Published:Updated:

அரசுப் பள்ளி மாணவர்களை ஓரங்கட்டிய தனியார் பள்ளி நடுவர்கள்! - திருப்பாவை விழாவில் சர்சை #Sivaganga

அரசுப் பள்ளி மாணவர்களை ஓரங்கட்டிய தனியார் பள்ளி நடுவர்கள்! - திருப்பாவை விழாவில் சர்சை #Sivaganga
அரசுப் பள்ளி மாணவர்களை ஓரங்கட்டிய தனியார் பள்ளி நடுவர்கள்! - திருப்பாவை விழாவில் சர்சை #Sivaganga

சிவகங்கையில் நடைபெற்ற பாவை விழா போட்டிகளில் திறமையாக ஒப்புவித்த அரசுப் பள்ளிகளின் மாணவ மாணவிகளை தனியார் பள்ளி நடுவர்கள் புறக்கணித்தாக பெற்றோர்கள் பரபரப்பாக குற்றம் சாட்டிவருகின்றனர்.

அரசுப் பள்ளி மாணவர்களை ஓரங்கட்டிய தனியார் பள்ளி நடுவர்கள்! - திருப்பாவை விழாவில் சர்சை #Sivaganga

தமிழக அரசின் கல்வித் துறையும் இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து பாவை ஒப்புவித்தல் போட்டியை  நடத்தி வருகிறது. அதில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கலந்துகொண்டார்கள். இப்போட்டியானது சுந்தரராஜபெருமாள் கோயிலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் திருப்பாவை, திருவெண்பா பற்றி ஒப்புவித்தல், கட்டுரை எழுதுதல் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நடுவர் தீர்ப்பானது பாரபட்சமாக இருக்கிறது. போட்டியில் பங்குபெற்ற தனியார் பள்ளி மாணவர்களின் ஆசிரியர்களே நடுவர்களானதால் நடுவர்கள் பள்ளிக்கே பரிசுகள் சென்றிருக்கின்றன. எனவே, உரிய விசாரணை செய்து போட்டிகளை மீண்டும் நடத்த பெற்றோர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

இது குறித்து போட்டியில் பங்குபெற்ற அரசுப் பள்ளி மாணவரின் தாயார் கௌசல்யா பேசும்போது... ``நாங்கள் பாவை விழா போட்டிகளில் பங்கேற்பதற்காக எங்கள் பிள்ளைகளுடன் போட்டி நடக்கும் இடமான சுந்தரராஜபெருமாள் கோயிலுக்கு வந்தோம். என் குழந்தை அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். நடுவர்கள் கேட்ட அனைத்து பாடல்களையும் தெளிவாகச் சொன்னார். எங்களுடன் வந்த அரசுப் பள்ளியின் பிற மாணவர்களும் நன்றாக ஒப்புவித்தனர். தனியார் பள்ளி மாணவர்களை நடுவர்கள் முதல் பாடலை மட்டுமே கேட்டார்கள். அதையே அவர்கள் சரியாகச் சொல்லவில்லை. ஆனால், சரியாக சொல்லாத தனியார் பள்ளி மாணவர்களின் ஆசிரியர்களே நடுவர்களாக இருந்ததால் ஒருதலைப்பட்சமாக தனியார் பள்ளிகளுக்கே பரிசுகளைக் கொடுத்துள்ளனர். ஆனால், எங்கள் பள்ளியிலிருந்து சென்று நன்றாக சொன்ன குழந்தைகளுக்கு பரிசுகள் கொடுக்கப்படவில்லை. என்ன அநியாயம் இது? 

இதை நாங்கள் யாரிடம் சென்று சொல்வது. என்னுடன் வந்துள்ள எங்கள் பள்ளி பெற்றோர்கள் அனைவரும் இன்று ஒரு நாள் கூலி வேலைக்கு செல்வதை விட்டுவிட்டு இங்கு வந்துள்ளோம். நன்றாக ஒப்புவிக்கும், திறமையுள்ள அரசுப் பள்ளி மாணவர்களை அரசு நடத்தும் விழாவில் புறக்கணிப்பது எங்களுக்கு மனதளவில் மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் போட்டி தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே என்று சொல்லியிருந்தால் நாங்கள் எங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு இங்கு வந்திருக்க மாட்டோம். திறமையை எங்கள் பிள்ளைகள் எங்கே வேண்டுமானாலும் சாதிப்பார்கள்’ என்கிறார்கள் சீற்றத்துடன்.