Published:Updated:

`மன்னர்கள் உபயோகித்த பொருள்கள், நாணயங்கள்!’ - சிவகாசி கல்லூரியில் கண்காட்சி

`மன்னர்கள் உபயோகித்த பொருள்கள், நாணயங்கள்!’ - சிவகாசி கல்லூரியில் கண்காட்சி
`மன்னர்கள் உபயோகித்த பொருள்கள், நாணயங்கள்!’ - சிவகாசி கல்லூரியில் கண்காட்சி

சிவகாசி எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரியில் வரலாற்றுத்துறை சார்பில் தொல்பொருள் கண்காட்சி நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர், வரலாற்றுத்துறை தலைவர் ஆகியோர் கண்காட்சிக்கு தலைமை வகித்தனர். மூன்று நாள்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை சிவகாசியைச் சேர்நத தொல்பொருள் சேகரிப்பாளர் ராஜ ராஜன் என்பவர் நடத்தினார். கடந்த ஐந்து ஆண்டுகளாக ராஜராஜன் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இக்கண்காட்சியை நடத்தி வருகிறார். சிவகாசி சுற்றுவட்டாரத்தின் பல பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள் கண்காட்சியைக் காண வந்தனர். கல்லூரியின் அனைத்து துறை மாணவிகளும் இதுவரை கண்டிராத பொருள்கள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.

தொல் பொருள் சேகரிப்பாளர் ராஜ ராஜன் கூறுகையில், ``சில ஆண்டுகளுக்கு முன் மகனின் பள்ளியில் நடந்த கண்காட்சிக்காக வீட்டில் உள்ள பழைமையான நாணயங்களைக் காட்சிப்படுத்த அதைக் காணவந்த தமிழ்சங்கத்தை சேர்ந்த நடுவர்கள் ஆச்சர்யமடைந்தனர். இதன் தொடர்ச்சியாகவே அனைத்து பொருட்களையும் கண்காட்சியில் வைக்க எண்ணம் தோன்றியது, எங்கள் தாத்தாதான் இந்த பொருட்களை எல்லாம் சேகரித்து வைத்திருந்தார்.

அவர் கொடுத்த ஊக்கத்தில் மன்னர்கள் கலால் உண்ணும் பாத்திரத்தை நானே 10,000 ரூபாய்க்கு வாங்கினேன். அதன்பின் அதை பல லட்சம் ரூபாய் கொடுத்து வாங்க பலர் கேட்டார்கள், மறுத்துவிட்டேன். என்னைத் தொடர்ந்து என் மகன்களும் ஐந்தாவது தலைமுறையாக இந்தப் பொருள்களைப் பாதுகாத்து வருகிறார்கள்” என்றார்.

ராஜராஜன் காட்சிப்படுத்தியிருந்த நாணயங்கள் தவிர்த்து இந்தியாவின் பிரபலமான கட்டிடங்களின் மாதிரியும் கண்காட்சியில் வடிவமைக்கப்பட்டிருந்தது. கூடவே, ஆதிகாலத்தில் மனித சமுதாயம் உபயோகப்படுத்திய பொருள்கள் வரிசையாக இருந்தன. அரேபிய மன்னர்கள் பயன்படுத்திய உணவு பாத்திரங்கள், பழங்கால அரசர்கள் மது அருந்திய குவளைகள் இருந்தன. தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட மதுக்கின்னம் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்து.

ஆயுதங்கள், பூஜை பொருள்கள், விளையாட்டு சாமான்கள் என அனைத்தும் வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருந்தன. பல வெளி நாட்டின் நாணயங்களையும் வைத்திருந்தனர். இயல்பாக மாணவர்களால் எளிதில் காண முடியாத பொருள்கள் இருந்தன, மேலும் விக்டோரியா மகாராணியின் உருவச்சிலையும் பத்துப்பாட்டு, நாலடியார் போன்ற பல தமிழ் இலக்கிய படைப்புகளின் பண்டைய தொகுப்புகளும் இருந்தது. கண்காட்சியைக் காண வந்த அனைத்து மாணவர்களும் தங்களின் வரலாற்று பாடத்தை நினைவுகூர்ந்து பொருள்களை கண்டு மகிழ்ந்தார்கள்.