தெருக்கடை முதல் தீம் ரெஸ்டாரன்ட் வரை, வரகுப் பொங்கல் முதல் கிரில் ஃபிஷ் வரை நமக்காகச் சமைத்து அசத்தும் தமிழகத்தின் சுவைக் கரங்களுக்கு மகுடம் சூட்டியது ‘அவள் விகடன் கிச்சனின் யம்மி விருதுகள்' கொண்டாட்டம்.

சிறந்த சைவ உணவகக் கிளைகளுக்கான அங்கீகாரத்தை ‘கோவை ஆனந்தாஸ்’ பெற்றது. ஆனந்தாஸ் இயக்குநர்கள் மணிகண்டன், நம்மாழ்வார் ஆகியோருக்கு ‘பிக்பாஸ்’ வைஷ்ணவி விருது வழங்கினார். தொகுப்பாளர் ரம்யா பிக்பாஸில் சமைத்த ரெசிப்பி ஒன்றை வைஷ்ணவியிடம் கேட்க, டேனி சமைத்த மட்டன் தொக்கு பற்றி அவர் சுவாரஸ்யமாகக் கூற அரங்கம் கரவொலியில் அதிர்ந்தது.

சிறந்த சிற்றூர் உணவகம் விருதினை கும்பகோணம் ஸ்ரீ மங்களாம்பிகா காபி ஹோட்டல் நிர்வாகத்தார் பெற்றனர். இந்த விருதை பிரபல சமையல்கலை நிபுணர் மெனுராணி செல்லம் வழங்கினார். பெஸ்ட் டிரெண்ட்செட்டர் விருதினை இட்லியில் வெரைட்டி காட்டி அசத்தும் சென்னை அசோக்நகர் `இட்லீஸ்’ உணவகத்தினர் பெற்றனர். பிரபல சமையல்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத் இந்த விருதினை வழங்கினார். சென்னை அடையாறு திருக்குறள் உணவகம் சிறந்த பாரம்பர்ய உணவகத்துக்கான விருதினை வென்றது.

40 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை சேப்பாக்கத்தில் இயங்கிவரும் காசி விநாயகா மெஸ் சிறந்த மெஸ் விருதைப் பெற்றது. மண்பானை சமையல், அம்மிக்கல் மசாலா என திண்டுக்கல் - கரூர் பைபாசைக் கடக்கும் மக்களை ஈர்த்த கரூரின் ஸ்ரீ முருகவிலாஸ் மண்பானை சமையல் உணவகம் `சிறிய விஷயம் பெரிய வெற்றி’ என்கிற அடையாளத்துடன் விருது பெற்றது. விருது வழங்கிய `நேச்சுரல்ஸ்’ இயக்குநர் சி.கே.குமரவேல், ``ஒரு பொருளை நேர்த்தியா செஞ்சா உலகமே கைதட்டும். அதுக்கு உதாரணம் இந்த உணவகம்” எனப் பாராட்டினார்.

சௌகார்பேட்டையின் பேட்டைக்காரனாகத் திகழும் சீனாபாய் டிபன் சென்டர் சிறந்த தெருக்கடை விருதினைப் பெற்றது. பெஸ்ட் தீம் ரெஸ்டாரன்ட் விருதினை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவிலுள்ள ‘டயலாக் இன் தி டார்க்’ சார்பில் ஜானகி மற்றும் ஃபாசில் பெற்றுக்கொண்டனர். சிறந்த பிரியாணிக்கான விருதினைப் பெற்ற வேணு பிரியாணியின் நிறுவனர் வசந்தா, “60 வருஷமா இந்த ஹோட்டல் தொழிலை நடத்தி வரோம். பல கஷ்டங்களை அனுபவிச்ச பிறகு இப்போ பல கிளைகள் தொடங்கியிருக்கிறோம்” எனக் குரல் தழுதழுக்கக் கூறினார்.

நெல்லை வைரமாளிகை சிறந்த அசைவ உணவகக் கிளைகளுக்கான விருதைப் பெற்றது. சென்னை ஓட்டல் அசோசியேஷன் தலைவர் வசந்தபவன் ரவி இந்த விருதை வழங்கினார். சிறந்த டயட்டீசியன் விருதை டாக்டர் தாரணி கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

`ருச்சி பிக்கில்ஸ்’ அவள் கிச்சன் யம்மி செஃப் விருது டாக்டர் செஃப் தாமுவுக்கு வழங்கப்பட்டது. ருச்சி பிக்கிள்ஸ் சார்பில் கெவின்கேர் மீடியா துறையைச் சேர்ந்த மிஷாவும், ருச்சி பிராண்ட் மேனேஜர் வினய்யும் இந்த மதிப்புமிகு விருதினை வழங்கினர். “சமையல்காரன், குக்னு சொல்லிக்கிட்டு இருந்த என்னை, எல்லாரும் `செஃப்’னு சொல்ல 35 வருஷம் ஆச்சு...” என நிதர்சனத்தைக் கூற, கரவொலியால் மரியாதை செய்தனர் அரங்கிலிருந்தவர்கள்.

ஆடு, மீன், கோழி என அனைத்தையும் ‘நேட்டிவிட்டியான’ ஸ்டைலில் சமைத்து அசத்தும் ‘வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி’ டாடி ஆறுமுகம் ‘சிறந்த இணையதள செஃப்’ விருதினை நடிகை இந்துஜாவிடமிருந்து பெற்றார். சுவையான உணவு வகைகளை அழகாக டிசைன் செய்யும் ஃபுட் ஸ்டைலிஸ்ட் சஞ்ஜீதா சிறந்த ஃபுட் ஸ்டைலிஸ்ட் விருதை ஓவியர் மருது மற்றும் அவள் கிச்சன் செஃப்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

உணவின் வரலாற்றை சுவையான எழுத்தில் வடிக்கும் எழுத்தாளர் முகிலுக்கு சிறந்த உணவு எழுத்தாளர் விருதை ஓவியர் மணியம் செல்வன் வழங்கினார்.

நிறைவாக உலக தெருக்கடை உணவுகள் பலவும் பலமான விருந்தாகப் பரிமாறப்பட, ருச்சி பிக்கிள்ஸ் வழங்கிய அவள் கிச்சன் யம்மி விருதுகள் விழா, பவர்டு பை சக்தி மசாலா மற்றும் நோவா இண்டீரியர்ஸ் சுவையோடும் சுவாரஸ்யத்தோடும் நிறைவுபெற்றது.

சக்தி தமிழ்ச்செல்வன் - படங்கள்: க.பாலாஜி