Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன !

அனுபவங்கள் பேசுகின்றன !

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அனுபவங்கள் பேசுகின்றன !

150

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வாசகிகள் பக்கம்

நன்றிக்கு ஒரு வீடியோ!

அனுபவங்கள் பேசுகின்றன !

திருமண வீடியோ என்றாலே... ஒரு குஷிதான். அதிலும், எட்டு ஆண்டுகளுக்கு முன் எடுத்த என் திருமண வீடியோவில், கலை ஆர்வம் மிகுந்த என் மாமனார் செய்த புதிய முயற்சிகள், இன்றும் என்னை ஆச்சர்யப்படுத்துகின்றன! சூப்பர் ஸ்டார் (Super Star) என குறிப்பிட்டு மணமகன் பெயர், சூப்பர் ஹீரோயின் (Super Heroine) எனக் குறிப்பிட்டு மணமகள் பெயர், புரொட்யூசர் (Producer) என பெண்ணின் அம்மா- அப்பா பெயர்கள், ஸ்டூடியோ (Studio) என மண்டபத்தின் பெயர், பப்ளிக் ரிலேஷன் (Public Relation)என கூடமாட உழைத்த நண்பர்களின் பெயர்கள் என திருமண வைபவத்துக்காக பாடுபட்ட அனைவரின் பெயர்களையும் சேர்த்தவர், முத்தாய்ப்பாக... ஸ்டோரி, ஸ்கிரீன்பிளே, டயலாக், டைரக்ஷன் (Story, Screenplay, Dialogue, Direction) என மாப்பிளையின் அப்பா, அம்மா பெயர்களையும் 'டைட்டில் கார்டு' போட்டு கலக்கிவிட்டார்.

திருமண வீடியோக்களை இப்படியும் வடிவமைப் பது, என்றென்றும் இனிய ஞாபகமாக இருப்பதோடு, நம் திருமணத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்     கும் நன்றி தெரிவித்தது போலவும் இருக்கும் தானே?!

- தீபா பாலச்சந்தர், மடிப்பாக்கம்

 கவனக்குறைவு கற்றுத் தந்த பாடம்!

அனுபவங்கள் பேசுகின்றன !

நான் கட்டிலில் உட்கார்ந்திருக்க, அருகில் நின்றிருந்த தோழி, கட்டிலின் நான்கு மூலைகளிலும் கொசுவலை கம்பி செருகுவதற்காக இருந்த துவாரங்களில், ஆள்காட்டி விரலை உள்ளே விட்டு, வெளியே எடுத்தபடி பேசிக் கொண்டிருந்தாள். திடீரென விரல் மாட்டிக் கொண்டுவிட, வலியில் துடித்தாள். எண்ணெய் விட்டு, சோப்புக் கரைசல் ஊற்றி என விரலை அதிலிருந்து விடுபடச் செய்வதற்குள் எனக்கும் என் கணவருக்கும் மூச்சு முட்டிவிட்டது. இப்போதும் யாராவது கட்டில் துவாரம், கதவில் பூட்டுப் போடும் இடம், சைக்கிள் பிரேக் ஒயர்களுக்கு இடையில் என விரல்களால் விளையாடினால், அந்தப் பழைய அவஸ்தை அனுபவத்தை மனதில் வைத்து, சம்பந்தபட்டவர்களை எச்சரிப்பது வழக்கமாகிவிட்டது எனக்கு. இப்போது உங்களையும்!

- கற்பகலட்சுமி பிரகலாதன், ஆதம்பாக்கம்

சாலையில் பதுங்கியிருக்கும் அபாயம்!

அனுபவங்கள் பேசுகின்றன !

விடுமுறையில் இருந்த பேரப் பிள்ளைகளுடன் சந்தோஷமாகப் பொழுதைக் கழிக்க சென்னை வந்தார் என் தோழியின் அம்மா. குழந்தைகளுடன் பீச்சுக்குச் சென்றவர், காரிலிருந்து இறங்கி நடைபாதையில் நடந்தபோது, யாரோ தண்ணீர் குடித்துவிட்டு வீசி எறிந்திருந்த காலி பாலிதீன் கவரில் கால் வைத்துவிட்டார். அவ்வளவுதான்... சடார் என வழுக்கி விழ, எலும்பு முறிவும், தலையில் பலத்த அடியும் ஏற்பட்டது அவருக்கு. ஓர் ஆண்டு படுத்த படுக்கையிலேயே கிடந்து சிகிச்சை எடுக்கும் அளவுக்கு பலத்த அடி. அப்படியும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் போக, இந்த மாதம் மொத்தமாக விடை பெற்றுச் சென்றுவிட்டார். பேரக் குழந்தைகளுடன் பேசி மகிழ வந்தவருக்கு ஏற்பட்ட இந்த அவலத்துக்குக் காரணம், அந்த பாலிதீன் பாக்கெட்டை குப்பைத் தொட்டியில் போடாமல் நடைபாதையில் வீசி விட்டுப் போன யாரோ ஒருவரின் அலட்சியம், சமூக அக்கறையின்மை!

அந்த அலட்சியம் நமக்கு இல்லாமல் இருப்பதுடன், சாலையில் கிடக்கும் இதுபோன்ற ஆபத்துகளை குப்பைத்தொட்டியில் சேர்க்கும் அக்கறையையும் சுவீகரிப்போம்!

   - இ.டி.ஹேமமாலினி, சென்னை-53

 ஊரு விட்டு ஊரு வந்து..!

அனுபவங்கள் பேசுகின்றன !

சமீபத்தில் என் தோழிக்குக் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பார்க்க உடனடியாகக் கிளம்பிய நாங்கள், தோழியின் ஊருக்குச் சென்று இறங்கினோம். பேருந்து நிலையத்திலிருந்தபடியே தோழியின் கணவருக்கு போன் செய்து மருத்துவமனை எங்கிருக்கிறது என விசாரித்தோம். பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே இருப்பதாகக் கூறி, மருத்துவமனையின் பெயரையும் கூறினார். விசாரித்தால், 'இப்படி ஒரு மருத்துவமனை இந்த ஊரிலேயே இல்லை' என்றார்கள். குழம்பிப் போய் மறுபடியும் தோழியின் கணவருக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னால்... அவர் ஒரேயடியாகக் குழம்பிப் போனார். குழப்பத்துக்குக் காரணமே... எங்களுடைய தவறுதான். 'பெண்ணின் அம்மா ஊரில்தான் பிரசவம் பார்ப்பார்கள்’ என்கிற பழைய பழக்கத்தின் மீதான நம்பிக்கையுடன் நாங்கள் அவளுடைய ஊரில் இறங்கியிருக்க... அவர்களோ... கணவனின் ஊரிலேயே பிரசவத்தை வைத்துக் கொண்டுவிட்டார்கள்.

- முனீஸ்மாலா உத்தண்டராமன், சிவகாசி