வாசகிகள் பக்கம்

பில்களைக் கிழிக்காதீர்!

என் சகோதரி, அன்பளிப்பாக பட்டுப்புடவை ஒன்றை வாங்கிக் கொடுத்தாள். பிரியத்துடன் பிரித்துப் பார்த்தபோது, அது டேமேஜ்டு பீஸாக இருந்தது. பதறியவள், ''ஸாரிக்கா... பார்க்காம வாங்கிட்டேன்...'' என்றாள். ''அதனால என்ன... கடையில் போய் எக்ஸ்சேஞ்ச் பண்ணிடலாம்'' என்றேன். ஆனால், ''அந்தப் புடவையை அன்புப் பரிசாக தர நினைத்ததால்... பில்லையும், விலை எழுதி ஒட்டப்பட்டு இருக்கும் அட்டையையும் கிழித்துவிட் டேனே'’ என்று பரிதாபமாகச் சொன்னாள்.

'சரி, புதிதாக எடுத்ததுதானே... எதற்கும் கடையில் சென்று கேட்டுப் பார்க்கலாம்' என்றபடி இருவருமே புறப்பட்டு போனோம். ''விலை எழுதப்பட்டிருக்கும் 'டேக்’ அல்லது பில் ஏதாவது ஒன்று இல்லாவிட்டால்... மாற்றிக் கொள்ள முடியாது’' என்று கறாராகச் சொல்லிவிட்டார்கள்.

பரிசு தருவதற்காக நாம் வாங்கிவரும் துணிகளில் பின் செய்யப்பட்டிருக்கும் அட்டையில் இருக்கும் விலை, பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் எழுதப்பட்டிருக்கும் விலை போன்றவற்றை, 'விலை தெரிந்துவிடக்கூடாதே' என்று அகற்றுவது வாடிக்கையாகவே இருக்கிறது. அதில் தவறில்லை. ஆனால், அந்த விலை அட்டை மற்றும் அட்டைப் பெட்டி போன்றவற்றை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது என்கிற பாடத்தைப் படித்தோம்.

இதுமட்டுமல்ல... எக்காரணம் கொண்டும் பில்களை கிழித்தெறியவே கூடாது. பொருட்கள் என்றால், கியாரன்டி காலம் முடியும் வரையிலும் வைத்திருக்க வேண்டும்... துணிமணிகள் என்றால், குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு வைத்திருக்க வேண்டும் என்பதையும் கடைப்பிடிக்க முடிவெடுத்துவிட்டோம்!

- பா.சியாமளா, திருச்சி

சார்ஜ் போச்சு.. சகலமும் போச்சு!

திருமணத்தில் பங்கேற்பதற்காக தோழியுடன் ரயிலில் மதுரைக்குச் சென்று கொண்டிருந்தேன். அப்போது என் மொபைலுக்கு நிறைய கால்கள் வரவே, சார்ஜ் தீர்ந்து, சீக்கிரமே 'ஸ்விட்ச் ஆஃப்' ஆகிவிட்டது. ரயில் நிலையத்தில் எங்களை ரிசீவ் செய்யவேண்டிய உறவினரின் மொபைல் எண், என்னுடைய மொபைலில் இருந்ததால்... தோழியிடம் புலம்பினேன். ''தெரிந்தவர்களின் தொடர்பு எண்களை டைரியில் குறிக்கும் பழக்கம், மொபைல் போன் வந்ததில் இருந்து விடைபெற்றுவிட்டது. ஆனால், இன்றும் நான் அப்படி ஒரு டைரி வைத்திருக்கிறேன் பார்...'' என்று எடுத்துக் காட்டியதுடன், ''நீண்ட பயணங்களில் மொபைல் அரட்டையை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இல்லை என்றால், இப்படித்தான் நாம் சென்று சேர்வதற்குள் மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆகி பிரச்னை ஆகும்'' என்று பாடமும் சொன்னாள்.

ரயில் நிலையத்தில் இறங்கி, ஒரு கடையில் ஐந்து நிமிடங்கள் மொபைலுக்கு சார்ஜ் ஏற்றி, உறவினருக்கு தகவல் சொன்னது டெயில் பீஸ்!

- பா.உமா விஜயமுருகன், காரையூர்

எப்படியெல்லாம் ஏமாத்துறாய்ங்க!

நெருங்கிய கல்லூரித் தோழிகளான நாங்கள் ஐந்து பேர், படிப்பு முடித்த கையோடு வேலையில் சேர்ந்தோம். வாரம் ஒருமுறை போனில் பேசிக்கொள்வோம். நாங்கள் படித்த கல்லூரியின் கான்ஃபரன்ஸ் ஹாலை விரிவுபடுத்த, மணிமண்டபம் கட்ட என்று நன்கொடை வேண்டி எங்களை அணுகினார்கள். ஓரளவுக்கு கணிசமான சம்பளம் பெற்றுக் கொண்டிருந்ததால், முடிந்தளவுக்கு உதவினோம்.

இந்நிலையில் ஒருநாள் என் அலுவலகத்துக்கு வந்த இளம்பெண் ஒருத்தி, ''நீங்க படிச்ச காலேஜ்லதான் நான் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறேன். பக்கத்துல என் டூ வீலர் திடீர்னு ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சு. அடிபட்டவர் ரெண்டாயிரம் ரூபாய் கேட்கிறார். ப்ளீஸ் ஹெல்ப் பண்ண முடியுமா? அப்பாகிட்ட பணத்தை வாங்கிட்டு வந்து நாளைக்கு கொடுத்துடறேன்...'' என்று பதற்றத்துடன் சொன்னாள். சரி என்று நானும் கொடுத்தனுப்பினேன்.

ஒரு வாரமாகியும் அவள் வரவில்லை. வார இறுதியில் தோழிகள் பேசிக் கொள்ளும்போதுதான், நாங்கள் எல்லோருமே இப்படி ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பது புரிந்தது. கல்லூரி ஆண்டு மலரில் வெளியிடப்பட்டுள்ள நன்கொடை கொடுத்தவர் பெயர், பணிபுரியும் அலுவலகம் ஆகிய விவரங்களை சேகரித்து, ஒரு மோசடி கும்பல் எங்களை ஏமாற்றியுள்ளதை அறிந்தோம். கல்லூரி முதல்வரைச் சந்தித்து, 'நன்கொடை கொடுக்கும் பழைய மாணவிகளின் முகவரி மற்றும் விவரங்களை விழா மலரில் வெளியிட வேண்டாம்' என்றும் கேட்டுக் கொண்டோம்.

எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்?!

- புவனேஸ்வரி நெல்லையப்பன், திருநெல்வேலி