தன்னம்பிக்கை
Published:Updated:

மதுரையை கலக்கிய மலர்களின் திருவிழா!

மதுரையை கலக்கிய   மலர்களின் திருவிழா!
பிரீமியம் ஸ்டோரி
News
மதுரையை கலக்கிய மலர்களின் திருவிழா!

வாசகிகள் கொண்டாட்டம்

மதுரையை கலக்கிய   மலர்களின் திருவிழா!

பிரபல நடிகர்களின் படங்களுக்கு முதல் நாள், முதல் காட்சிக்கு களைகட்டும் கொண்டாட்டக் குதூகலத்தை எல்லாம் தூக்கிச்சாப்பிட்டுவிட்டது, மதுரையில் நடந்த `அவள் விகடன் 20 - 20' நிகழ்ச்சி! மே 29-ம் தேதி, லட்சுமி சுந்தரம் ஹாலில் அவள் விகடன் சத்யா ஏஜென்சீஸ் உடன் ஜிஆர்டி தங்கமாளிகை மற்றும் சிஎஸ்பி கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய பெண்களுக்கான இந்த ‘ஒன் டே ஃபன் டே’ திருவிழாவில், இளம் பெண்களில் இருந்து 81 வயது பாட்டி வரை பாடி, ஆடி, விளையாடி, குதூகலித்து மகிழ்ந்தது... கண்கொள்ளா காட்சி!  

மதுரையை கலக்கிய   மலர்களின் திருவிழா!

மதுரையின் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி தீப்தி அறிவுநிதி மற்றும் மதுரை அப்போலோ மருத்துவமனையின் மகப்பேறு சிறப்பு மருத்துவர் ஹேமலதா சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ள, இ.எம்.ஜி யாதவா கல்லூரியின் முதல்வர் டாக்டர் பூவழகி, லேடி டோக் கல்லூரியின் இணை பேராசிரியர் டாக்டர் சுகந்தா ராமமூர்த்தி மற்றும் ‘பலகரங்கள்’ தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் அலிமா பானு சிக்கந்தர் ஆகியோர், வாசகிகளுக்கு நாம் நடத்திய ‘டேலன்ட் ஹன்ட்’ போட்டிகளுக்கு நடுவர்களாகப் பொறுப்பேற்றனர். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய சின்னத்திரை நட்சத்திரங்கள் அரவிந்த் மற்றும் ஐஸ்வர்யா, அந்நாளின் குதூகலத்தை உச்சத்துக்கு கொண்டுசென்றனர்.

‘டேலன்ட் ஹன்ட்’ போட்டிகளுக்கான முன்பதிவுகளை தொலைபேசி வாயிலாக நாம் முன்கூட்டியே முடித்திருக்க, மேடையேறிய போட்டியாளர்கள்... பாடல், நடனம், பரதம், கரகம், நாடகம், நடிப்பு, மிமிக்ரி, ஸ்டாண்ட் அப் காமெடி என் மேடையில் அசத்தினர். 

இடையிடையே பலூனை ஊதி உடைப்பது, தலையில் ஸ்ட்ரா செருகிக்கொள்வது போன்ற ஆன் த ஸ்பாட் போட்டிகளும், ‘ஐஸ் பிரேக்கர்’களாக ஒலிபரப்பப்பட்ட குத்துப் பாடல்களுக்கு நம் பெண்கள் மேடையிலும், கீழும் போட்ட ஆட்டமும்... தெறி தெறி தெறி!

மதுரையை கலக்கிய   மலர்களின் திருவிழா!

நம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே வேலூரில் இருந்து தன் கணவருடன் வந்திருந்து, ‘சின்னஞ் சிறு பெண்போலே’ பாடலைப் பாடி அரங்கத்தைச் சிலிர்க்கவைத்த 81 வயது ஜானகி பாட்டி, தன் குறுநாடகத்தில் சென்னை தமிழில் பேசி ரவுண்டு கட்டிய முத்துலட்சுமி, மேடையில் இயல்பாக கண்ணீர் சிந்த... இல்லை, கண்ணீர் கொட்ட நடித்த பானுமதி என... போட்டியாளர்கள் அனைவரும் நிகழ்வின் தரத்தையும், உற்சாகத்தையும் உயர எடுத்துச்சென்றனர். ரங்கோலி மற்றும் கைவினைப் பொருட்களுக்கான ‘ஆஃப் ஸ்டேஜ்’ போட்டிகளிலும் அசத்திவிட்டனர் பெண்கள்.

நிகழ்ச்சியில் இடையிடையே பாடல்கள் ஒலிபரப்பப்பட்டபோது பெண்கள் அனைவரும் குதூகலத்துடன் ஆட,  ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை ஆடி அசத்தினார்,    திருநெல்வேலியில் இருந்து வந்திருந்த பானுமதி. ‘‘செம ஆட்டம் போட்டுட்டேன்ல? பின்னே, அதுக்குத்தானே நாங்க கிளம்பி வர்றதே? என் கணவரும், ‘அவள் விகடன் நிகழ்ச்சியா... அப்போ என்ஜாய்!’னு சொல்லி அனுப்பிடுவார்’’ என்றபோது, அவர் குரலிலும் கிலோக்கணக்கில் குதூகலம்.

இளம் பெண் அபர்ணா.... ‘‘இப்போதான் பன்னிரண்டாம் வகுப்பு முடிச்சிருக்கேன். இதுவரை ஃப்ரெண்ட்ஸோட அவ்வளவா வெளிய போனதே இல்ல. அப்படியே போனாலும், ரொம்ப கவனத்தோடயும், கன்ட்ரோலோடயும்தான் இருக்கணும். ஆனா, இங்க வந்து பார்த்தா... இந்த நிகழ்ச்சியும், அரங்கமும், போட்டிகளும், குதூகலங்களும் பெண்களுக்கே பெண்களுக்கானது! அப்போ கொண்டாட என்ன தயக்கம்?! பாட்டு, டான்ஸ், விசில்னு இவ்வளவு சுதந்திரமா, உற்சாகமா நான் இதுக்கு முன்னாடி இருந்ததேயில்லை. என்னை விடுங்க... எங்க அம்மா, சித்தியெல்லாம் இவ்வளவு நல்லா டான்ஸ் ஆடுவாங்கனு நானே இப்போதான் தெரிஞ்சுக்கிட்டேன்’’ என்றார், கண்களில் ததும்பிய பரவசத்துடன்.

மதுரையை கலக்கிய   மலர்களின் திருவிழா!

நிகழ்ச்சியை முன்னிட்டு, மதுரை மேலமாசி வீதியில் உள்ள சத்யா வீட்டு உபயோகப் பொருட்கள் ஷோரூமில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற பெண்களுக்கும், மேடையில் நடத்தப்பட்ட போட்டியில் வென்ற பெண்களுக்கும் கைகொள்ளாமல் பரிசுகளை அடுக்க, பெற்றுக்கொண்ட வாசகிகளுக்கு சந்தோஷமோ சந்தோஷம்!

சாந்தினி அருணகிரியின் ‘மதுரை நாட்டியக் கலாலயா’ மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சிக்குப் பின், மாலையில் பரிசு வழங்கும் சிறப்புத் தருணம். நீதிபதி தீப்தி அறிவுநிதியுடன் மதுரை ரேடியோ மிர்ச்சியின் ஆர்.ஜே ரமணா இணைந்து பரிசுகளை வழங்கினர். அடுத்ததாக, ‘டேலன்ட் ஹன்ட்’ போட்டியின் வெற்றியாளர்களை அறிவிக்கும் தருணம்.

மதுரையை கலக்கிய   மலர்களின் திருவிழா!

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதன் விளைவை தங்களின் ‘லுங்கி டான்ஸ்’ மூலம் கலகலவென சொன்ன தேவி, பத்மப்ரியா சகோதரிகள் மூன்றாவது பரிசையும், ‘லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்’ என சரோஜாதேவியாகவே மாறி சர்ப்ரைஸ் தந்த லக்ஷ்மி சந்தர் இரண்டாவது பரிசையும் பெற, ‘கொஞ்சம் நிலவு’ என்று அரங்கத்தையே பற்றவைக்கும்படி பாடிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஹர்ஷிதா முதல் பரிசை வென்றார்.

சத்யா நிறுவனம் வழங்கிய பம்பர் பரிசுக்கான கூப்பனை குலுக்கல் முறையில் எடுத்துப் பெயர் படிக்க, சங்கரன்கோவிலில் இருந்து வந்திருந்த முப்பிடாதி பாட்டிக்கு அடித்தது அதிர்ஷ்டம். ‘‘நான் போட்டியில எதுவும் கலந்துக்கல. பார்வையாளரா இருந்ததே அவ்வளவு மகிழ்ச்சியா இருந்துச்சு. இப்போ பம்பர் பரிசு வேற... வார்த்தையே இல்ல என் சந்தோஷத்தை சொல்ல!’’ என்றார் குரல் படபடக்க.  
‘‘திறமைக்கு மேடை, சுதந்திரமான, பாதுகாப்பான கொண்டாட்டம், உணவு, பரிசுகள்... இதைவிட வேறென்ன வேணும் எங்களை சந்தோஷப்படுத்த?! அவள் ‘ஒன் டே ஃபன் டே’ இனி எங்கே நடந்தாலும், கலந்துக்குவோம். ஏன்னா, இது மிஸ் பண்ணக்கூடாத மகிழ்ச்சி!’’

- விடைபெறும் தருணத்தில் அளவில்லாத ஆனந்தத்துடன் வாசகிகள் தந்த வார்த்தைகள் சொல்லின... நிகழ்ச்சியின் வெற்றியை! 

 நா.மரகதமணி

படங்கள்:
  ஈ.ஜெ.நந்தகுமார், வீ.சதீஷ்குமார், சே.சின்னதுரை, நா.ராஜமுருகன், சு.ஷரண் சந்தர்

‘அவள் லேடி சூப்பர் ஸ்டார்’... நீங்களா?!

மதுரையை கலக்கிய   மலர்களின் திருவிழா!

அவள் 20 - 20 ஒன் டே ஃபன் டே நிகழ்ச்சி, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட உள்ளதை நீங்கள் அறிவீர்கள். இதன் முக்கிய அம்சமான ‘டேலன்ட் ஹன்ட்’ போட்டியில், மதுரையைப் போலவே ஒவ்வொரு ஊரிலும் மூன்று வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வெற்றியாளர்களுக்கான இறுதிச்சுற்று சென்னையில் நடத்தப்படும். அதில் வெற்றிபெறுபவருக்கு ‘அவள் லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டமும் பரிசும் காத்திருக்கிறது!

மதுரையை கலக்கிய   மலர்களின் திருவிழா!

மதுரையில் நடந்த அவள் விகடன் 20 - 20 நிகழ்ச்சியின் காட்சிகளை கண்டுகளிக்க http://bit.ly/24EVpBX  என்ற வீடியோ லிங்க்கை க்ளிக் செய்யவும். அல்லது இங்குள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்யவும்.