Election bannerElection banner
Published:Updated:

நூற்றாண்டு விழா கோலாகலம் சரி... ஆனால், பொலிவிழந்து கிடக்கிறதே எம்.ஜி.ஆர் சமாதி!?

நூற்றாண்டு விழா கோலாகலம் சரி... ஆனால்,  பொலிவிழந்து கிடக்கிறதே  எம்.ஜி.ஆர் சமாதி!?
நூற்றாண்டு விழா கோலாகலம் சரி... ஆனால், பொலிவிழந்து கிடக்கிறதே எம்.ஜி.ஆர் சமாதி!?

நூற்றாண்டு விழா கோலாகலம் சரி... ஆனால், பொலிவிழந்து கிடக்கிறதே எம்.ஜி.ஆர் சமாதி!?

'எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும்' என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. தமிழகத்தின் பல பகுதிகளில் அ.தி.மு.க-வின் சார்பில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டும் வருகிறது. அ.தி.மு.க சார்பில், ஒரு விழா எடுக்கிறார்கள் என்றால், ஃப்ளெக்ஸ், பேனர், அலங்கார விளக்குகள் என அசத்துவது வழக்கம். சாதாரண விழாவுக்கே தெறிக்கவிடுவார்கள். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்றால் சொல்லவா வேண்டும்? எப்படியும் அவர் சமாதியை கோலாகலப்படுத்தியிருப்பார்கள் என்ற எண்ணத்தில், மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதியைப் பார்வையிட்டபோது நமக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. ஜெயலலிதா நிர்வகித்துவந்த அ.தி.மு.க வேறு, இப்போதிருக்கும் அ.தி.மு.க வேறு என்பதை நிரூபித்துவிட்டார்கள் தற்போதைய அ.தி.மு.க -வினர்!

ஆம்.... எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்பது வெறும் பெயரளவுக்குத்தான் என்பதை உணர்த்தும்விதமாக இருக்கிறது எம்.ஜி.ஆர் நினைவிடம். ஒரு ஃப்ளெக்ஸ் இல்லை, பேனர் இல்லை, அலங்கார விளக்குகள் இல்லை. அவ்வளவு ஏன்? எம்.ஜி.ஆர். சமாதி வளாகங்களைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்ற அடிப்படைகூட இல்லை. சில மாதங்களுக்கு முன்பு வரை, எம்.ஜி.ஆர் சமாதிக்குள் செல்லும் பொதுமக்கள் அங்கே சமாதியைத் தொட்டு வணங்கிவிட்டு வருவார்கள். ஆனால் தற்போது எம்.ஜி.ஆர் சமாதியைச் சுற்றிலும் தடுப்புக் கம்பிகள் வைத்து மக்கள் செல்லாதவாறு தடுத்துள்ளனர். சில வாரங்கள் முன்பு வரையிலும் ஜெயலலிதாவின் சமாதியை முதலில் பார்த்தபின்பே எம்.ஜி.ஆரின் சமாதிக்கு மக்கள் வரும் வகையில், தடுப்புக் கம்பிகள் வைத்திருந்தனர். தற்போது அவை எம்.ஜி.ஆர் சமாதியைச் சுற்றி வைக்கப்பட்டுள்ளன... இதுதான் வித்தியாசம். எம்.ஜி.ஆர் சமாதியைப் பார்வையிட வந்த பார்வையாளர்களிடம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைப் பற்றிக் கேட்டோம்.

"எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழா கொண்டாடப்படுறதா செய்தியில்தான் படிக்கிறோம். ஆனா அப்படி எந்தவொரு அடையாளமும் சமாதியில் காணோம். ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது கூழைக் கும்பிடு போட்ட அரசியல்வாதிகள், தற்போது எம்.ஜி.ஆர் சமாதியையும் மறந்துவிட்டனர்; ஜெயலலிதாவின் சமாதியையும் மறந்துவிட்டனர். இதுவே ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே எம்.ஜி.ஆரின் சமாதியை அழகுப்படுத்தும் வேலையை அ.தி.மு.க-வினர் செய்யத் தொடங்கியிருப்பார்கள். ஆனால், இப்போது கொஞ்சம் பூக்களை மட்டும் சமாதியில் போட்டு வைத்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் சமாதி ஒரு சுற்றுலாத் தளம். இதை தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட வருகிறார்கள். அந்தவகையில், கட்சிக்காக இல்லையென்றாலும் ஒரு சுற்றுலாத் தளம் என்ற நினைப்பிலாவது அ.தி.மு.க-வினர் அழகுபடுத்தியிருக்கலாம். தற்போதைய அ.தி.மு.க-வினருக்கு அவர்களின் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்கான வேலையை செய்வதற்கே நேரம் கிடைக்கவில்லை. அப்புறம் எப்படி இவர்கள் எம்.ஜி.ஆர். சமாதி, ஜெயலலிதா சமாதியை நினைவில் வைத்துக்கொள்வார்கள்?" என்றனர் ஆதங்கத்தோடு.

எம்.ஜி.ஆர் சமாதி நிலைமையே இப்படி இருக்க... ''எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, தமிழ்நாடெங்கும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது'' என்று அ.தி.மு.க-வினர் பெருமையோடு சொல்லிவருவதை என்னவென்று சொல்ல...?

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு