Published:Updated:

பட்... படார்... பாதுகாப்பு!

தொகுப்பு: கே.அபிநயா, படம்: தே.தீட்ஷித்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

னம் மயக்கும் புது டிரெஸ், நாவுக்கு ருசியாக பலகாரங்கள் என்று தீபாவளியை உற்சாகமாக கொண்டாட வேண்டும் என்பது சரிதான். அதேசமயம், பட்டாசு வெடிப்பதை பாதுகாப்பான முறையில் செய்ய வேண்டும் என்பதும் அவசியம்தானே?! இந்த தீபஒளி திருநாளில் உள்ளத்தில் நிலைநிறுத்த வேண்டிய, பாதுகாப்பு தொடர்பான டிப்ஸ்களை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை துணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன்.

பட்... படார்... பாதுகாப்பு!

• தீபாவளி கொண்டாட்டத்தில், சமூக அக்கறையும் இருக்க வேண்டும். வயதானவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள், குழந்தைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், இரவு 10 மணிக்கு மேல், பட்டாசு வெடிக்கக் கூடாது.

• குழந்தைகள் வெடி வெடிக்கும்போது, தொய்வில்லாத உடை அணிந்திருப்பதுடன், பருத்தி ஆடை அணிந்திருப்பதும் அவசியம். பெரியவர்கள் கண் பார்வையிலேயே பட்டாசுகளை வெடிக்கச் சொல்ல வும்.

• வீட்டின் வாசலில், தெருக்களில், ரோட்டில் வெடி வைப்பதைவிட... குடிசைப் பகுதியற்ற, மின்சார வொயர் இல்லாத திறந்தவெளிகளில், மைதானங்களில் வெடிப்பது பாதுகாப்பானது. வெடிக்கும்போது காலில் செருப்பு போட்டுக்கொள்ளவும். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும், வெடி வெடித்த பின் கைகளைக் கழுவுவதை, மறக்காமல் செய்ய வேண்டும்.

• புதுவகை வெடிகள் வெடிக்கும்போது, அந்த வெடி பாக்ஸின் பின் எழுதி இருக்கும் வழிகாட்டலை கட்டாயம் படிக்க வேண்டும். இல்லையெனில், வெடிக்கத் தெரியாமல் வெடித்து விபரீதம் ஏற்படலாம்.

• வெடி வைக்க, தீப்பெட்டி பயன்படுத்தக் கூடாது. நீளமான ஊதுபத்தி நல்ல சாய்ஸ். சிலர் ஒரு த்ரில்லுக்காக வெடியை கையில் பற்றவைத்து தூக்கிப் போடுவார்கள். சிலநேரம் அது கையிலேயே வெடித்துவிடும் ஆபத்து உள்ளது... எச்சரிக்கை!

• ராக்கெட் போன்ற வெடிகள், எவ்வளவு தூரம் வரை செல்லும், எந்தப் பகுதியில் விழும் என்பது சில நேரங்களில் யூகத்தை மீறிவிடும். ஒருவேளை அவை கூரை மீதோ, டிரான்ஸ்ஃபார்மர் மீதோ விழுந்து விபத்து ஏற்படலாம். எனவே, வானில் வெடிக்கும் ரக வெடிகளை தவிர்த்துவிடவும்.

பட்... படார்... பாதுகாப்பு!

• வெடித்த பட்டாசுகளில் சில நேரங்களில் தீப்பொறி இருந்து, அதை குப்பையில் வீசினால், தீவிபத்து ஏற்படலாம். எனவே, வெடிக்கும் இடத்தில், ஒரு வாளி தண்ணீரை வைத்திருக்கவும். வெடித்த, பாதி வெடித்த வெடிகளை இதன் அருகில் போட்டு தண்ணீர்விட்டு அணைக்கவும். உடலில் ஒருவேளை தீப்பொறி பட்டால், உடனடியாக அணைக்க இந்த தண்ணீர் உதவும்.

• தீப்புண் ஏற்பட்டால், முதலில் குளிர்ந்த தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். இது, காயம் தீவிரமடையாமல் காக்கும். பின்னர் முதலுதவி அளிக்க வேண்டும். ஒருவேளை ஆடையில் தீப்பற்றி உடலில் பிடித்தால், 'ஸ்டாப்-ட்ராப்-ரோல்' (Stop - Drop - Roll) முறையைப் பின்பற்ற வேண்டும். அதாவது, ஓடாமல், நிற்காமல், தரையில் படுத்து உருள வேண்டும். இது நம்மை நாமே தற்காத்துக்கொள்ளும் முறை.

பட்... படார்... பாதுகாப்பு!

• குழந்தைகள், வெடிக்காத பட்டாசுகளில் உள்ள மருந்தை வெளியே எடுத்து, சேமித்து, பற்ற வைப்பார்கள். அந்த மருந்து, சுவாசம் அல்லது வாய் வழியாக உடலில் சேர்ந்தால் பிரச்னை. மேலும், கையாளும்போது அந்த மருந்து வெடிக்க வும் வாய்ப்புள்ளது.

• பட்டாசை முன்கூட்டியே வாங்கி வீட்டில் வைத்தால், சில நேரங்களில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், தீபாவளிக்கு முந்தைய நாள் வாங்கி, புழக்கம் இல்லாத இடத்தில் வைக்கவும். அதையும்கூட சின்ன வெடி, பெரிய வெடி எனப் பிரித்து வைக்கலாம்.

• பட்டாசு வைத்திருக்கும் இடத்தில் விளக்கு, புகை, ஊதுபத்தி, தீப்பெட்டி, பாதுகாப்பில்லாத நிலையில் இருக்கும் வொயர்கள் என்று எந்த தீப்பொறிக்கும் வாய்ப்பில்லாது இருக்க வேண்டும். மிகுந்து போகும் வெடியை அடுத்த பண்டிகைக்கு என எடுத்து வைக்காமல், மறுநாளாவது வெடித்துத் தீர்த்துவிடவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு