Published:Updated:

கேபிள் கலாட்டா

கேபிள் கலாட்டா

‘‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்!’’

கேபிள் கலாட்டா

விஜய் டி.வி `கலக்கப்போவது யாரு - சீஸன் 5’ தொகுப்பாளர், ஜேக்குலின் லிடியா!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘சொந்த ஊரு ஸ்ரீபெரும்புதூர். விஸ்காம் படிச்சுட்டு இருக்கேன். வீட்டுல நானும் அம்மாவும் மட்டும்தான். ஃபுல் ஃப்ரீடம் கொடுத்து வளர்த்தாங்க. ஏர் ஹோஸ்டஸ் கோர்ஸ் படிச்சேன். அதுக்கு என் ஹெல்த் சரிப்பட்டு வரல. மீடியா பத்தியெல்லாம் எந்த ஐடியாவும் இல்லாம இருந்த என்னை ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும்தான் ‘வாயாடி... நீ `விஜே’ ஆகலாம்னு!’னு வழிகாட்டினாங்க. பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்ங்கிற மாதிரி விஜய் டி.வி வாய்ப்புக்காகவே காத்துட்டு இருந்தேன். ‘சரவணன் மீனாட்சி’யில ஒரு ரோல். அப்புறம் சின்னச் சின்ன ஷோஸ். இப்போ ‘கலக்கப்போவது யாரு’.

சாப்பாடுன்னா சொத்தையே எழுதிக் கொடுத்துடுவேன். வாழறதே நாக்குக்கும் வயித்துக்கும்தானே? எல்லாரோடவும் ஈஸியா ஃப்ரெண்ட் ஆகிடுவேன்... அது என் ப்ளஸ். யாரையும் ஈஸியா நம்பிடுவேன்... அது என் மைனஸ். சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எனக்கும் ஒரு வாய்ப்புக் கிடைச்சது. இன்னும் பண்ணணும். நீங்களும் பண்ணுங்க ப்ளீஸ்..!’’

நல்ல மனசு!

‘‘அந்த `மாஷ் அப்’ மேன் நான்தான்!”

கேபிள் கலாட்டா

சன் மியூஸிக் ஹிட் ‘மாஷ் அப்’பின் கிரியேட்டிவ் மைண்ட், கார்த்திக் சரண்!

‘‘நான் சுத்தமான சென்னைக்காரன். எஸ்.ஆர்.எம். காலேஜ்ல விஸ்காம் படிச்சுட்டு, கேமராமேன் ஆக கனவு கண்டேன். என்னோட ஷார்ட் ஃபிலிம்ஸ், டாக்குமென்டரி எல்லாம் தந்த வாய்ப்பு... என் புரொஃபைலை ‘நீயா நானா’ புரொகிராம் புரொட்யூசர் ஆக்கிச்சு. வீட்ல என்னை மீடியாவுக்கு வழியனுப்பி வைக்க பெருசா விருப்பமில்லாததால எம்.பி.ஏ படிச்சுட்டே குறும்படம், வாய்ஸ் வொர்க்னு லைஃப் போச்சு.

அடுத்தது சன் மியூஸிக் சான்ஸ். ‘மாமிஸ் டே அவுட்’ புரொகிராம் புரொட்யூசர். ஆங்கர் பிரியங்காவுக்கும், எனக்கும் புது லைஃப் கொடுத்த ஷோ அது. ஆனா, என் பேரு வெளிய வரலை. ‘யார்டா இந்த கார்த்திக்னு கேக்கணும். என்ன செய்யலாம்?’னு மண்டையை உடைச்சு யோசிச்சதுதான், `மாஷ் அப்’. முதல்ல ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பண்ணினோம். செம ஹிட். தொடர்ந்து பல மாஷ் அப் பண்ணி லைக்ஸ் குவிச்சாச்சு. பலர், ‘பாட்டை மிக்ஸ் பண்றதுதானே?’னு இதை ஈஸியா நினைக்கலாம். ஆனா, இதுவும் கிட்டத்தட்ட மியூசிக் கம்போசர் வேலை மாதிரிதான். பாட்டு உடையக் கூடாது, டியூன் மாறிடக் கூடாது, இசையமைச்சவங்க, பாடினவங்க ‘அய்யோ, என் பாட்டு!’னு நினைக்கும்படி ஆயிடக் கூடாது. இப்படி பல சவால்கள். சில இடங்களில் பாடல்களைக் கோக்கும்போது நானே பாடி, சில எஃபெக்ட்ஸ் பயன்படுத்தினு நிறைய சவால்கள். எங்க டீம் வொர்க்குக்கு செம ரீச்.

அஜித் மாஷ் அப் பண்ணினப்போ, `தல’ மாஷ் அப் கூடவே என் பேரும் சேர்ந்து ட்ரெண்ட் ஆனது... வாவ்! இப்போ எல்லோரும் விரும்பிக் கேட்கிறது, லவ் மாஷ் அப். சிலர், டிராக் வேணும்னு கேட்டு அனுப்பச் சொல்லி ரிங் டோனா வெச்சுக்கறாங்க. ஹேப்பியா இருக்கு. அடுத்து, ஒரு புது கான்செப்ட் பிடிக்கணும்!’’

குட்... கார்த்திக்!

ஹிமாச்சல் பியூட்டி!

கேபிள் கலாட்டா

‘ஃபேர் அண்ட் லவ்லி’ நிறுவனத்தின் ஆஸ்தான விளம்பர மாடல், யாமி கௌதம். கார்நெட்டோ ஐஸ்க்ரீம், சாம்சங் கேலக்ஸி, இமாமி, ஷெவர்லே என இன்னும் பல விளம்பரங்களிலும் நமக்குப் பரிச்சயமானவர். இந்தியின் முன்னணி நடிகை. ‘கௌரவம்’, ‘தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ என இரண்டு தமிழ்ப்படங்களிலும் நடித்துள்ளார்.

`ஊரு ஹிமாச்சல்பிரதேஷ்ல இருக்கிற பிலாஸ்பூர். எங்கப்பா பஞ்சாப்பைச் சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குநர் முகேஷ் கௌதம். எனக்கு வயசு 27. மீடியாவில், 20 வயசுலேயே முகம் காட்டிட்டேன். ‘சந்த் கே பார் சலோ’ தொலைக்காட்சி நிகழ்ச்சிதான் முதல் வாய்ப்பு. இப்போ இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம்னு பல மொழிகளிலும் நடிச்சிட்டு இருக்கேன். ஆனா, இதுவரை கிசுகிசுக்களில் சிக்கவே இல்லை... நோட் இட்!’ எனும் யாமி, ஜெய்க்கு ஜோடியாக நடித்திருக்கும் ‘தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ படம் ரிலீஸுக்கு ரெடி. மேடம் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம்... 1 - 2 கோடி!

வெல்கம் மேடம்!

பிரே ஃபார் சென்னை!

கேபிள் கலாட்டா

இசையருவி, கலைஞர் டி.வி நிகழ்ச்சித் தொகுப்பாளர் தணிகைக்கு, ஜிம்தான் முழு நேர பொழுதுபோக்கு!

‘‘எம்.பி.ஏ படிச்ச ஈரோட்டுப் பையன் நான். வீட்ல எல்லோரும் டீச்சிங் புரொஃபஷன்ல இருக்காங்க. ஆனா சின்னப்புள்ளையில் இருந்தே எனக்கு மீடியாதான் கனவு. கொஞ்சம் ஜாஸ்தி பேசுற குவாலிஃபிகேஷனால `விஜே’ ஆகிட்டேன். சினிமா சான்ஸுக்காக வெயிட்டிங்... வொர்க்கிங்! அதனாலதான் ஜிம்மே கதினு கிடக்கேன். ஃபிட்னஸ் ஃப்ரீக். சிக்ஸ் பேக் பைத்தியம். டான்ஸ், ஃபைட்டுனு எல்லாமே கத்துக்கிட்டேன். எப்பவுமே ஜாலியா இருக்கிறதுதான் எனக்குப் பிடிக்கும். ஆனா, சமீபத்தில் சென்னையை சின்னாபின்னமாக்கிய வெள்ளம், மனசை ரொம்ப கனமாக்கிருச்சு. வாட்ஸ்அப், ஃபேஸ்புக்னு மட்டும் ஃபீல் பண்ணாம, நான், ரோபோ ஷங்கர் எல்லோரும் களத்தில் இறங்கி முடிஞ்ச உதவிகளை செஞ்சோம். அந்த நேரடிக் காட்சிகள், மனசை இன்னும் ரணமாக்கிருச்சு. சீக்கிரம் அந்த மக்கள் எல்லாம் ரெக்கவர் ஆகணும். பிரே ஃபார் சென்னை!’’

நன்று!

ரிமோட் ரீட்டா

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:ரூ.150

விறுவிறு நிகழ்ச்சி!

``விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் `ஒரு வார்த்தை ஒரு லட்சம்’ படுவேகமான, மூளைக்கு விறுவிறுப்பு ஏற்படுத்தும் நிகழ்ச்சி என்றால் மிகையாகாது. தற்போது அரசு நடுநிலைப்பள்ளி சிறுவர்கள் கலந்துகொண்டு ஜெட் வேகத்தில் விடையளிப்பது நம்மை ஆச்சர்யத்தில்  ஆழ்த்துகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகளின் மூலம் அவர்களது பள்ளிக்கு புகழ் சேர்க்கிறது. பள்ளி ஆசிரியர்களையும், மாணவர்களையும் பாராட்டியே ஆக வேண்டும்’’ என்று மெய்சிலிர்க் கிறார் ஸ்ரீரங்கத்தில் இருந்து எஸ்.மீனா.

பண்பாட்டுடன் பேசவும்!

``விஜய் டி.வி-யில் காம்பியரிங் செய்யும் ஜெகன், நிகழ்ச்சி ஒன்றில் `10 மணி வரை கடை இருக்கும். பொறுமையா போகலாம்’ என்று டாஸ்மாக்கை குறிப்பிட்டு பேசியது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. மது அருந்தாதவர்கள் பலர் இருக்கும் சூழலில் பொது நிகழ்ச்சியில் அவர் இப்படி பேசக்கூடாது. பண்பாட்டுடன்பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று கண்டனம் தெரிவிக்கிறார் சென்னை, போரூரில் இருந்து கே.தமிழரசி.