Published:Updated:

கலகல கலாட்டா!

பொன்.விமலா

கலகல கலாட்டா!

பொன்.விமலா

Published:Updated:

'தீபாவளி வந்துட்டாலே, தீபாவளி பத்தின மறக்க முடியாத நிகழ்வுகளைத்தான் கேக்கணுமா என்ன? ஒரு சேஞ்சுக்காக... உங்க கல்யாண கலகல கலாட்டா ஏதாச்சும் இருந்தா சொல்லுங்களேன்...' என்று இந்த பிரபலங்களிடம் கேட்டோம். இதோ, அவர்களின் கலகல கலாட்டாக்கள்...

சிகரெட் முடிச்சுகள்!

பாக்யராஜ்: ''எம்.ஜி.ஆர், சிவாஜினு குடும்பத்தோட வந்து வாழ்த்தின எங்க கல்யாணத்துல, மறக்க முடியாத கலாட்டா ஒண்ணு இருக்கு. பூர்ணிமாவோட சொந்தக்காரப் பொண்ணு மும்பையில இருந்து வந்திருந்துச்சு. துறுதுறுனு ஜோக் அடிச்சுட்டே திரிஞ்சுச்சு. எனக்கு அப்போ சிகரெட் பிடிக்கிற பழக்கம் உண்டு. ஆனா, அன்னிய தினம் சிகரெட் அடிக்க முடியாம தவியா தவிச்சிட்டு இருந்த நான், கிடைச்ச கேப்ல பாத்ரூமுக்குள்ள போய் தம்மடிச்சுட்டு வந்துடலாம்னு பார்த்தா, கையில சிகரெட் இல்ல. தலையைப் பிய்ச்சுக்கிட்டு உட்கார்ந்துட்டேன். சட்டுனு முன்ன வந்து நின்ன அந்த மும்பை பொண்ணு, 'என்ன சிகரெட் வேணுமா?'னு கேட்க, தூக்கி வாரிப்போட்டுச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கலகல கலாட்டா!

'அட, எங்கிட்ட இல்லீங்க. யார்கிட்டயாச்சும் வாங்கிட்டு வர்றேன்’னு கொஞ்சம் தள்ளி சிகரெட் பிடிச்சுட்டு இருந்த என் குருநாதர் பாரதிராஜாகிட்ட போயி நின்னுடுச்சு அந்தப் பொண்ணு. 'இதென்னடா வம்பா போச்சு'னு ஒளிஞ்சுகிட்டே வேடிக்கை பார்த்தேன். 'ஒரு சிகரெட் தர முடியுமா?’னு இந்தப் பொண்ணு கேட்க, 'என்னது, சிகரெட் வேணுமா?’னு அதிர்ச்சியா கேட்டாரு குருநாதர். 'எனக்கு இல்ல... மாப்பிள்ளைக்கு’னு போட்டு உடைக்க, மொத்தமா நான் பணால். நான் சிகரெட் பிடிக்கிற விஷயம் அவருக்கு தெரியவே தெரியாது. இந்தப் பொண்ணு புண்ணியத்தால அவருக்கு மட்டுமில்ல, கல்யாணத்துக்கு வந்திருந்த பலருக்கும் தெரிஞ்சு, எல்லாரும் சிரிக்க, நான் அசடு வழிய... நானும் பூர்ணிமாவும் இப்பவும் அடிக்கடி நினைச்சு சிரிக்கிற கலாட்டா இது!''

வணக்கம் லவ்!

கிருத்திகா உதயநிதி ஸ்டாலின்: ''நானும் அவரும் ஏழு வருஷமா லவ் பண்ணிதான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். நாங்க காதலிச்ச சமயத்துல அவர் 'ஸ்நோ பௌலிங்’ நடத்திட்டு இருந்தாரு. நான், என் அத்தை, இன்னும் சில சொந்தக்காரங்கனு ஒருநாள் அங்க போக வேண்டியதா போச்சு. நாங்க லவ் பண்ணிட்டிருந்த விஷயம் எங்க வீட்டுக்குத் தெரியாது. ஆனாலும், அவரும் நானும் பேசிக்காமலே கம்யூனிகேட் பண்ணினதை எப்படியோ அத்தை கவனிச்சுட்டாங்க. 'நல்லவேளை... அத்தைகிட்ட மாட்டிக்காம தப்பிச்சுடோம்’னு பெருமூச்சு விட்டுட்டு வீட்டுக்கு வந்தேன். ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம், 'எனக்கு அன்னிக்கே தெரியும் உனக்கும் அந்தப் பையனுக்கும் சம்திங் சம்திங்’னு அத்தை சொன்னப்போ,  நாங்க ரகசியமா லவ் பண்ணின சாமர்த்தியத்தை (!) நினைச்சு, அவருக்கும் எனக்கும் ஒரே சிரிப்புதான்!''

கலகல கலாட்டா!

அடி ஆ(ர்)த்தீ!

ஆர்த்தி: ''எங்க கல்யாணம் கேரளா, குருவாயூர் கோயில்ல நடந்துச்சு. அன்னிக்கு 53 திருமணங்கள் முடிஞ்சு, 54-வது ஜோடியா நாங்க வரிசையில நின்னோம். அத்தனை கல்யாணத்தையும் நடத்தினதுல புரோகிதர் ரொம்ப டயர்டு. மந்திரம்கூட சொல்ல முடியல. 'மந்திரமெல்லாம் இருக்கட்டும், தாலியைக் கட்டச் சொல்லுங்க’னு நான் சவுண்ட்விட, தாலியை எடுத்து கணேஷ் கையில கொடுத்தார். எப்படிக் கட்டுறதுனு இவர் புரோகிதர்கிட்டயே கேட்க, அவரோ என் கழுத்துவரைக்கும் தாலியைக் கொண்டு வந்து சொல்லிக் கொடுக்க, 'விட்டா நீங்களே கட்டிடுவீங்க போல’னு புரோகிதரை நான் கலாய்க்க, ஒரே கலகலதான்!

ஆசீர்வாதம் வாங்கிக்க சொல்லி பெரியவங்க வரிசையா நின்னுட்டு இருந்தாங்க. 'ஆத்தாடி... இந்த உடம்பை வெச்சுக்கிட்டு குனிஞ்சு, நிமிர முடியாது. நான் அப்படியே குப்புற படுத்துக்கிறேன். எல்லோரும் வரிசையா வந்து, ஆசீர்வதிச்சுட்டுப் போங்க ப்ளீஸ்’னு நான் சொல்ல, கைதட்டி சிரிச்ச சீனியர்ஸ் எல்லாரும் நான் சொன்ன மெத்தட்லயே ஆசீர்வாதம் பண்ணிட்டுப் போனாங்க!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism