நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

கோவையில் ஸ்டார்ட்அப்... சந்தேகங்களை தீர்த்துவைத்த பயிற்சி வகுப்பு!

கோவையில் ஸ்டார்ட்அப்... சந்தேகங்களை தீர்த்துவைத்த பயிற்சி வகுப்பு!
பிரீமியம் ஸ்டோரி
News
கோவையில் ஸ்டார்ட்அப்... சந்தேகங்களை தீர்த்துவைத்த பயிற்சி வகுப்பு!

பயிற்சி வகுப்பு

நாணயம் விகடனும் ஒய்நாஸ் வென்ச்சர் இன்ஜினும் (YNOS Venture Engine) இணைந்து கோவையில் நடத்திய ஒருநாள் பயிற்சி வகுப்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதி களிலிருந்து பலரும் கலந்து கொண்டனர். இந்தப் பயிற்சி வகுப்பில் அடிப்படை விஷயங்கள் தொடங்கி, ஸ்டார்ட் அப் நிறுவனம் குறித்த அனைத்து விஷயங்களையும்  விளக்கினார் சென்னை ஐ.ஐ.டி-யின் எம்.பி.ஏ பேராசிரியர் டாக்டர் அ.தில்லைராஜன். 

கோவையில் ஸ்டார்ட்அப்... சந்தேகங்களை தீர்த்துவைத்த பயிற்சி வகுப்பு!

எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் என்ன, ஒரு நிறுவனம் எந்த நிலையில் ஸ்டார்ட்அப் நிறுவனமாக மாறுகிறது, எந்தத் துறை சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அதிக அளவில் மூலதனம் கிடைக்கிறது என்பது உள்ளிட்ட பல விஷயங்களைப் புள்ளி விவரங்களுடன் சொன்னார் அவர்.

கோவையில் ஸ்டார்ட்அப்... சந்தேகங்களை தீர்த்துவைத்த பயிற்சி வகுப்பு!ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்க வேண்டுமெனில், அதற்கு நம்மை நாம் எந்தெந்த வகையில் தயார் செய்துகொள்ள வேண்டும் என்று அவர் சொன்ன சூட்சுமங்களை, பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட அனைவரும் தங்கள் குறிப்பேடுகளில் குறித்துக்கொண்டனர்.

இந்தப் பயிற்சி வகுப்பின் ஒவ்வொரு அமர்வு முடியும்போதும், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்குரிய பதிலைத் தந்தார் தில்லைராஜன். ‘‘ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பற்றி தெளிவாகப் புரிந்துகொள்ள இந்தப் பயிற்சி வகுப்பு உதவியது’’ என்றனர்  பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டவர்கள்!

 - ஆகாஷ் , படம்: கே.அருண்