Published:Updated:

செம... செம... சேலம்!

செம... செம... சேலம்!
பிரீமியம் ஸ்டோரி
செம... செம... சேலம்!

சேலம் 150ஞா.சக்திவேல் முருகன் - படங்கள்: க.தனசேகரன்

செம... செம... சேலம்!

சேலம் 150ஞா.சக்திவேல் முருகன் - படங்கள்: க.தனசேகரன்

Published:Updated:
செம... செம... சேலம்!
பிரீமியம் ஸ்டோரி
செம... செம... சேலம்!

சேலம் நகரம் தனது 150வது பிறந்தநாளைக் கொண்டாடுவதை முன்னிட்டு சேலத்தின் 150 சிறப்புகளை ஆங்கிலம் மற்றும் தமிழில் தொகுத்து சேலத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு வழங்கியது சுட்டி விகடன். இந்தப் புத்தகத்தை வழங்கி ஒரு வாரகாலத்துக்குப் பிறகு சேலம் - 150 புத்தகத்தின் அடிப்படையில் கேள்வித்தாள்  தயாரிக்கப்பட்டு, பள்ளி மாணவர்களிடையே தேர்வு நடத்தப்பட்டது. 

செம... செம... சேலம்!

``75 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 7500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். அடுத்த நாளே அனைத்து மாணவர்களின் விடைத்தாள்களும்  ஸ்கேனிங் முறையில் திருத்தப்பட்டது. முதல் நாளில் தேர்வு, இரண்டாவது நாளில் தேர்வு முடிவு அறிவிப்பு, மூன்றாவது நாளில் பாராட்டு விழா என மிகச்சிறப்பாக நடந்தேறியது சேலம் 150 விழா” என்றார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ‘ரோட்டரி கிளப் ஆஃப் சேலம் கேலக்ஸி’யின் சேர்மன் ஹரி பாஸ்கர்.

இந்த மாபெரும் `சேலம் 150’ விழாவை, சுட்டி விகடனுடன் ஜிஆர்டி ஜுவல்லரி, ரோட்டரி கிளப் ஆஃப் சேலம் கேலக்ஸி மற்றும் இன்டாக் அமைப்புகள் இணைந்து நடத்தின. இந்தத் தேர்வில் கலந்துகொண்ட ஒவ்வொரு பள்ளியிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு  சேலம் விஜயராகவாச்சாரியார் ஹாலில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விகடன் பரிசுக்கேடயம் வழங்கி வாழ்த்தியது.

``சுட்டி விகடன் வழங்கிய சேலம்-150 புத்தகம் எங்கள் மாணவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோன்ற தொகுப்புகள் மாணவர்களின் வாசிப்புத் திறனையும், எழுத்தாற்றலையும் படைப்பாற்றலையும் மேம்படுத்திட உதவும்” என்றார், விழாவில் கலந்துகொண்ட கன்னந்தேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஜெயக்குமார்.

செம... செம... சேலம்!

``படிக்கப் படிக்க ஆர்வத்தைக் கொடுத்ததால் ஒரே இரவில் முழு மூச்சோடு படித்து முடித்தேன். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று இப்போது பரிசும் பெற்றிருக்கிறேன். இது எனக்கு மட்டுமல்ல, என் பள்ளிக்கும், எங்கள் ஊருக்கும் பெருமை” என்றார் பத்தாம் வகுப்பு மாணவி லோகமித்ரா.

செம... செம... சேலம்!``இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சேலத்தின் பங்களிப்பு அதிகம். ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் தெற்கே திண்டுக்கல், வடக்கே ஒசூர் வரை பரந்து விரிந்திருந்தது சேலம் மாவட்டம். இந்தியா சுதந்திரமடைந்த பின்பு சேலம் நான்கு மாவட்டங்களாகப் பிரிந்திருக்கிறது. லண்டன் மாநகரத்தில் உருவாக்கப்பட்ட பாலத்துக்கு சேலத்தின் இரும்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள டெக்ஸ்டைல் ஆலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்களை இங்கிருந்து அனுப்பியுள்ளனர்” என, சேலத்தின் சாதனையைப் பட்டியலிட்டார், விழாவில் பேசிய வரலாற்று ஆய்வாளர் சந்திரசேகரன்.

``சேலம் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது தாரமங்கலம் கைசாலநாதர் கோயில். இந்தக் கோயிலில் கல்லிலேயே சங்கிலி இருப்பதைப் பார்க்கலாம். ஆறகளூரில் உள்ள கோயில்களிலும் சிற்பங்கள் மிகுந்து காணப்படுகின்றன. தனக்குக் கிடைத்த நெல்லிக்கனியை மற்றவர்களுக்குக் கொடுத்துதவும் வள்ளல்தன்மை கொண்டவர்கள் சேலத்துக்காரர்கள்” என்று பல சுவாரஸ்யமான விவரங்களைச் சொல்லி மாணவர்களின் பாராட்டைப் பெற்றார், `சேலம் 150’ தொகுப்பின் ஆசிரியர் ஆதலையூர் த.சூரியகுமார்.

செம... செம... சேலம்!

``பள்ளி மாணவர்கள் நவீன அறிவியலைக் கற்றுக்கொள்வதுடன் தனது சொந்த ஊரின் பாரம்பர்யத்தையும் புகழையும் அறிந்துகொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இந்தியச் சட்டப்பிரிவு 51-ல் இந்தியாவின் கலாசாரத்தையும் பழைமையான அடையாளங்களையும் காப்பாற்ற வேண்டியது அவசியம் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது” என்றார், இன்டாக் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சரவணன்.

``போட்டி நிறைந்த காலகட்டத்தில் பெற்றோர்களும் பிள்ளைகளும் சேர்ந்து செயல்பட்டால் மட்டுமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற முடியும். அந்த வெற்றி சொந்த ஊருக்குப் பெருமை சேர்க்கலாம், ஆனால், சொந்த ஊரின் பெருமைகளைத் தெரிந்துகொண்டால் இன்னும் பெருமையாக இருக்கும்’’ என்றார், ரோட்டரி கிளப் சேலம் கேலக்ஸி அமைப்பின் பிரசிடென்ட் சீனிவாசன்.

விகடன் குழுமத்தின் தலைமை விற்பனை அதிகாரி சுந்தர் தியாகராஜன், ``92 வருட பாரம்பர்யம் கொண்ட விகடன் `சேலம் 150’ விழாவைச் சிறப்பிப்பதில் பெருமைகொள்கிறது. இனி உங்கள் ஊரின் பெருமையை மட்டுமல்ல, உங்களின் பெருமையையும் வெளியுலகுக்குச் சொல்லத் தயாராக இருக்கிறது சுட்டி விகடன். நீங்களும் எங்களுடன் கைகோத்துச் செயல்பட வேண்டும்” என்றார்.

வாழ்த்துகள் சேலம் சுட்டீஸ்!