Published:Updated:

மனதைக் கொள்ளைகொண்ட மதுரை ஜாலி டே!

மனதைக் கொள்ளைகொண்ட மதுரை ஜாலி டே!
பிரீமியம் ஸ்டோரி
News
மனதைக் கொள்ளைகொண்ட மதுரை ஜாலி டே!

வாசகிகள் திருவிழா!கொண்டாட்டம்ஆர்.ஜெயலெட்சுமி - படங்கள்: வீ.சதீஷ்குமார் - வி.ஜே.நந்தகுமார்

வாசகிகள் கொண்டாடி மகிழும், பரிசுகள் அள்ளும் அவள் விகடன் ஜாலி டே, மதுரையில். பவர்டு பை ஜிஆர்டி தங்கமாளிகை மற்றும் பஞ்சாராஸ். அசோசியேட் பாட்னர் சுப்ரீம் ஃபர்னிச்சர்ஸ். ஹாஸ்பிடாலிட்டி பாட்னர் ரியோ கிராண்ட் ரெசிடன்சி... இணைந்து வழங்கிய வாசகிகள் திருவிழா, ஜூலை 9 அன்று மதுரை, லட்சுமி சுந்தரம் ஹாலில் அரங்கம் அதிரும் ஆரவாரத்துடன் நடைபெற்றது.

மனதைக் கொள்ளைகொண்ட மதுரை ஜாலி டே!

மகளிர் மருத்துவம் மற்றும் குழந்தையின்மை சிறப்பு மருத்துவர் டாக்டர் கல்பனா மற்றும் ரியோ ரெசிடன்சி உரிமையாளர் முத்துலட்சுமி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கிவைக்க, ஆரோக்கியத்தை வலியுறுத்தி வாசகிகளுக்கு பூஸ்ட் வார்த்தைகள் பகிர்ந்தார் டாக்டர் கல்பனா. அடுத்ததாக ஸ்ரீசத்குரு சங்கீத சமாஜம் மாணவிகளின் வரவேற்பு நடனம் அரங்கேறியது. தொகுப்பாளர்கள் அரவிந்த் மற்றும் சித்ரா அந்த நாளைக் கலகலப்பாக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டனர். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மனதைக் கொள்ளைகொண்ட மதுரை ஜாலி டே!

முதல்நாள் நடந்த முன்தேர்வுப் போட்டிகளிலேயே பாட்டு, நடனம், அடுப்பில்லாச் சமையல், நடிப்பு, மிமிக்ரி, ஆர்ட் அண்ட் கிராஃப்ட், ரங்கோலி, மெஹந்தி, டப்ஸ்மாஷ், செல்ஃபி போட்டிகளில் நம் நடுவர்களைத் திணறடித்திருந்தனர் வாசகிகள். ஆர்ட் அண்ட் கிராஃப்ட் போட்டியில் ‘அப்-சைக்ளிங் தீம்’, அடுப்பில்லாச் சமையலில் சத்துகளின் சாம்ராஜ்ய உணவு வகைகள், ரங்கோலியில் நவதானிய கோலம், குமிழ் கோலம், சுற்றுச்சூழலின் பாதுகாப்பை வலியுறுத்தும் தீம் கோலம் என அசத்தினர் அவள் தோழிகள்.  

மனதைக் கொள்ளைகொண்ட மதுரை ஜாலி டே!

மறுநாள், இறுதிப் போட்டியாளர்கள் வசம் மேடை. சிறுமிகள் முதல் பாட்டிகள் வரை வெளிப்படுத்திய உற்சாகத்தில் அழகானது விழா. நடனப் போட்டியில் பரதம், வெஸ்டர்ன், கரகாட்டம் என வெரைட்டி காட்டினர் வாசகிகள். பாட்டுப் போட்டியில் பக்திப் பாடல்கள் முதல் கலகலப்புப் பாடல்கள்வரை செவிகளுக்கு விருந்துவைத்தனர். டீ, பிஸ்கட், ரெஃப்ரெஷ்மென்ட்ஸ், மதிய உணவு என வாசகிகளைச் சோர்வாகாமல் பார்த்துக்கொண்டது விகடனின் உபசரிப்பு. ஆன் த ஸ்பாட்டில் `பஞ்சாராஸ்' சார்பாகப் போட்டி நடத்தப்பட்டு, பத்து பேருக்கு கிஃப்ட் பேக் வழங்கப்பட்டது. அதோடு, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற 69 நபர்களுக்கு பஞ்சாராஸின் கிஃப்ட் பேக் வழங்கப்பட்டது. ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் சார்பாக நகையின் எடையைக் கண்டறிதல், ஜோடி வளையலைக் கண்டறிதல் மற்றும் லக்கி டிரா நடத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன. சுப்ரீம் ஃபர்னிச்சர் சார்பாக மியூசிக்கல் சேர் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற ஐந்து நபர்களுக்குப் பரிசாக சேர்கள் வழங்கப்பட்டன.  

மனதைக் கொள்ளைகொண்ட மதுரை ஜாலி டே!

மதிய இடைவேளைக்குப் பின் சின்னத்திரை பிரபலங்கள் வடிவேல் பாலாஜி மற்றும் அசார் மேடையில் தோன்றியதும், அரங்கமே அமளிதுமளியானது. வடிவேல் பாலாஜி ஜிகுஜிகு துபாய் சட்டையோடு வந்து அரங்கைக் கலகலப்பாக்கினார். பாண்டிச்சேரி, கடலூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஜாலி டே கொண்டாட்டத்துக்காகவே கிளம்பி வந்திருந்த வாசகிகளின் அன்பு நம்மை நெகிழச் செய்ய... ‘எப்பவும் வீடு, வேலைனு இருக்கிற எங்களைச் சந்தோஷப்படுத்திப் பார்க்கிற அவள் விகடனுக்கு நாங்கதான் தேங்க்ஸ் சொல்லணும்’ என்று கைகள் பற்றி அன்பைப் பகிர்ந்தார்கள் தோழிகள்.  

மனதைக் கொள்ளைகொண்ட மதுரை ஜாலி டே!
மனதைக் கொள்ளைகொண்ட மதுரை ஜாலி டே!

ஒவ்வொரு போட்டியிலும் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்ட பின், க்ளைமாக்ஸ் நொடி நெருங்கியது... பம்பர் பரிசான ஃப்ரிட்ஜ் யாருக்கு?! மதுரையைச் சேர்ந்த சுஜாதா தேர்ந்தெடுக்கப்பட, `தட் கனவா, நனவா மொமென்ட்’ அவருக்கு. ``மூணு முறை `ஜாலி டே’வுக்கு வந்திருக்கேன். ஆனா, பம்பர் பரிசை எதிர்பார்க்கவே இல்லை’’ என மகிழ்ச்சியில் களித்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோழிகள் அனைவருக்கும் பஞ்சாராஸின் அன்புப் பரிசு வழங்கப்பட, மனம்நிறைய மகிழ்வுடன் விடைபெற்றனர் அனைவரும்.

மனதைக் கொள்ளைகொண்ட மதுரை ஜாலி டே!

சம்பந்திகளின் டூயட் நடனம்!

டனப்போட்டியில் 60 ப்ளஸ் பாட்டிகளான மீனாட்சியும் குருவம்மாளும் ஜீன்ஸ் பேன்ட், டி-ஷர்ட், கூலர்ஸ் சகிதம் டூயட் ஆட, அவர்களுக்குச் சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. ‘`ரெண்டு பேரும் தோழிகளா?’’ என்றால், ‘`சம்பந்திகள்” என்று ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்தார்கள். ``என் பொண்ணு பிறந்த வருஷம் அவள் விகடன் ஆரம்பிச்சாங்க. அப்ப இருந்து நான் தொடர்ந்து படிச்சுட்டு வர்றேன். ஒவ்வொரு முறையும் ஜாலி டே நிகழ்ச்சியில் தவறாமல் கலந்துக்குவேன். இளமை திரும்பின மாதிரி இருக்கும்’’ என்றார் மீனாட்சி, கூலர்ஸை சரிசெய்தபடி. ‘`சம்பந்தியம்மா வீட்டுக்கு வந்திருந்தேன். ‘மதுரையில ஜாலி டே... வாங்க போவோம்’னு இங்கே கூட்டிட்டு வந்தாங்க. புள்ளைங்க எங்களுக்கு காஸ்ட்யூம்ஸ் (பார்றா!) எல்லாம் ரெடி பண்ணிக் கொடுத்தாங்க. ஆடிக் கலக்கிட்டோம்!” என்றார் குருவம்மாள், அசத்தலாக.