்கை, UK நாடுகளின் தமிழ்ச் சங்கத்தினரும், தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த சிறப்பு விருந்தினர்களும், வட அமெரிக்காவின் அனைத்து மாநில தமிழ்ச் சங்கத்தினரும் கலந்துகொண்டு, மரபு கலை நிகழ்ச்சிகளுடன் இணைத்து நடத்திய சிறப்பு அணிவகுப்பு விமரிசையாக நடைபெற்றது. கதர் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ந்தது. செந்தில் கணேஷ், ராஜலக்ஷ்மி இணையர்களின் கிராமிய இசை மற்றும் நட்சத்திர இரவு நிகழ்ச்சியோடு இந்த மாபெரும் முப்பெரும் விழா இனிதே நிறைவுற்றது.

- அகிலா செல்வராஜ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

செந்தில் கணேஷ், ராஜலக்ஷ்மி பாடலில் அதிர்ந்த சிகாகோ! - நிறைவுற்ற முப்பெரும் விழா   #MyVikatan

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/