Published:Updated:

'சதுரங்க வேட்டை’... ரங்கோலி வேட்டை!’

பொன்.விமலா, படங்கள்: எம்.உசேன்

'சதுரங்க வேட்டை’... ரங்கோலி வேட்டை!’

பொன்.விமலா, படங்கள்: எம்.உசேன்

Published:Updated:

''எங்க ஊர் கொச்சின்ல கோலம்னாவே, எங்க தெருவுல என்னோட ராஜ்யம்தான். ஓணம் பண்டிகை வந்துட்டா... 'நீயா, நானா'னு அத்தப்பூ கோலம் போட்டு அசத்திடுவோம். யார் வீட்டுல அழகான பூக்களை வெச்சு பூக்கோலம் போடுறாங்கனு ஃப்ரெண்ட்ஸ்க்குள்ள கலவரமே நடக்கும். அக்கம்பக்கத்து வீடுகளுக்கெல்லாம் ராத்திரியோட ராத்திரியா நுழைஞ்சு, விதம்விதமான பூக்களையெல்லாம் கொண்டுவந்து குவிச்சு, ’ஓணம் ராணி’ பட்டத்தை வாங்கிடுவேன். ஆனா, ரங்கோலி கோலம் போட்டு பழக்கமில்லை.

'சதுரங்க வேட்டை’... ரங்கோலி வேட்டை!’

படத்துல ஷூட்டிங்குக்காக கோலம் போட்டு கலர் பொடியைத் தூவி பாக்கும்போது, 'ஆஹா, இவ்ளோ அழகா இருக்கே இந்த கோலம்'னு மனசுக்குள்ளவே வரைஞ்சு பாத்துப்பேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா கத்துக்க ஆரம்பிச்சுட்டேன். கொஞ்சம் போல வரைய தெரிஞ்சா போதும்... பிறகு, நம்மளோட கற்பனையை அள்ளிவிட்டு ஈஸியா ரங்கோலி வரைஞ்சிடலாம். இந்த ரங்கோலி பயிற்சியும் ஒரு வகையில என்னோட பியூட்டி சீக்ரெட். உஷ்ஷ்ஷ், யாருகிட்டயும் சொல்லிடாதீங்க!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- கண்கள் சிமிட்டிக்கொண்டே தீபாவளிக்கான ஸ்பெஷல் கோலம் போட்டதுடன், அகல் தீபத்தையும் ஏற்றிவைக்கிறார் 'சதுரங்க வேட்டை' நாயகி இஷாரா.

அட, ஒளியிலே தெரிவது... தேவதையோ!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism