Published:Updated:

பாசத் தோழிகள் நடத்திய பலே வளைகாப்பு!

'வேலைக்குப் போறோம்' பரிசுக்குரிய படைப்பு!

பாசத் தோழிகள் நடத்திய பலே வளைகாப்பு!

'வேலைக்குப் போறோம்' பரிசுக்குரிய படைப்பு!

Published:Updated:
##~##

 பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றுகின்ற எனக்கு, அப்போது இரண்டாவது குழந்தை வயிற்றில். அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் கிட்டத்தட்ட 24 கிலோ மீட்டர். கருத்தரிக்கும் சமயத்துக்கே உரித்தான வாந்தி, குமட்டல் அனைத்தையும் கிட்டத்தட்ட ஒன்பது மாத காலமும் அனுபவித்துக் கொண்டிருந்தேன்.

சனிக்கிழமை அரைநாள் வேலை. ஒரு சனிக் கிழமையன்று மதியம் வீட்டுக்கு கிளம்பிய சமயம், லஞ்ச் ரூமுக்கு அழைத்தனர் உடன் பணியாற்றும் சக தோழிகள். உள்ளே சென்றால்... ஒரே பிரமிப்பு. சாப் பாட்டு மேஜையில் விதம்விதமான கலவை சாதங்கள், பூ, பழம், வளையல் என ஒன்பது வகை தட்டுகள் பளீரிட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு சேரில் என்னை அமரவைத்த ஒரு தோழி... தலைவாரி பூ சூட, மற்றவர்கள் கைகளில் வளையல் களை அடுக்கி... சந்தனம் பூச, ஒவ்வொருவர் வீட்டில் இருந்தும் கொண்டு வந்த புளி, எலுமிச்சை, தக்காளி, தயிர், கல்கண்டு சாதங்களை பரிமாற... அவர்களின் அன்பில் திக்குமுக்காடிப் போனது என் அகமும், முகமும்!

முத்தாய்ப்பாக சீனியர் தோழி ஒருவர் பிளவுஸ் பிட், தேங்காய், பழம் என என் மடிகட்ட 'மினி வளைகாப்பு' கொண்டாட்டம்... அன்றைய தினம் எங்கள் அலுவலகத் தையே களைகட்ட வைத்தது. கூடவே தாம்பூலம் கொடுக்கவும் தவறவில்லை பாசத் தோழிகள்.

பாசத் தோழிகள் நடத்திய பலே வளைகாப்பு!

சத்தம் கேட்டு ஆங்காங்கே எட்டிப் பார்த்த ஆண் தோழர்களுக்கும் உணவைப் பகிர்ந்தளித்தது அடுத்த ஹைலைட்!

இரண்டாவது குழந்தைக்கு வளைகாப்பு என்பது வழக்கத்தில் இல்லை. ஆனால், இதை இரண்டாவது என்று சொல்ல எனக்கு மனமும் இல்லை. பாசமிகு தோழிகள், நேசமுடன் நடத்திய இந்த வளைகாப்பு... முதலுக்கும் முந்தையது என்றே சொல்லத் தோன்றுகிறது!

- அனிதா ரோசலின், சேலம்

வேலைக்குப் போறோம்!

பஸ்ஸில், பைக்கில், டிரெய்னில் அரக்கப்பரக்க அலுவலகத்துக்குப் போகும் நீங்கள்... சந்தோஷம், துக்கம், முகம் தெரியாத நட்பு, புரமோஷன், அவமானம், ஜோக்ஸ்... என்று தினம் தினம் எதிர்கொள்பவை எத்தனை எத்தனையோ! உங்கள் நெஞ்சைத் தொட்ட விஷயத்தை 'நச்’சென்று எழுதி அனுப்புங்கள். எங்கள் நெஞ்சைத் தொடும் படைப்புக்கு இண்டக்ஷன் ஸ்டவ் பரிசு காத்திருக்கிறது!

அனுப்ப வேண்டிய முகவரி: 'வேலைக்குப் போறோம்', அவள் விகடன், 757 அண்ணா சாலை, சென்னை-600 002. இ-மெயிலிலும் அனுப்பலாம்: aval@vikatan.com

நம்பரை சொல்லுங்க...  பரிசை அள்ளுங்க போட்டி  2

இந்த இதழில் வெளியாகி இருக்கும் செஃப் தாமுவின் 'இன்றைய சமையல்' மற்றும் 'விஷமாகும் சர்க்கரை’ - ஸ்பெஷல் ஸ்டோரி... ஆகிய இரண்டு கட்டுரைகளையும் நன்கு படித்துக் கொள்ளுங்கள். உடனே 044-66802903 என்ற எண்ணை அழைத்து உங்களுடைய பெயர், ஊர், வயதை சொல்லிவிட்டு போனை வைத்து விடுங்கள். பதிவான எண்களில் இருந்து ஆசிரியர் இலாகா தேர்ந்தெடுக்கும் எண்களுக்கு அழைப்புகள் வரும். கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்கும் ஒரு வருக்கு 'மைக்ரோவேவ் அவன்' பரிசாகக் காத்திருக்கிறது. இருவருக்கு ஆறுதல் பரிசுகளாக இண்டக்ஷன் ஸ்டவ்!

மேற்சொன்ன இரண்டு கட்டுரைகளையும் படித்தாலே போதும். இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். உங்கள் அம்மா, மாமியார், மகள், அக்கா, தங்கை, ஓரகத்தி, நாத்த னார், அண்ணி, தோழி என்று யாரை வேண்டுமானாலும்  போட்டியில் பங்கேற்க வைக்கலாம்.

குறிப்பு: நம்பரைச் சொல்லுங்க... பரிசை அள்ளுங்க போட்டி-1... பல்லாயிரக்கணக்கில் உங்களின் எண்களை பதிவு செய்து, எங்களை பரபரக்க வைத்துவிட்டீர்கள். தயாராக இருங்கள் வாசகிகளே... வரும் 5-ம் தேதிக்குப் பிறகு ஆசிரியர் இலாகாவிலிருந்து போன்கள் வரத்துவங்கும். தீபாவளி சிறப்பிதழில் வெளியான 'விக்ரமனின் ஆனந்தம் விளையாடும் வீடு' மற்றும் 'தித்திக்கும் திபெத் காலனி' ஆகிய கட்டுரைகளை மனப்பாடம் செய்து வைத்திருக்கிறீர்கள்தானே!

அட்டைப்படத்தில் நீங்கள்!

16 முதல் 25 வயதுக்குட்பட்ட பெண்ணா நீங்கள்? உங்களுடைய சமீபத்திய‌ போர்ட்ஃபோலியோ, தரமான மற்றும் தெளிவான முழு புகைப்படம் ஆகியவற்றை எங்களுக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படுபவர், அவள் விகடன் அட்டைப்படத்தில் இடம்பிடிப்பதோடு... அழகான 'Tab' பரிசாகக் காத்திருக்கிறது!

அனுப்ப வேண்டிய முகவரி: 'அட்டைப்படத்தில் நீங்கள்', அவள் விகடன், 757 அண்ணா சாலை, சென்னை - 600 002. இ-மெயிலிலும் அனுப்பலாம்: aval@vikatan.com

குறிப்பு: போட்டிக்காக போட்டோக்கள் மலைமலை யாக குவிந்துள்ளன. பரிசீலனை நடந்து கொண்டே இருக்கிறது. முடிவுகள் அடுத்த இதழிலிருந்து வரத்துவங்கும்.

வாசகிகள் ரொமான்ஸ் சீக்ரெட்!

பரிசுக்குரிய ரொமான்ஸ் - 1

''...ம்மா நேரமாச்சு வாம்மா.''

''இதோ வரேண்டா கண்ணா. நீயே குளிச்சா என்ன... என்னை ஏன் கூப்பிடறே?''

''என்னைக்கு உன்னை விட்டு நான் குளிச்சுருக் கேன்மா... வாவா.. சீக்கிரம்.''

''இதோ வருகிறேன் குட்டி!''

- இவைதான் எங்களின் வீட்டில் தினமும் நடக்கும் ஆனந்த அன்புப் பரிமாறல்..

அதிகாலை எழுந்து கோலம் போடுவது தொடங்கி... அனைத்திலும் அவர் பங்கு உண்டு. குளிப்பது, சமையல் செய்வது என எல்லா வேலையும் சேர்ந்துதான் செய்வோம். சமையல் நன்றாக இருந்தால்... கையைப் பிடித்து முத்தம் தருவார். அதற்காகவே நன்றாக சமைக்க ஆசை வரும் எனக்கு.

பாசத் தோழிகள் நடத்திய பலே வளைகாப்பு!

தினமும் எனக்கு புடவை கட்டி, தலை சீவி, பொட்டு வைக்கும் வேலையை அவர் எடுத்துக்கொள்ள... அவருக்கு தலைசீவி, பேன்ட், ஷர்ட் போடுவதிலிருந்து அனைத்து வேலைகளையும் நான் எடுத்துக் கொள்ள... ஒவ்வொரு நாளும் உற்சாகமே!

இதில் சின்ன மாற்றம் வந்து, அவசரமாக யாராவது கூப்பிடுகிறார்கள் என்று இதை மறந்தால்... உடனே கோபம் பொங்கி வரும் அவருக்கு. ரொம்ப பிகு செய்து கொண்டு பேசமாட்டார். ''டேய் கண்ணா, நீ பேசாமல் இருந்தால்... நான் சாப்பிட மாட்டேன்'' என்று லேசாக ஆரம்பித்தால் போதும்... உடனே வந்து சாப்பாடு போட்டு ஊட்டி விடுவார்.

இரவில் மடியில் படுக்க வைத்து... அவருக்கு நான் தாலாட்டு பாடுவேன். 'இந்த பச்சை கிளிக்கு ஒரு செவ்வந்தி தொட்டிலை கட்டி வைத்தேன்' என்று பாட... அவர் தழுவி ஆராதிக்க... அதற்கு ஈடு இணையேது.

அடிக்கடி உப்பு மூட்டை தூக்கி, கொஞ்சிவிட்டு... 'எப்படி உன் புருஷன்' என்று மகிழ்வார். ஆபீஸ் போகும்போது என்னை கட்டிப் பிடித்து கிஸ் கொடுத்து விட்டுத்தான் போவார். வந்தவுடன் இறுக்கி கட்டிப்பிடித்து முத்தமிட்டுத்தான் அடுத்த வேலையே! இதையெல்லாம், அவர் கடித்த கன்னங்களைக் கேட்டால் தெரியும். இப்படி ஒரு கணவனை எனக்குக் கொடுத்த இறைவனுக்கு தினமும் நன்றி சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.

இத்தகைய இனிய வாழ்க்கை ரொமான்ஸ்களை எல்லாம்... யாரிடமும் சொல்ல நினைத்ததுகூட இல்லை. ஆனால், 'உங்களின் ரொமான்ஸ் சீக்ரெட், பிற தம்பதிகளுக்கும் கைகொடுக்கட்டுமே!' என்று 'அவள் விகடன்' கேட்டுக் கொண்ட ஒரே காரணத்துக்காகவே ஓரளவுக்கு இங்கே பகிர்கிறேன்.

இப்படிக்கு,

-  திருச்சி வாசகி

ரொமான்ஸ் சீக்ரெட்

ரசிக்கத்தக்க உங்களின் ரொமான்ஸ்களை... பகிர்ந்து கொள்ளுங்களேன். சிறப்பான ரொமான்ஸ்களுக்கு எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர் பரிசாகக் காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய முகவரி: 'ரொமான்ஸ் சீக்ரெட்!’, அவள் விகடன், 757 அண்ணா சாலை, சென்னை - 600 002. இ-மெயிலிலும் அனுப்பலாம்: aval@vikatan.com

அனைத்துப் போட்டிகளும் இன்னும் மூன்று இதழ்களுக்குத் தொடரும். மொத்தப் பரிசு...

பாசத் தோழிகள் நடத்திய பலே வளைகாப்பு!

3 லட்சம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism