Published:Updated:

கொண்டாட்டம்... திண்டாட்டம்!

ஹா.தௌஜிதா பானு, ஜெ.பாரதி, கோ.க.தினேஷ்  , ரா.கீர்த்திகா  படங்கள்: கா.முரளி, ச.வெங்கடேசன், ஈ.ஜெ.நந்தகுமார்

கொண்டாட்டம்... திண்டாட்டம்!

ஹா.தௌஜிதா பானு, ஜெ.பாரதி, கோ.க.தினேஷ்  , ரா.கீர்த்திகா  படங்கள்: கா.முரளி, ச.வெங்கடேசன், ஈ.ஜெ.நந்தகுமார்

Published:Updated:

ருக்கே கொண்டாட்டமான தீபாவளி தினத்திலும், ஓயாமல் உழைக்கும் உழைப்பாளிகளின் குடும்பங்களைச் சந்தித்தோம்!

திருவண்ணாமலையைச் சேர்ந்த பொன்னியம்மாவின் கணவர் செல்வமணி, தீய¬ணைப்புப் படையின் முதன்மை சேவகர்.

''ஒவ்வொரு நாளும் இவர் வேலைக்குப் போயிட்டு வரும்போது, கடவுளை வேண்டிதான் காத்துட்டு இருப்பேன். அதுவும் தீபாவளி அன்னிக்கு இவர் வீட்டில் இல்லைங்கற கவலையைவிட, ஊருல யாரும் எந்த விபத்துலயும் சிக்கியிருக்கக்கூடாது... அவர் பத்திரமா வீடு வந்து சேர்ந்துடணும் இதுமாதிரியான தவிப்புதான் அதிகம் இருக்கும். விடாம நியூஸ் சேனல்ல, எங்கயாச்சும், ஏதாச்சும் தீ விபத்தானு பார்த்துட்டே இருப்பேன். தீபாவளிக்கு அவர் எங்ககூட இருக்கணும்னு இதுவரை நானோ, என் பசங்களோ அடம் பிடிச்சதில்ல!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொண்டாட்டம்... திண்டாட்டம்!

துரையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் தண்டீஸ்வரனின் மனைவி, சோனியா... ''இது எங்களோட ரெண்டாவது தீபாவளி. திருமணத்துக்கு அப்புறம்தான் போலீஸ் வேலை எத்தனை டென்ஷனானதுனு எனக்குப் புரிஞ்சது. கல்யாணத்துக்கு அப்புறம் தாலி பெருக்கும் ஃபங்ஷன்ல இருந்து எந்த விசேஷத்துக்கும் அவர் வீட்டுல இருந்ததில்ல. ஞாயிற்றுக்கிழமைகூட டியூட்டினு கிளம்பிடுவார். சிலசமயம் அவர் ஆசைப்பட்டுக் கேட்டாரேனு ஏதாச்சும் சமைச்சு வெச்சிருப்பேன். அதை ரசிச்சு சாப்பிடக்கூட அவகாசம் இல்லாம, சட்டுனு யூனிஃபார்ம் மாட்டிட்டு போயிடுவார். தினப் பொழுதுகளே இப்படி இருக்கும்போது, தீபாவளியைப் பத்தி கேட்கவா வேணும்? போன வருஷம் தலை தீபாவளிக்கு புதுப் படத்துக்குப் போகலாம்னு, டிக்கெட் எல்லாம் கூட புக் பண்ணியாச்சு. கடைசி நேரத்துல டியூட்டி போட்டுட்டாங்கனு 'டாட்டா’ காட்டிட்டுப் போயிட்டார். அதனால இந்த வருஷம் தீபாவளிக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாம, நானே அவருக்கு டாட்டா காட்டத் தயாராகிட்டேன்!'' என்கிறார் தன் கணவரைப் பார்த்துச் சிரித்தபடி!

''இந்த வருஷ தீபாவளிக்காச்சும், எங்க வீட்டு ஆம்பளைங்க வீட்டுல இருப்பாங்களானுதான் ஏங்கிட்டு இருக்கோம்!'' என்கிறார்கள், வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த மாமியார் மல்லிகா - மருமகள் கௌரி!

கொண்டாட்டம்... திண்டாட்டம்!

''எங்க பரம்பரை தொழிலான மாவுமில்லை, வீட்டுக்காரர் நரசிம்மன் பார்த்துக்கிறார். ஐந்தாவது தலைமுறையா பையனும் இப்ப இதுல இறங்கியாச்சு. பெரிய ஹோட்டல்கள், ஸ்வீட் ஸ்டால்கள் எல்லாம் எங்க 'பால கணேசர்’ மாவு மில்லுலதான் எல்லா பொருட்களையும் அரைப்பாங்க. நல்ல நாளு பெரிய நாளுனா... அவரும், மகனும் வீட்டுல இருக்க முடியாததுதான் பெரும்குறை. கேட்டா, '1913-ல் ஆரம்பிச்சது இந்த மில். அவ்வளவு பாரம்பர்யமிக்க மில்லுக்கு, நாள், கிழமை பார்க்காத உழைப்பை என் பூட்டன், பாட்டன் கொடுத்ததாலதான் இன்னிக்கு நாம கொடிகட்டி பறக்க முடிஞ்சுருக்கு’னு சொல்லி வாயை அடைச்சுடுவாரு. மருமகளுக்கும் இது பழகிப்போச்சு!'' என்று மல்லிகா நிறுத்த,

''கல்யாணமான இந்த 15 வருஷத்துல, தலை தீபாவளியில இருந்து எல்லா தீபாவளிக்கும் மில்லுலதான் இருப்பாரு. பூஜை சமயத்துல கடைக்கு போன் போட்டு ரிசீவரை ஆன்ல வெச்சுட்டு,

கொண்டாட்டம்... திண்டாட்டம்!

மாமாவையும், அவரையும் பக்கத்துல நிக்க சொல்லி, வீட்டுல சாமிக்கு படையல் போட்டு சந்தோஷப்பட்டுக்குவோம்!'' என்கிறார் கௌரி ஏக்கமாக!

விருதாச்சலத்தைச் சேர்ந்த ராஜலட்சுமியின் கணவர் ராஜாராமன், அரசுப் பேருந்து டிரைவர். ''எங்களுக்கு கல்யாணமாகி 25 வருஷம் ஆச்சுங்க. எங்களுக்கு ரெண்டு பையனுங்க. கல்யாணமாகி இத்தனை வருஷத்துல ஒரு வருஷம்கூட தீபாவளி அன்னிக்கு வீட்டுல இருந்ததில்ல. சின்ன வயசுல 'அப்பா எப்போம்மா வருவாங்க அப்பா எப்போம்மா வருவாங்க’னு தீபாவளி நாள் முழுக்க பசங்க ஏக்கமா கேட்டுட்டே இருப்பாங்க. வளர வளர விஷயத்தைப் புரிஞ்சுக்கிட்டாங்க. ஆனா, அவரு புரிஞ்சுக்கவே இல்ல. கேட்டா, 'தீபாவளி அன்னிக்கு வேலைக்குப் போனா கூடுதல் சம்பளம்'னு சொல்றாரு. சந்தோஷம் முக்கியமா, காசு முக்கியமா?

இதனால, தீபாவளியன்னிக்கு ஸ்பெஷலா எதுவுமே சமைக்கிறதில்ல. 'வெளியில ஒரு டீக்கடைகூட திறந்திருக்காதே... இந்த மனுஷன் என்ன பண்ணுவாரோ’னு மனசு தவிச்சுக்கிட்டே இருக்கும். ஒரு தீபாவளிக்குக்கூட புது சேலை கட்டுனது இல்ல. எல்லாத்துக்குமா சேர்த்து வெச்சு, ரிட்டயர்மென்ட்டுக்கு அப்புறம் வர்ற ஒவ்வொரு தீபாவளியையும் கொண்டாடித் தீர்த்துடணும்!'' என்கிறார் ராஜலட்சுமி ஏக்கத்தை வென்ற புன்னகையுடன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism