Published:Updated:

மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!

மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!

ஹாய் வாசகிகளே!

போட்டி என்று வந்துவிட்டாலே... லெட்டர், மெயில் என்று எங்களை எப்போதும் திக்குமுக்காட வைப்பீர்கள். அந்த வரிசையில், அவள் விகடன் 18-ம் வருட கொண்டாட்டத்தையொட்டி அறிவிக்கப்பட்ட போட்டிகளுக்காக‌ வந்து குவியும் மெயில், லெட்டர்களைக் கணக்கெடுக்கவே திணறித்தான் வருகிறோம்.

மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முதல் மூன்று போட்டிகளுக்கான (1. ரங்கோலி போட்டி, 2. பாட்டுப் போட்டி, 3. புடவை கட்டும் போட்டி) ரிசல்ட், இந்த இதழில் இடம்பிடிக்கிறது!

கண்களைக் கவர்ந்து நகரவிடாமல் செய்துவிட்டன ரங்கோலிகள்.

பாட்டுப் போட்டிக்கு வந்திருந்த பாடல்களில் பெரும்பாலானவை, `கேட்டுக்கொண்டே இருக்கலாம்' என்கிற சுகானுபவத்தைத் தருகின்றன.

புடவை கட்டும் போட்டியில், புதுமைகளைப் படைத்து அசத்திவிட்டீர்கள்.

மூன்று போட்டிகளின் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்த ஜட்ஜ்கள், இங்கே தங்கள் கருத்துக்களைப் பகிர்கிறார்கள். வாழ்த்துக்கள் வெற்றியாளர்களே! உங்களுக்கான பரிசு, விரைவில் உங்களிடம் சேர்ப்பிக்கப்படும்.

புடவை கட்டும் போட்டி (போட்டி எண்-3)

ஜட்ஜ்: சரண்யா பொன்வண்ணன், டிசைனர், நடிகை.

மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!

சரண்யா அணிந்து வரும் காஸ்ட்யூம்களே அவருக்கு பல பாராட்டுகளைப் பெற்றுத் தந்திருக்கின்றன. இவர் டிசைனரும்கூட.

இனி, இவரது கமென்ட்...

மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!

‘`இந்தப் போட்டிக்கான பரிசை பெங்களூரைச் சேர்ந்த அனிதா கிருஷ்ணன் தட்டிட்டு போறாங்க. நீட்டா கட்டியிருக்காங்க” என்றார், அவருக்கே உரிய புன்னகையோடு.

பாட்டுப் போட்டி(போட்டி எண்-2)

ஜட்ஜ்: `லஷ்மன் ஸ்ருதி' லஷ்மன், மாலதி.

மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!

மாலதி, பிரபல பின்னணி இசைப்பாடகி. லஷ்மன், பிரபல பாடகர்களை வைத்து இசை நிகழ்ச்சி நடத்தி்வருபவர்.

மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!

‘`ரஜினியின் `வள்ளி' படத்தில் வரும் `என்னுள்ளே’ங்கிற பாட்டுப் பாடின நாகநந்தினிதான், எங்க செலக்‌ஷன் லிஸ்ட்ல பத்துக்கு 8 மார்க் வாங்கி பர்ஸ்ட் இடத்துல நிக்கிறாங்க. இந்த பாட்டுப் பாடுறது கஷ்டம். ஆனா, அதை நல்லா பாடியிருக்காங்க. அவங்க வாய்ஸ் நல்லா இருக்கு'' என்று பாராட்டுகிறார்கள், உற்சாகமான குரலில்.

ரங்கோலி போட்டி(போட்டி எண்-1)

ஜட்ஜ்: மாலதி, புதுச்சேரி.

மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!

ஓவியம், கிராஃப்ட், கோலம் என்று கலக்குபவர். தமிழக அரசின் கலைமாமணி விருது வாங்கியவர். மணமக்களின் முகங்களை கோலத்தில் அப்படியே அச்சு அசலாகக் கொண்டு வருவார்.

மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!
மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!

‘`தித்திக்கும் தீபாவளி என்கிற தலைப்பில் வரைந்த திருச்சியைச் சேர்ந்த சித்ராதான் என் கணிப்பில் முதல் இடத்தை தக்க வைக்கிறார். அவர் வரைஞ்ச ரங்கோலியில ஒரு பர்ஃபெக்‌ஷன்் தெரியுது. அதனால அவருக்கு இந்த பரிசு” என்கிறார் புன்முறுவலோடு.

மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!