Published:Updated:

தினம் தினம் தீபாவளி...

இது ஒரு போனஸ் கொண்டாட்டம்! ந.ஆஷிகா, படங்கள்: பா.காளிமுத்து, தே.தீட்ஷித், இரா.யோகேஷ்வரன் 

தினம் தினம் தீபாவளி...

இது ஒரு போனஸ் கொண்டாட்டம்! ந.ஆஷிகா, படங்கள்: பா.காளிமுத்து, தே.தீட்ஷித், இரா.யோகேஷ்வரன் 

Published:Updated:

கொண்டாட்டங்களும் செலவுகளும் பிரிக்க முடியாதவை. அதனால்தான், பண்டிகை மாதங்களில் வழங்கப்படுகிறது போனஸ். ஒவ்வொரு வயதினரின் போனஸ் தேவையும், செலவுகளும் ஒவ்வொருவிதமாக இருக்கிறது. அதைப் பகிர்கிறார்கள், வெவ்வேறு வயதுப் பெண்கள் இங்கே..!

பிரவீணா கார்த்திக், புதுமணப்பெண்

''எங்களுக்கு இது தலைதீபாவளி. டிரெஸ் எடுக்கிற செலவெல்லாம் அம்மா வீட்டோடது. என் கணவரோட போனஸ் பணத்துல, அன்லிமிட்டெடா பட்டாசு வாங்கணும். எனக்கு அண்ணன், தம்பி இல்லை. அப்பாவுக்கும் பட்டாசு வெடிக்கிறதில் ஆர்வம் இல்ல. அதனால, வாசல் எல்லாம் பேப்பர் குப்பையாகிற அளவுக்கு பட்டாசு வெடிக்கணும் என்ற என் ஆசை இதுவரை நிறைவேறவே இல்ல. இந்த வருஷம் என் வீட்டுக்காரரை விடிய விடிய பட்டாசு வெடிக்கச் சொல்லி நான் வேடிக்கை பார்க்கணும்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தினம் தினம் தீபாவளி...

ரேகா முரளி, குடும்பத் தலைவி

''தீபாவளிக்கு மூணு மாசத்துக்கு முன்னயிருந்தே செலவுகளைக் குறைச்சு, சேமிக்க ஆரம்பிச்சிடுவேன். போனஸ் பணத்துல எல்லா செலவுகளையும் ஈடுகட்ட முடியுமா என்ன? ரெண்டு குழந்தைங்களும் இப்போவே வெளிய போகும்போதெல்லாம், 'அம்மா, தீபாவளிக்கு அந்த டிரெஸ் வாங்குவோம், இந்த வெடி வாங்குவோம்’னு கையைக் காமிச்சிட்டே வர்றாங்க. சில அநாவசிய செலவுகளும் இன்றைய வாழ்க்கை முறையில அவசியமா மாறிப்போச்சு. அவரோட போனஸ் பணம் தீபாவளி செலவுகளுக்கு கொஞ்சம் சப்போர்ட் பண்ணும்... அவ்ளோதான்!''

பவித்ரா, தனியார் நிறுவன ஊழியர்

''இப்போதைக்கு என் செலவுகளை எல்லாம் வீட்டில் பார்த்துக்கிறதால, எனக்குனு பொறுப்பான செலவுகள் எதுவும் கிடையாது. ஒவ்வொரு முறையும், வரப்போற போனஸ்ல அதைப் பண்ணணும், இதைப் பண்ணணும்னு ஏதாவது ஒரு சேமிப்புத் திட்டம் வெச்சிருப்பேன். ஆனா, போனஸ் கையில வந்தவுடனே அதெப்படிதான் கற்பூரமா கரைஞ்சு போயிடுமோ தெரியலை! சமீபத்தில்தான் என் அண்ணனுக்கு குழந்தை பிறந்தது. தம்பி பாப்பாவுக்கு தங்க மோதிரம் வாங்கித் தரணும்ங்கிறது, என்னோட இந்த வருஷ போனஸ் திட்டம். பார்க்கலாம்!''  

தினம் தினம் தீபாவளி...

சுந்தரி கிருஷ்ணமூர்த்தி, பணி ஓய்வு பெற மூத்த குடிமகள்

''என் கணவர் வேலை செய்த காலத்துல போனஸ் எல்லாம் கிடையாது. முன்ன எல்லாம் எப்போ தீபாவளி வரும்னு வருஷம் முழுக்கக் காத்திருப்போம். இப்போ தினம் தினம் தீபாவளி மாதிரிதானே கொண்டாடுறாங்க? 12 மாதங்களும் புது டிரெஸ் வாங்குறாங்க. வாரம் ஒருமுறையாச்சும் வெளிய போய் சாப்பிடுறாங்க. இப்போ இருக்கிற குழந்தைகளுக்கு ஆசைப்பட்டது அன்னிக்கே கிடைச்சிடுது. அதனால, இனிப்பு, பட்டாசு, புத்தாடை, புதுப்படம்னு, தீபாவளி அவங்களுக்கு இன்னுமொரு கொண்டாட்டம்... அவ்வளவுதான். பேரன், பேத்திகளுக்கு புது டிரெஸ், வீட்ல குபேர பூஜை, லட்சுமி பூஜை, வைபவ பூஜை, உறவுகளுக்கு இனிப்பு... இதுதான் எங்க தீபாவளி. இதுக்கு என் கணவரோட பென்ஷன் பணம் போதும் எங்களுக்கு!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism