Published:Updated:

துபாய்ல ஷேக் இல்ல... எல்லாருமே தமிழருங்கதான்!

பொன்.விமலா

துபாய்ல ஷேக் இல்ல... எல்லாருமே தமிழருங்கதான்!

பொன்.விமலா

Published:Updated:

ந்த சுற்றுலா சிறப்பிதழுக்காக... ஊர், உலகம் சுற்றிய நம் வாசகிகள் சிலரின் சுற்றுலா அனுபவங்களைக் கேட்டோம்!

பானு ராமச்சந்திரன், பெங்களூரு: ''சமீபத்தில் தோழிகள் எல்லோரும் சேர்ந்து துபாய் போனோம். அங்க என்னோட உறவினர்கள் இருந்ததால, சுற்றுலா சுலபமா அமைஞ்சது. மொத்தம் 5 நாட்கள் டூர்ல... துபாய், ஷார்ஜா, அபுதாபி இந்த மூணு இடங்களையும் சுத்திப் பார்த்தோம். துபாயில் திரும்பும் திசையெல்லாம் பேரீச்சை மரங்கள்தான். அங்க ஷேக்ஸ் அதிகமா இருப்பாங்கனு நினைச்சேன். ஆனா, தமிழர்கள்தான் நிறைய இருக்காங்க. ஏதோ நம்மூர்ல இருக்கிற மாதிரியே இருக்கு.

துபாய் sheikh zayed mosque-க்கு போனோம். அவங்க தர்ற கறுப்பு அங்கியை போட்டுட்டுதான் உள்ள போக முடியும். முழுக்க மார்பிள்ல இழைச்சு இருந்தாங்க. முழுவதும் ஒரே பீஸால் ஆன, கலைநயமிக்க கார்பெட் ஒண்ணை sheikh zayed mosqueல விரிச்சி அசத்தியிருக்காங்க. அப்பப்பா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த ஊர்ல திடீர்னு எனக்கு காய்ச்சல் வந்து, அங்க இருக்குற ஆஸ்பிட்டலுக்கு போயிருந்தேன். 'ஊருவிட்டு ஊரு வந்து இப்படி ஆகிப்போச்சே... இங்க உள்ள டாக்டருங்க என்ன மாதிரி ஊசியை ஏத்தப் போறாங்களோ’னு பயந்துகிட்டேதான் ஆஸ்பத்திரியில கால் வெச்சேன். ஆனா... அங்க போனதுமே காய்ச்சலே பறந்துடுச்சு. அவ்வளவு சுத்தம், அழகு அந்த ஆஸ்பத்திரி! அபுதாபியில சூரியன் மறையும் காட்சி, வித்தியாசமான அனு பவம். துபாய் மார்கெட்டுக்குள்ள நுழைஞ்சா, நகைகள் புதுப்புது டிசைன்ல தகதகனு மின்னும். வாழ்க்கையில ஒருதரமாவது துபாய் போறது, சூப்பர் அனுபவம். என்ன நீங்க பிளான் போட்டுட்டீங்கதானே?!''

துபாய்ல ஷேக் இல்ல... எல்லாருமே தமிழருங்கதான்!

அந்தமானை பாருங்கள்... அழகு!

அமுதா பிரியதர்ஷினி, மதுரை: ''அஞ்சு மாசத்துக்கு முன்னவே அந்தமானுக்கு ஃபிளைட் டிக்கெட் புக் பண்ணினதால... போக, வர ரெண்டுக்குமே சேர்த்து ஒருத்தருக்கு 11,500 ரூபாய்தான். உடனுக்குடன் புக் பண்ணி போயிட்ட வர்றதா இருந்தா, 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல வந்துடும். இதை மனசுல குறிச்சுக்கோங்க.

5 மாசத்துக்கு முன்னயே புக் பண்ணி அந்தமான் போன எங்களை, அங்க இருக்கற ஃப்ரெண்ட்ஸ் ரிசீவ் பண்ணினாங்க. அங்க நாங்க பார்த்த முதல் இடம், அந்தமான் சிறைச்சாலை. 5 அடிக்கு 6 அடி அளவு ரூம். ரொம்ப உயரத்துல சின்னதா ஒரு வென்டிலேட்டர். அது வழியா வரும் வெளிச்சமும், காத்தும் ரொம்பவே குறைவு. துரு ஏறிக்கிடந்த இரும்புத் தட்டுகளைப் பார்த்தோம். இதுலதான் அந்தக் கால கைதிகளுக்கு சாப்பாடாம். அப்புறம் ஒரு மண் பானை வெச்சிருந்தாங்க. அதில்தான் கைதிகள் மலம் கழிக்கணுமாம்.

என்னோட கணவர் பேரு சுதந்திரராஜன். அவர் இந்த சிறையைப் பார்த்த பிறகு, 'என் பேர்ல இருக்கிற சுதந்திரத்துக்கான அர்த்தம்... இங்க வந்த பிறகுதான் முழுமையா புரிஞ்சது. இந்த சுதந்திரத்தை நமக்கு வாங்கிக் கொடுக்கறதுக்காக... இந்த சிறையிலயே பலியான இந்தியர்களோட தியாகத்துக்கு ஈடே இல்லை’னு சொல்லி கலங்கி நின்னார்.

துபாய்ல ஷேக் இல்ல... எல்லாருமே தமிழருங்கதான்!

அந்தமான் கடலோட அழகுக்கு இணையே இல்லை. திரும்பின பக்கமெல்லாம் தென்னை மரங்களும், பலவிதமான காட்டு மரங்களும் நிறைஞ்சிருக்கற கடற்கரை... மனசை கொள்ளையடிக்கும். கடல்ல தூரத்துல முதலைகள் நீந்துறதை நேரடியா பார்க்கறது... த்ரில்லிங் அனுபவம். குட்டிக் குட்டித் தீவுகள், பவழப் பாறைகள், படகு சவாரினு ஒரே கொண்டாட்டம்தான். டிஸ்கவரி சேனல்ல வர்ற மாதிரி படகுக்கு அடியில கூட்டம் கூட்டமா மீன்கள் நீந்துறதை பார்க்குறப்ப... நாமளும் மீன் குஞ்சுகளாவே மாறிடலாம்.

அதிகம் செலவு வைக்காத அந்தமான் சுற்றுலாவுக்கு, ஒரு தடவை போயிட்டுதான் வாங்களேன்!''

ஊட்டிக் குளிரு அம்மாடி!

விஜி, தேனி:

''ஊட்டிக்கு இந்த சம்மருக்குதான் முதல் முறையா போயிருந்தேன். குடும்பத்தோட போன... 5 நாள் டூர் அது. ஊட்டி, தமிழ்நாட்டோட சொர்க்கம். அந்தக் குளிர் பிரதேசத்துல இருந்து, இந்த வெயிலுக்கு திரும்பி வர மனசே இல்ல. அடுத்த மாசம் மலர் கண்காட்சி, பழ கண்காட்சினு ஊட்டியே களைகட்டிடும்.

துபாய்ல ஷேக் இல்ல... எல்லாருமே தமிழருங்கதான்!

ஊட்டிக்குப் போகும்போது, அரசாங்க கைடுகளை மட்டும் நாடுங்க. ஊட்டியில சுத்திப் பார்க்க நிறைய இடங்கள் இருக்கு. தென்னிந்தியாவிலேயே உயரமான சிகரமான தொட்டபெட்டா இங்கதான் இருக்கு. மலையோட உச்சியில நின்னுகிட்டு தரையைப் பார்க்குற சந்தோஷத்தை சொல்ல வார்த்தையே இல்லை. மலை முகடுகளைத் தடவிட்டே போகுற பனிப்படலத்தை பார்க்க பார்க்க ஆனந்தம்தான். வெயிலுக்கு இதமான குளிரும் பார்க்குற இடமெல்லாம் பச்சையும் பூக்களுமாய் இயற்கையை அள்ளிக் கொட்டி வெச்சிருக்குற இடம், ஊட்டி. தேயிலைத் தோட்டத்தில் அங்கங்க ஓடுற மான் கூட்டங்களையும் பறவைகளையும் கேமராவுல கேட்ச் பண்ணலாம். போற வழியில மேட்டுப்பாளையம் பிளாக்தண்டர் தீம் பார்க் போகலாம். ஆப்பிள், பேரிக்காய், காலிஃப்ளவர், மலைத்தேன், ஹோம் மேட் சாக்லேட், டீத்தூள்னு வாங்கிட்டு வந்து எனக்கு தெரிஞ்சவங்க எல்லாருக்கும் கொடுத்தேன்.

பட்ஜெட்டுக்குள்ள அழகானதோர் இடத்தை அனுபவிக்கணும்னா... ஊட்டி சரியான சாய்ஸ். சொந்த வாகனத்தில் போகும்போது, அனுபவமிக்க டிரைவரா கூட்டிட்டுப் போங்க!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism