''பெங்களூர்ல சாஃப்ட்வேர் இன்ஜினீயரா வேலை பாத்துட்டு இருந்தேன். போன வருஷம்தான் எனக்கு கல்யாணமாச்சி. ரெண்டு பேருக்குமே அமெரிக்காவுல இருக்கற ஷெல் கம்பெனியில வேலை கெடைச்சி, டெக்சாஸ் பகுதியில செட்டிலாகியாச்சி. இப்போ அழகான ஆண் குழந்தைக்கு நான் அம்மா. இந்த சந்தோஷத்தை அனுபவிச்சிட்டு இருக்கும்போதே, 'அவள் விகடன்' வாசகிகள் பக்கத்துக்கு என் போட்டோ தேர்வாகியிருக்கறது... போனஸ் சந்தோஷம்.
எங்களைப் பாக்கறதுக்காக என் அம்மா இங்க வந்திருக்காங்க. அவங்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ஃட்டா... அவள் விகடன், ஆனந்த விகடன் இதழ்களை ஆன்லைன்ல (இபுக்) படிக்க ஏற்பாடு செய்துகொடுத்தோம். ஆனா, எனக்குத் தெரியாம என்னோட போட்டோவை அனுப்பி வெச்சி, எங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துட்டாங்க அம்மா. சென்னை, பெங்களூரு, கோவைனு பல ஊர்லயும் இருக்கற சொந்தங்களுக்கும்... நட்புகளுக்கும் இந்த விஷயத்தைச் சொல்லிச் சொல்லி, போன் பில்லை ஏத்த ஆரம்பிச்சுட்டாங்க'' என சந்தோஷக் களிப்போடு சொன்னார் ஷில்பா.

