Published:Updated:

நம்ம ஊரை நல்லா தெரிஞ்சுப்போம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நம்ம ஊரை நல்லா தெரிஞ்சுப்போம்!
நம்ம ஊரை நல்லா தெரிஞ்சுப்போம்!

நம்ம ஊரை நல்லா தெரிஞ்சுப்போம்!

பிரீமியம் ஸ்டோரி

டந்த ஆறுமாதங்களாக சுட்டிவிகடன் இதழோடு `உங்கள் மாவட்டத்தை அறிந்துகொள்ளுங்கள் (know your district)’ என்ற தலைப்பில், தமிழக மாவட்டங்கள் ஒவ்வொன்றையும் பற்றிய 200 தகவல்கள்கொண்ட இணைப்பிதழ் (Info book), இலவசமாகக் கொடுக்கப்பட்டுவருகிறது. 

நம்ம ஊரை நல்லா தெரிஞ்சுப்போம்!

பிறகு, அந்த இணைப்பிதழின் அடைப்படையில் அந்தந்த மாவட்ட சுட்டிகளுக்குத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. (இதில் நீட் தேர்வுகளில் பயன்படுத்தப்படும் OMR ஷீட், வினாத்தாள் பயன்படுத்தப்படுகிறது.)இந்தத்தேர்வுகளில் இதுவரை சென்னை, மதுரை, தருமபுரி ஆகிய ஊர்களைச் சேர்ந்த நாற்பதாயிரம் மாணவர்கள்  இந்தத் தேர்வில் கலந்துகொண்டனர்.  தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அந்தந்த ஊர்களில் பாராட்டிப் பரிசுகள் வழங்கப்பட்டன.

`` `நம்ம மாவட்டத்தை நல்லா தெரிஞ்சுக்குவோம்’  தகவல்கள் அனைத்தும் போட்டித் தேர்வுக்கும்,  பொதுவாழ்க்கைக்கும் உதவும் வகையில் உள்ளன. அதை மதிப்பீடு செய்து, பரிசு வழங்கிப் பாராட்டியிருப்பது சிறப்பானது” என்று விகடனின் பணியைப் பாராட்டினார் தருமபுரி விழாவில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் மலர்விழி.

``வாசிப்பின் மூலம் வெளி உலகத்துக்கு வர நினைக்கும் குழந்தைகளுக்கு சரியான தகவலை வழங்கியுள்ளனர். இதுபோன்று, சுட்டிகள் தொடர்ந்து கூடுதலான தகவல்களைத் தெரிந்து கொள்ளும் திறமையை வளர்த்துகொண்டால், வாய்ப்புகளும்  அங்கீகாரமும் கூடும்’’ என்றார் மதுரை விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட, மதுரை நகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம்.

நம்ம ஊரை நல்லா தெரிஞ்சுப்போம்!

சென்னை விழாவில் சிறப்புரை வழங்கிய தமிழக அரசின் கூடுதல் நிதிச் செயலர், மருத்துவர் ஆனந்தகுமார், ஐ.ஏ.எஸ், “மாணவர்களாகிய நீங்கள் சரியான நேரத்தில் சரியான இடத்தில் போய் நிற்கும்போது உங்களுக்கான வெற்றி உங்களை வந்து சேரும். அதற்கு நீங்கள் உங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றவர் பெற்றோர்களிடம், ``உங்கள் பிள்ளைகள் என்ன ஆகப்போகிறார்கள் என்பதை 40% சூழ்நிலையே முடிவுசெய்கிறது. என் பிள்ளை ஐ.ஏ.எஸ் ஆகணும், டாக்டருக்குப் படிக்கணும் என, உங்களுக்குப் பிடித்த துறையை அவர்களை எடுக்கச் சொல்லி வற்புறுத்தாதீர்கள்” என்று ஆலோசனை வழங்கினார். 

சென்னைப் பெருநகர மாநகராட்சியின் துணை ஆணையர் பி.குமாரவேல் பாண்டியன் ஐ.ஏ.எஸ் “இந்தச் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் அதைக் கல்வியானது சமமாகக் கட்டமைத்துக்கொடுக்கிறது. நாம் கற்கும் கல்வி என்பது போக்குவரத்து விதிகளை மதிப்பதில் தொடங்கி எதிர்கால இந்தியாவைக் கட்டமைப்பது வரை வாழ்வின் ஒவ்வோர் அங்கத்திலும் பிரதிபலிக்க வேண்டும்” என்றார். 

நம்ம ஊரை நல்லா தெரிஞ்சுப்போம்!

தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் இணை இயக்குநர் சங்கர சரவணன், “இமேஜினேஷன் இல்லாமல் படிக்கும் பாடமானது செரிமானம் ஆகாத உணவைச் சுவைப்பதற்குச் சமம். அதனால், எப்போதும் படிக்கும்பொழுது அதுசார்ந்த கற்பனைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். நாம் எவ்வளவு தூரம் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறோமோ அதற்கேற்ப, தேடித் தேடிப் படிக்க வேண்டும்” என்றார்.

“வாழ்க்கையை எதிர்கொள்ள நான்கு விஷயங்கள் போதுமானது. முதலாவது அறிவு. இரண்டாவது அணுகுமுறை. மூன்றாவது திறன். நான்காவது பழக்கவழக்கம். நாம் பெற்ற கல்வியின் மூலம் இவை நான்கையும் முறைப்படுத்தினாலே வாழ்வில் வெற்றியை அடைய முடியும்” என்ற தன்னம்பிக்கையை விதைத்தார் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி.

“தற்போது தகவல் தொடர்பு பெருகியிருக்கிறது.  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, தகுந்த முறையில் இதையெல்லாம் பயன்படுத்தச் சொல்லிக்கொடுத்து வாழ்க்கையை இனிமையாக்க வேண்டும். கூடவே ஓடியாடி விளையாட வையுங்கள். திருக்குறளை வாசிக்கப் பழக்குங்கள்” என்றார் அண்ணா பல்கலைக்கழக ஊடக அறிவியல் துறையின் துறைத்தலைவர் எம்.சரோஜா தேவி.

நம்ம ஊரை நல்லா தெரிஞ்சுப்போம்!

தருமபுரியில் நடந்த விழாவில், தருமபுரி அரசு கலைக் கல்லூரி துணை முதல்வர் கண்ணன், மாவட்டக் கல்வி அலுவலர் பொன்முடி, மருத்துவர் செந்தில், செந்தில் பப்ளிக் பள்ளியின் நிர்வாகி சக்திவேல், பொம்மிடிபாளையம் அரசுப் பள்ளி ஆசிரியர் எஸ்.அன்பரசன் ஆகியோரும்; சென்னை விழாவில், சாய் இன்ஃப்ரா பிராசக்டஸின் சிஇஓ சாய் சுதாகர், இன்ஃபோ புத்தகங்களைத் தொகுத்து வழங்கிய ஆசிரியர் ஆதலையூர்  த.சூரியகுமார் ஆகியோரும்; மதுரை விழாவில், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி இயக்குநர் ராஜா கோவிந்தசாமி, மதுரை ரோட்டரி கிளப் துணை கவர்னர் கோடீஸ்வரன், ரோட்டரி கிளப் ஆஃப் மதுரையைச் சேர்ந்த சதீஷ்லால் மற்றும் நண்பர்கள் ஆகியோரும் கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடினர்.

‘நம்ம மாவட்டத்தை நல்லா தெரிஞ்சிப்போம்’ நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான உத்வேகம் ஆலோசனைகளுடன் பரிசுகளைப் பெற்றுக்கொண்டு உற்சாகத்துடன் விடைபெற்றனர்.

மதுரை விழாவில் பரிசு பெற்ற மாணவி, ஹர்ஷிதா, “நான் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். ‘மதுரை 200’ல எங்க கிளாஸ்லயே நான்தான் முதல் பரிசு வாங்கியிருக்கேன். எங்க அம்மாதான் எனக்கு இந்தப் போட்டிக்கான இன்ஸ்பிரேஷன். சின்ன வயசுல இருந்து சுட்டி விகடன் படிக்கச் சொல்லி ஊக்கப்படுத்துவாங்க. இன்னும் வேற எந்த மாவட்டம் பத்தி போட்டி வச்சாலும், நான் முதல் பரிசு வாங்கிருவேன்னு நம்பிக்கை இருக்கு. அடுத்த போட்டிக்கு நான் ரெடி, நீங்க ரெடியா?” என  உற்சாகத்தோடு பேசினார்.

-  விகடன் டீம்    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு